42வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி–2019

June 27, 2019

அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 42வது வருட அருள் மிகு கந்தூரி 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பி.ப 5.30 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்கள் பேரில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய “அல்கஸீததுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதில் ஜவாதிய்யஹ்” மௌலிதும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MJM.ஜஹானீ றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டு தொடர்ந்து பாடகர்களான MH. ஹபீஸ் ஹக்கானீ, MHM.ஹம்ஸா ஆகியோரினால் இரங்கல் கீதம் பாடப்பட்டது.

இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment