Friday, April 19, 2024

பருந்து

இப்பறவை
பறவைகளின் தலைவன் என்று சொல்லப்படும். பறவைகளில் அதி வேகமாக பறப்பது பருந்துதான். இது
ஒரே நாளில் கிழக்கில் இருந்து மேற்கிற்கு செல்லும் வல்லமை உள்ளது. காட்டில் வாழும்
யானைக் குட்டிகளைக் கூட இறாஞ்சிக் கொண்டு பறந்து செல்லும். அதன் காலின் சக்தி மிக அபாரமானது. 

இப்பறவை பறவைகளிலேயே அற்புதமானது. இது போன்று நுகரும் சக்தியுள்ள பறவை எதுவுமில்லை.
சுமார் 400 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு பிணத்தின் வாடையைக் கூட நுகரும் சக்தி இதற்கு
உண்டு. காட்டில் பறவைகள் கூட்டம் ஒரு பிணத்தை சாப்பிடுவதை ஆகாயத்திலிருந்து கண்டால்
அந்த இடத்திற்கு கண் இமைப்பதற்குள் வந்து விடும். அது இறங்கும் போது ஒரு விமானம் இறங்குவது
போல் தெரியும். குறித்த இடத்திற்கு வந்தால் ஏனைய பறவைகள் பயந்து நடுங்கி அது தனியாக
சாப்பிட்டு முடியும் வரை ஏனைய பறவைகள் ஒதுங்கி ஓரமாக நிற்கும். 
பருந்து சாப்பிட்டால்
தன்னால் பறக்க முடியாத அளவு அதிகமாகச் சாப்பிடும்.
பருந்தை பிடிப்பதற்கு இதுவே பொருத்தமான நேரம். இந்நேரம் உடற்பலமற்ற ஒரு வயோதிபனால்
கூட இதைப் பிடித்து விடலாம்.
இது
முட்டையிட்டால் “தல்ப்” என்ற ஒரு வகை இலைகளைக் கொண்டு வந்து முட்டை மேல் வைத்து விடும்.
மனிதா்களால் கண்டு கொள்ள முடியாத உயரமான இடங்களிலேயே முட்டையிடும். இது ஏனைய பறவைகள்
போல் முட்டை மீது தனது சூட்டை செலுத்திக் குஞ்சு பொரிக்காது. எனினும் சூரிய வெப்பம்
முட்டையில் விழும் வகையில் அதை விட்டு வைக்கும். சூரிய வெப்பம் மூலம் குஞ்சுகள் வெளியாகும்.
இப்பறவைக்கு
நறுமணம் பிடிக்காது. நறு மணத்தை நுகா்ந்தால் அக்கணமே அது இறந்து விடும். (இதனால்தானோ
என்னவோ அது உயரப் பறக்கின்றது.) இது தனது தோழனைப் பிரிந்தால் – அல்லது இழந்தால் ஏனையவைகளை
விட அதிகம் கவலை கொள்ளும். சில சமயம் கவலையால் இறந்து விடும்.
இப்பறவையில்
ஆணுக்கு “நஸ்ர்” என்றும், பெண்ணுக்கு “உம்மு கஷ்அம்” என்றும் சொல்லப்படும்.
ஒரு
சமயம் ஜிப்ரீல் (அலை) அவா்கள் என்னிடம் வந்து, (முஹம்மதே!ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவன்
உண்டு. ஆதம் (அலை) அவா்கள் மனிதா்களின் தலைவா். அவரின் பிள்ளைகளின் தலைவா் நீங்கள்.
“றூம்” நாட்டின் தலைவன் “ஸுஹைப்”, பாரசீகத்தின் தலைவா் ஸல்மான், கறுப்பு இன தலைவா்
பிலால், மாதங்களின் தலைவா் றமழான், நாட்களின் தலைவா் வெள்ளிக்கிழமை, மொழிகளின் தலைவா்
அறபுமொழி (அல்குர்ஆன்), திருக்குர்ஆனின் தலைவா் “ஸுறா பகறா” “பகறா” அத்தியாயம்) என்று
கூறினார்கள். (பருந்து பறவைகளின் தலைவா்)
“பருந்து”
பாரசீக மொழியில் “கா்கஸ்” என்று அழைக்கப்படும். இது சுமார் ஆயிரம் வருடம் உயிர் வாழும்.
வௌவால் தனது முட்டையை குடிக்காமல் இருப்பதற்காக அதை “தல்ப்” என்ற இலைகளால் மறைத்து
வைக்கும்.
“பருந்து”
முட்டையிடும் வேளையில் மிகக் கடினமான வேதனையை அனுபவிக்கும். அதன் வேதனைனை குறைப்பதற்காக
ஆண் பருந்து எந்த நாட்டில் இருந்தாலும் இந்திய நாட்டுக்கு வந்து சில மலைகளில் கிடைக்கும்
ஒரு கல்லை எடுத்து வந்து பெண் பருந்தின் அடிப்பக்கம் வைத்து விடும். இதன் மூலம் அதன்
வலி குறைந்து விடும்.
பருந்து
நோயுற்றால் மனித மாமிசத்தை சாப்பிட்டு சுகம் பெற்று விடும். மனித மாமிசம் அதற்கு மருந்தாகும்.
அதன் கண் பார்வை குறைந்தால் மனிதனின் “பித்தை” எடுத்து கண்ணில் தடவி சுகம் பெறும்.
பருந்துக்கும் மணத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அதன் முழு வாழ்வும் பிணம்
சாப்பிடுவதிலும், துா் நாற்றத்தை நுகா்வதிலுமேயே கழியும். யுத்தம் செய்வதற்காக ஒரு
படை அணி வெளியானால் ஆகாயத்தில் அதை நோட்டமிட்ட நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.
பிணம் உண்பதற்காகவேயன்றி பாதுகாப்பிற்காக அல்ல.
(அஜாயிபுல்
மக்லூகாத்-பக்கம் – 290-291)

அல்லாஹ்வின்
எந்த ஓா் படைப்பை ஆய்வு செய்தாலும் அதன் மூலம் அவனின் அபார சக்தியையும் வல்லமையையும்
அறிந்து கொள்ள முடியும்.
எந்த
ஓா் படைப்பாயினும் அது அவனின் “வுஜுத்” உள்ளமைக்கு வேறானதாக இருக்காது. யாவுக்கும்
“கரு” அவனின் வுஜுதே!
கொப்பு வித்தினுள்ளே
குடியிருந்த கொள்ளை

என எப் பொருட்கும் சித்தாய்
இருந்தாய் மனோன் மணியே!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments