Tuesday, April 23, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மௌலித் ஓதுவோம் வாருங்கள்

மௌலித் ஓதுவோம் வாருங்கள்

ஆக்கியோன் மர்ஹூம் சங்கைக்குரிய
மௌலவீ MSM பாறூக் காதிரீஅவர்கள்
الحمد لله رب العالمين اتم علي اهل الإيمان نعمته بنعمته, وارسل لهم رحمته برحمته وبعث لهم نوره بنوره..سبحانه من إله عظيم رافع ذكرالنبي ومجله. وقاهر شائعه ومذله. اختار نبيه من صفوة صفوة الخلق فكأنّ الكل قد خلقوا من اجله هوالذي ارسل رسوله بالهدى ودين الحق ليِظهره على الدين كله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى عترته الطاهر وسائر اهله ومن دعا بدعوته واستن بسنته وجعل طاعةالله وحب رسوله غايته شغله.
அகிலத்தின் அருட்கொடையாக விளங்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றியும் அல்லாஹ்வின் அன்பர்களான அவ்லியாக்கள் பற்றியும் புகழ்மாலைகள் பாடுதல் மௌலிது ஓதுதல் ஷிர்க் என்றும் பித்அத் என்றும் விவாதங்களும் சர்சைகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் புனித மௌலிதுஷரீப் ஓதுதல் இஸ்லாத்தில் வரவேற்க்கப்பட வேண்டியது என்பதை அல்குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ,கியாஸ் என்ற இஸ்லாத்தின் நான்கு மூலாதாரங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு இக்கட்டுரையின் மூலம் நிரூபிக்க விரும்புகிறேன்.
புனித மௌலிது ஷரீப் நபிகளார் பற்றி எடுத்தியம்பும் திருக்குர்ஆனைின் வசனங்களையும் அவர்கள் வர்ணனை பற்றியும் பொன்மொழிகளையும் அவர்கள் பற்றிய வாழ்கை வரலாறுகளையும் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களையும் அவர்கள் மீது சொரியும் ஸலவாத்துக்களையும் புகழ்ப்பாடல்களையும் பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியதாகும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஒருபோதும் இஸ்லாத்தின் மூலாதாரத்தின் மாறுபட்டதாக அமைந்துவிடமாட்டாது.
முதன்முதலில் மாபெரும் கூட்டமொன்றைத்திரட்டி நபிகளாரின் புகழ்பற்றிப் பேசியவன் அல்லாஹ் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
திருகுர்ஆனில் சூறா ஆலஇம்ரான் 81ம் வசனத்தில் அல்லாஹ் இது பற்றி குறிப்பிடுவதை வாசகர்க ள்கவனத்தில் கொள்வீர்களாக!
அவ்வசனத்தில் விளக்கம் பின்வருமாறு-
ஆலமுல் அர்வாஹ் என்னும் ஆத்ம உலகத்தில் 1,24,000 நபிமார்களையும் அல்லாஹ் ஒன்று திரட்டி நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொண்டு விசுவாசம் கொள்ளவேண்டும்மென்றும் உலகமக்களுக்கு அவர்கள் பற்றிய சிறப்புகளை எடுத்துக்கூறுவதன் மூலம் அவர்களுக்கு உதவி புரியவேண்டும்மென்று அல்லாஹ் அவர்களிடம் ஓர் உடன்படிக்கை செய்தான்.
நபிமார்கள் அனைவரும் அந்த உடன்படிக்கையை ஏற்று நபிகளைாரைக் கொண்டு விசுவாசம் கொள்வதாகவும் அவர்களின் சிறப்புக்களை உலகமக்களுக்கு எடுத்துக்கூறுவதாகவும் இறைவனிடம் வாக்களித்தனர்.
மேற்குறித்த இந்த இறைவசனத்தில் இருந்து நபிகளாரின் புகழை முதன்முதலில் பாடியவன் அல்லாஹ்தான் என்பது நமக்கு நன்கு புலனாகின்றது.
நபிகளார் மீது புகழ்பாடுவதென்பது சாதாரன விடயமல்ல. ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில் lபல இடங்களில் நபிகளாரின் புகழ் பற்றிப் பேசி இருக்கிறான்.
வள்ளுஹா, அலம் நஷ்ரஹ், அல்கௌதர், அல் பத்ஹ், போன்ற சூறாக்கள் இவைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
சூறா பகராவில் “வத்குறூ நிஃமதல்லாஹி அலைக்கும்” இறைவன் உங்களுக்கு செய்த அருள்களை எடுத்தியம்புங்கள். என்ற இறை கூற்றின்படி, அல்லாஹுத்தஆலா எமக்கு செய்த அருள்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மாபெரும் அருளாக இருப்பதால் அவர்கள் பற்றி பேசுவது எம்மீது தலையாய கடமையாகும். இந்த அடிப்படையில் தான் நம்முன்னோர்களான இமாம்கள், இறைநேசர்கள் றசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது பேரன்புகொண்டு மௌலிதுகளை இயற்றி ஓதிவந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் புகழ்ந்திருப்பது போல் நபிகளாருக்கு முன்வந்த நபிமார்களும் அவர்களை புகழ்ந்துள்ளனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக, நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களின் சமூகத்தினருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றி எடுத்துக்கூறியதை அல்லாஹ் அவனது அருள்மறையாம் திருமறையில் பின் வருமாறு குறிப்பிடுகின்றான்.
மர்யம் உடைய மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பனீ இஸ்ராயீல்களே! நான் உங்களுக்கு அல்லாஹ்வால் அனுப்பபட்ட தூ​தராக இருக்கின்றேன். என்முன்னால் இருக்கின்ற தௌறாத் வேதத்தை உண்மைப்படுத்துகின்றேன். அஹ்மத் என்ற நாமத்தையுடைய எனக்கு பின்வருகின்ற ஒரு தூதரின் வருகையை கொண்டு உங்களுக்கு நான் சுபசெய்தி சொல்பவனாகவும் இருக்கின்றேன். என்று கூறியதை நபியே! நீங்கள் நினைத்துப்பாருங்கள்.
(சூறாஅஸ்ஸப்- 06)
திருக்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட வேதங்களில் நபிகளாருடைய புகழ் கூறப்பட்டிருப்பதாக அல்லாஹ் சூறாஅஃறாப்-157ம் வசனத்தில் கூறியிருப்பதோடு முன்னைய வேதங்களில் கூறப்பட்டுள்ள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய புகழை மக்களிடையே எடுத்துக்கூறாது மறைத்துக்கொண்டிருந்த பாதிரி மார்களையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் சூறாபகறா-159வது வசனத்தில் பின்வருமாறு கண்டிக்கிறான்.
நாங்கள் இறக்கிவைத்த பகிரங்க விடயங்களான றசூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் வர்ணனைகளை (தௌறாத்தில்) மக்களுக்கு எடுத்துக்கூறாது மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை புகழக்கூடாது என்று கூறுபவர்கள் அவர்களின் சிறப்புபற்றி அண்ணலார் அவர்களே புகழ்ந்திருப்பதை சிந்தித்துப்பார்க்க ஈவண்டும். அது அவர்களின் கடமையும்கூட.
(தொடரும்….)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments