41வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமும், 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அலுவலகத் திறப்பு விழாவும்

March 16, 2018

றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 15.03.2018 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

இப்புனித மஜ்லிஸ் ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 9.00 மணியளவில் நிறைவடையும். தினமும் புகாரீ ஷரீபில் இடம் பெற்ற ஹதீதுகள் வாசிக்கப்பட்டு அப்பொன் மொழிகளுக்குரிய விளக்கங்களும் உலமாஉகளால் எடுத்துரைக்கப்படும். சிறப்புமிக்க இம்மஜ்லிஸில் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட கரீப் நவாஸ் பௌண்டேஷன் அலுவலகமும் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் திறந்து வைக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment