39வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்.

April 6, 2016
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன் மொழிகள் அடங்கிய “ஸஹீஹுல் புகாரீ” ஷரீப் பாராயண மஜ்லிஸ் 05.04.2016 செவ்வாய்க்கிழமை அஸ்ர் தொழுகையின் பின் திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.
தொடர்ந்து 30 தினங்களுக்கு அஸர் தொழுகையின் பின் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகி மஃரிப் தொழுகைக்காக இடை நிறுத்தப்பட்டு மஃரிப் தொழுகையின் பின் மீண்டும் ஆரம்பமாகி இஷா தொழுகைக்கான அதான் வரை மஜ்லிஸ் நிகழ்வுகள் நடைபெறும். இஷா தொழுகையின் பின் அன்று வாசிக்கப்பட்ட ஹதீதுகளுக்கான விளக்கங்களை சங்கைக்குரிய உலமாஉகளால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இரவு 09.00 மணியுடன் நிகழ்வுகள் யாவும் ஸலவாதுடன் நிறைவு பெறும்.

இப்புனிதமிகு மஜ்லிஸ் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற வருமாறு அன்பாய் அழைக்கிறோம்.

நன்றி

You may also like

Leave a Comment