Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் எம்முடனும், ஏனைய சிருஷ்டிகளுடனும் தனது “தாத்” உள்ளமையோடு இருக்கின்றான் என்று நம்புதல் கடமையாகும்.

அல்லாஹ் எம்முடனும், ஏனைய சிருஷ்டிகளுடனும் தனது “தாத்” உள்ளமையோடு இருக்கின்றான் என்று நம்புதல் கடமையாகும்.

அஷ்ஷெய்கு இப்றாஹீம் மவாஹீபீ அஷ்ஷாதுலீ அவர்கள், அல்லாஹ் நம்மோடு தனது “தாத்” உள்ளமையோடும், “ஸிபாத்” என்ற தன்மைகளோடுமே உள்ளான் என்றும், இதற்கு ஆதாரம் “அல்லாஹ் உங்களோடு உள்ளான்” என்ற வசனமேயாகும் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ் என்ற பெயர்ச் சொல் அவனின் “தாத்” உள்ளமையின் பெயர் என்பது அறியப்பட்ட விடயமாகையால் அல்லாஹ் தனது உள்ளமையான “தாத்” உடனேயே உள்ளான் என்று நம்புதல் – விசுவாசம் கொள்ளுதல் – அவசியமாகும். இந்த உண்மை சுருதிப் பிரமாணங்கள் கொண்டும், யுக்திப் பிரமாணங்கள் கொண்டும் நிறுவப்பட்ட விடயாமதலால் புத்தி அடிப்படையிலும், அனுபவ அடிப்படையிலும் இவ்வாறே நம்புதல் வேண்டும்.

அல்லாமஹ் கஸ்வீனீ அவர்கள் “அகாயிதுன் நஸபீ” என்ற நூலின் விரிவுரையில் “அல்லாஹ் தனது அறிவு கொண்டும், சக்தி கொண்டும், நிர்வாகம் கொண்டுமே எல்லா இடங்களிலும் உள்ளான்” என்று முஃதஸிலஹ்களும், புகாரஹ்வைச் சேர்ந்த அதிகமானவர்களும் சொல்வது வீணான பேச்சாகும் என்று கூறியுள்ளார்கள்.
“நாங்கள் – நான் – உங்களை விட அவனுக்கு – நோயாளிக்கு – மிக நெருங்கியுள்ளேன். எனினும் நீங்கள் பார்க்காமல் உள்ளீர்கள்” என்ற அல்லாஹ்வின் பேச்சுக்கு ஷெய்குல் இஸ்லாம் இப்னுல்லப்பான் அவர்கள் பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள். “இத்திரு வசனத்தில் அல்லாஹ் தனது அடியானுக்கு எதார்த்தமாகவே நெருங்கியுள்ளான் என்பதற்கு ஆதாரம் உண்டு. அவனுக்கு இடம் என்பது இல்லையாதலால் அதற்கேற்ற மாதிரி நெருங்கியுள்ளான். அல்லாஹ் தனது அடியானுக்கு தனது அறிவு கொண்டும், சக்தி கொண்டும், நிர்வாகம் கொண்டுமே நெருங்கியுள்ளான் (தாத்து கொண்டல்ல) என்றிருந்தால் நீங்கள் அவனை அறிந்து கொள்ளமாட்டீர்கள் என்றுதான் சொல்லியிருப்பான். ஆனால் நீங்கள் அவனைப் பார்க்காமல் உள்ளீர்கள் என்று சொல்லியிருப்பதால் அது கண் பார்வையால் பார்க்கும் நெருக்கம் என்பது தெளிவாகிறது. இதற்கு நம்மில் உள்ள திரையை அல்லாஹ் நீக்க வேண்டும். கண் பார்வை கொண்டு கருத்தோடு சம்பந்தப்பட்ட தன்மைகளை பார்க்க முடியாதென்பதும், கண்ணால் பார்க்கக் கூடியவற்றை மட்டுமே பார்க்க முடியும் என்பதும் அனைவரும் அறிந்ததேயாகும்”.
இன்னும் ஷெய்குல் இஸ்லாம் இப்னுல் லப்பான் அவர்கள், “நாங்கள் – நான் – மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பை விட நெருங்கியுள்ளேன்” என்ற திருவசனத்தின் விளக்கமும் மேற்கண்ட விளக்கம் போன்றதே என்றும் கூறியுள்ளார்கள். “ஸிபாத்” என்ற தன்மைகள் நெருங்கியிருப்பதற்கும்” பிடரி நரம்பு நெருங்கியிருப்பதற்கும் வித்தியாசமுண்டு. தன்மைகள் நெருங்கியிருப்பதானது கருத்தோடு தொடர்புள்ளதாகும். பிடரி நரம்பு நெருங்கியிருப்பதானது புலனோடு தொடர்புள்ளதாகும். அல்லாஹ் பிடரி நரம்பை விட நெருங்கியுள்ளான் என்று  கூறப்பட்டுள்ளதால் அவன் தனது “தாத்” உள்ளமை கொண்டே நெருங்கியுள்ளான்.
ஆதாரம் – அல் யவாகீத் வல் ஜவாஹிர்
பாகம் 01, பக்கம் 60,61
நூலாசிரியர் – அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ
++++++++++++++++++++++
 
(الإعتقاد بأنّ الله معنا ومع كلّ خلق  بذاته واجب)
 
قال الشيخ إبراهيم المواهبي الشاذلي ” الله معنا بذاته وصفاته “  والدّليل على ذلك قوله تعالى ”والله معكم “  وقوله ” وهو معكم “  ، ومعلوم أنّ الله عَلَمٌ على الذّات. فيجب اعتقاد المعيّة الذّاتيّة ذوقا وعقلا ، لثبوتها نقلا وعقلا ،
 
قال العلّامة الغزويني في شرح عقائد النّسفي ” أنّ قول المعتزلة وجمهور البخاريّة أنّ الحقّ تعالى بكلّ مكان بعلمه وقدرته وتدبيره دون ذاته باطلٌ ، 
 
قال شيخ الإسلام ابن اللّبّان في قوله تعالى ” ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون“، إنّ في هذه الآية دليلا على أقربيّته تعالى من عبده قربا حقيقيّا كما يليق بذاته لتعاليه عن المكان ، إذ لو كان المراد بقربه تعالى من عبده قُربَه بالعلم أو بالقدرة أو بالتّدبير مثلا لقال ولكن لا تعلمون ونحوه،  فلمّا قال ” ولكن لا تبصرون “ دلّ على أنّ المراد به القربُ الحقيقيّ المُدرك بالبصر لو كشف الله عن بصرنا ، فإنّ من المعلوم أنّ البصر لا تعلّق لإدراكه بالصّفات المعنويّة، وإنّما يتعلّق بالحقائق المرئيّة، 
 
وقال وكذلك القول في قوله تعالى ” ونحن أقرب اليه من حبل الوريد “ هو يدلّ أيضا على ما قلناه، لأنّ أفعل من يدلّ على الإشتراك في اسم القرب وإن اختلف الكيف، ولا اشتراك بين قرب الصّفات وقرب حبل الوريد، لأنّ قرب الصفات معنويّ وقربَ حبل الوريد حسيّ ، ففي نسبة أقربيّته تعالى إلى الإنسان من حبل الوريد الّذي هو حقيقيّ، أي بالّذات اللّازم لها الصّفاتُ، 
 
(وهذه النقول مختصرة من اليواقيت والجواهر ، الجزءالأوّل  ، ص – 61-60  )
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments