72வது சுதந்திர தின நிகழ்வு

February 6, 2020

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் 04.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்  சுதந்திர நிகழ்வும், தேசத்தை பசுமையாக்குவோம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தில் பொதுமக்களுக்கான மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தேசிய கொடி ஏற்றமும், அதனைத் தொடர்ந்து கிறாஅத், வரவேற்புரை, அதிதி உரை, சிறார்களின் சிறப்புப் பாடல், கவிதை, நாட்டின் சமாதானம், சகோதரத்துவம், சுபீட்சம் வேண்டியும், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், இலங்கை அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் நலன் வேண்டியும் விஷேட துஆப்பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.    

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைப்பிரிவின் முக்கிய அதிகாரிகளும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் தவிசாளர் அஷ்ஷெய்க் மௌலவீ  அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அன்னவர்களும், காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் J.P அவர்களும், மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் MIM. நஸீம் J.P அவர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உலமாஉகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 

You may also like

Leave a Comment