ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அனனவர்களின் 71வது பிறந்த தின நிகழ்வு

February 7, 2015
அல்ஆலிமுல் பாழில், ஈலத்தின் சொற்கொண்டல், ஷம்ஸுல் உலமா அஷ்ஷெய்ஹ், அல்லாமா, மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ நாயகம் அன்னவர்களின் 71வது வயது பூர்த்தி செய்வதை முன்னிட்டு காதிரிய்யஹ் திருச்சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு”ம் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும் கடந்த 05.02.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸுடன் ஆரம்பமாகி இஷாத் தொழுகைக்குரிய அதான் வரை றாதிப் மஜ்லிஸ் நடைபெற்றது. இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் சிறிது நேர உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஷம்ஸ் மீடியா யுனிட்  நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் எழுதிய “ஞானத் திங்கள் அப்துர் றஊப் நாயகம் வாழ்த்துப்பா” எனும் அழகிய வாழ்த்துப்பாடல் சபையை அலங்கரித்தது.
அதனை அடுத்து சமூக நிறுவனங்களினாலும், அன்னாரின் முஹிப்பீன்களாலும், முரீதீன்களாலும் அவர்களுக்காக நினைவுச்சின்னங்கள், பொன்னாடைகள், கவிதைப் பிரசுரங்கள், கைக்கீறு ஓவியம், மலர் மாலை போன்ற அன்பளிப்புக்கள் புன்னகை பூத்த திஙகள் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பொற்கரங்களுக்கு சமர்ப்பி்க்கப்பட்டது.
இறுதியாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வழித்தோன்றல்களி்ல் ஒருவரான அஸ்ஸெய்யித்  அஹ்மத் மௌலானா அன்னவர்களால் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுளுக்காக துஆப் பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து சமைத்த சோறும், கறியும் தபர்றுக்காக விநியோகம் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.
யாஅல்லாஹ்! உன்னை அறிய வைத்த எங்கள் கண்மணி, கல்பிருள் நீக்கிய கோமான், ஞானரெத்தினம் ஆரிபுபில்லாஹ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் வாழ்நாளை ஷரீர சுகத்துடனும் நீடிய ஆயுளுடனும் நீளமாக்கி வைப்பாயாக.
ஆமீன்

You may also like

Leave a Comment