38வது வருட புகாரீ ஷரீப் மஜ்லிஸ் ஆரம்பம்

April 18, 2015
இமாதுமுல் முஹத்திதீன், ஹதீஸ் கலை மாமேதை அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இஸ்மாயீல் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட புனித ஷஹீஹுல் புகாரீ ஷரீபில் இடம்பெற்ற பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 38வது வருட புகாரீ மஜ்லிஸ் 16.04.2015  (வியாழக்கிழமை) அன்று அஸ்ர் தொழுகையின் பின் திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

தொடர்ச்சியாக ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையைத் தொடர்ந்து ஹதீஸ்களை வாசிக்கும் மஜ்லிஸ் ஆரம்பமாகி இஷா தொழுகை வரை நடைபெறும். இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து அன்று வாசிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு விளக்கத்தையும், விரிவுரைகளையும் கண்ணியமிக்க உலமாக்களால் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும்.
நடைமுறை வாழ்க்கைக்குப் பயன் தரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன் மொழிகளை வாசித்தும், கேட்டும் தங்கள் வாழ்க்கையிலும் அதை எடுத்து நடப்பதற்கு இப்புனித மஜ்லிஸ் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கி்ன்றோம்.
காத்தான்குடி பிரதேசத்தில் இருக்கின்ற பிரபல்யமாக பள்ளிவாயல்களில் வருடா வருடம் நடைபெறும் புகாரீ மஜ்லிஸ்கள் இம்முறையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

You may also like

Leave a Comment