ஐஸ்கட்டியும், தண்ணீரும்

March 3, 2015
قال
الشيخ عبد الكريم الجيلي رحمه الله!

وَمَا
الْخَلْقُ فِيْ التَّمْثِيْلِ اِلاَّ كَثَلْجَةٍ
وَاَنْتَ
بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعٌ
وَلَكِنْ
بِذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ
وَيُوْضَعُ
اِسْمُ الْمَاءِ وَالْاَمْرُ وَاقِعٌ
மேற்கண்ட கவியில் “இன்ஸான் காமில்” நூலாசிரியர் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
         அல்லாஹ்வின் படைப்பு ஐஸ்கட்டி போன்றும்,
அல்லாஹ் அதிலுள்ள நீர் போன்றவனுமாவான்.
          ஐஸ்கட்டி கரைந்தால் அந்தப் பெயரும், அதன் தன்மையும் இல்லாமற் போய்விடும். நீர் என்ற பெயர் அதற்கு வந்து விடும்.
              ஐஸ்கட்டி என்பது நீரின் ஒரு உருவமேயன்றி எதார்த்தத்தில் ஐஸ்கட்டி என்று ஒன்றில்லை. நீரேதான் ஐஸ்கட்டியின் உருவத்தில் தோற்றுகிறது.
             இவ்வாறுதான் சிருஷ்டியாகும். எதார்த்தத்தில் சிருஷ்டி என்று ஒன்றில்லை. அல்லாஹ்தான் சிருஷ்டியின் உருவத்தில் தோற்றுகிறான்.
          எனவே நீரைத்தவிர வேறொன்றும் இல்லை என்பது போல் அல்லாஹ்தவிர வேறொன்றும் இல்லை என்று அறிவதும், நம்புவதுமே சரியான “ஈமான்” நம்பிக்கையாகும்.
              இதற்கு மாறாக ஒருவன் நம்பினால் ஸுபிகளிடம் அவனின் நம்பிக்கை பிழையானதாகிவிடும்.
         “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருவசனம் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
ஸாஹே ஸறன்தீப்

You may also like

Leave a Comment