Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கோமான் நபீயின் ஒழுக்கங்களும் நடைமுறைகளும்

கோமான் நபீயின் ஒழுக்கங்களும் நடைமுறைகளும்

மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள்
பெருமானாரின் பேசும் ஒழுக்கங்கள்
நபீயவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்திபேசுவார்கள். கேட்பவர்கள் மிகஎளிதாக அதை மனனம் செய்துகொள்ளமுடியும். யாரும் நபீயவர்களின் வார்த்தைகளை எண்ணிவிடவிரும்பினால் எண்ணிவிடும் அளவுக்கு நிதானமாகப் பேசுவார்கள்.
நபீயவர்கள் தங்கள் தோழர்கள் மனனம் செய்துகொள்வதற்காக முக்கியமான விடயங்களை மூன்று மூன்று தடவை கூறுவார்கள்.
சபைகளில் தெளிவாகச் சொல்லமுடியாத விடயங்களை மறைமுகமாகக் கூறுவார்கள்.
சில விடயங்களை மிகவும் வலியுறுத்திக் கூறுவதாகயிருந்தால் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாலும் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வார்கள்.
உரையாடும்போ மலர்ந்த முகத்துடனும் எழில் மிகு புன்னகையுடனும் உரையாடுவார்கள்.
நபீயவர்கள் மக்களை எச்சரிக்கும் படியான விடயங்களை பேசும் போது சில நேரங்களில் தனது புனித மிகுகையை தரையில் தட்டுவார்கள்.
நபீயவர்கள் பேசும்போது எதையாவது சுட்டிக்காட்ட விரும்பினால் முழுமையாக கையைக் கொண்டும் சுட்டிக்காட்டுவார்கள். விரலைக்கொண்டு சுட்டிக்காட்டமாட்டார்கள்.
 பேச்சுக்கு இடையில் ஆச்சரியமான செய்திகள் வரும் போது தங்களின் புனித கையைப் புரட்டுவார்கள். சில நேரங்களில் வலது உள்ளங்கையைக் கொண்டு இடது உள்ளங்கையின் பெருவிரல் பகுதியைத் தட்டுவார்கள். சில நேரங்களில் ஆச்சரியத்தின்போது கையை தொடையில் தட்டுவார்கள். சில நேரங்களில் தலையை மெதுவாக அசைப்பார்கள். இன்னும் சில நேரங்களில் உதடுகளை தனது புனித மிகுபற்களால் கடிப்பார்கள்.
தங்கள்கைகளையும்விரல்களையும்பயன்படுத்தியும்விடயங்களைவிளக்குவார்கள்.உதாரணமாகஇருவர்ஒன்றாகஇருப்பதைக்குறிக்கும்போதுஇரண்டுவிரல்களைச்சேர்த்துக்காண்பிப்பார்கள்.உறுதியைக்காட்டும்போதுஇரண்டுவிரல்களையும்கோர்த்துக்காண்பிப்பார்கள்.
நபீயவர்கள் மக்களுக்கு உரைநிகழ்த்திய முறைகள்
நபீயவர்கள் உரை நிகழ்த்தும் போது தனது ஊன்று கோலில் சாய்ந்து கொள்வார்கள்.,
போர்க்களத்தில் உரையாற்றும் போது ஈட்டியை ஊன்றி நின்று கொள்வார்கள்.
உபதேசம் செய்யும்போது வலதுபக்கமும் இடதுபக்கமும் முழு உடம்புடன் திரும்புவார்கள்.உதாரணம் காட்டும் போது தங்களின் புனித கையை அசைப்பார்கள்.
 நபீயவர்கள் மிம்பர் மேடையின் மீது நின்றுகொண்டு உரையாற்றுவார்கள். இன்னும் சில நேரங்களில் வாகனத்தில் நின்று கொண்டு உரையாற்றுவார்கள். இன்னும் சில நேரங்களில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
மிகுதமாகஒவ்வொருதொழுகைக்குப்பின்னும்சுருக்கமாகஅறிவுரைகள்கூறுவார்கள்.ஆயினும்சுப்ஹ்தொழுகையின்பின்னால்நீண்டநேரம்அமர்ந்துஅறிவுரைவழங்குவார்கள்.
பொதுமக்களின்பிரயோசனத்திற்காகசிலநேரங்களில்எல்லோரையும்ஒன்றுதிரட்டிஅறிவுரைவழங்குவார்கள்.
 சொற்பொழிவின் இடையில் ஒரு விடயத்தை வலியுறுத்த விரும்பினால் ”என் உயிர் யார் கைவசம் இருக்கின்றதோ அந்த இறைவன்மீது சத்தியமாக” எனசத்தியமிட்டுக்கூறுவார்கள்.
மக்கள்சடையாமல்இருப்பதற்காகசிலநாட்கள்இடைவெளிவிட்டுஉபதேசம்செய்வார்கள்.
சில நேரங்களில் இந்த வாரத்தில் இன்ன நாள் என்று முன்பே அறிவித்து விடுவார்கள்.
நபீயவர்களின் தும்மும் நடைமுறைகள்
நபீயவர்கள் தும்மினால் மிகவும் சிறிய குரலில் தும்முவார்கள்.
தும்மினால் வாயை ஒருதுணியைக் கொண்டு அல்லது கையைக் கொண்டு மறைத்துக் கொள்வார்கள்.
நபீயவர்கள் தும்மியவுடன் ”அல்ஹம்துலில்லாஹ்” எனக்கூறுவார்கள்.
பிறர் தும்மினால் தும்மியவர் ”அல்ஹம்துலில்லாஹ்” என்று சொன்னால் ”யர்ஹமுகல்லாஹ்” என்று பதில் கூறுவார்கள்.
ஒருவர் அடிக்கடி தும்மினால் இரண்டு முறை பதில் கூறுவார்கள். அதற்கு பின் மூன்றாவது முறைதும்மினால் அன்பருக்கு ஐலதோசம் பிடித்திருக்கிறது எனக்கூறிவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள்.
 நபீயவர்களின் தும்மலுக் யாரும் ”யர்ஹமுகல்லாஹ்” என்று பதில் கூறினால்
يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ  என துஆச் செய்வார்கள்.
 யாரும் தும்மியவுடன் ”அல்ஹம்துலில்லாஹ்“ எனக் கூறாவிட்டால் நபீயவர்கள் பதில் கூறமாட்டார்கள். இதைப்பற்றி கேட்கப்பட்டால் அவர் அல்லாஹ்வை மறந்துவிட்டார். நாமும் அவரை மறந்துவிட்டோம் எனக்கூறுவார்கள்.
 மாற்று மதத்தவர்தும்மினால் ”யஹ்தீகுமுல்லாஹ்” எனக்கூறுவார்கள்
கோமான் நபீயவர்களின் பழக்கங்கள் கழிவறை செல்லும் விடயத்தில்
நபீயவர்கள் கழிவறை சென்றால் இடதுகாலை முதலில் வைத்துநுழைவார்கள். வெளியேறும் போது வலது காலை முதலில் வைத்து வெளியேருவார்கள்.
தேவையை நிறைவேற்ற சென்றால் பிறர்பார்வையை விட்டும் மறையும்படி வெகுதுாரம் செல்வார்கள். சிலசமயம் ஊரைவிட்டு இரண்டு மைல்துாரமும் சென்று இருக்கிறார்கள்.
சிறுநீர் கழிப்பதாக இருந்தால் மிருதுவான மண்பகுதியைத் தேடிச்சென்று அமர்வார்கள். கெட்டியான தரைப்பகுதிக்கு செல்லமாட்டார்கள்.
மிருதுவான மண்பகுதி இல்லையென்றால் ஒரு குச்சியால் மண்ணைகிளறி பின்பு அமர்வார்கள்.
தேவைகளுக்காகச் செல்லும் போது காலணிகளை அணிந்து கொண்டு தலையை மறைத்துக் கொண்டு மோதிரங்களை கழற்றிவிட்டு செல்வார்கள்.
சிறுநீருக்காக அமரும் போது இரு கால்களிடையில் போதிய இடைவெளிவிட்டு கால்களை குத்தவைத்து அமர்வார்கள்.
அமரும்போது நிலத்துடன் மிகநெருக்கமாக ஆகும்வரை ஆடைகளை விலக்கமாட்டார்கள்.
நபீயவர்கள் கிப்லாவை முன்னோக்கி அல்லது பின்னோக்கி அமர்ந்து சிறுநீர் கழிக்கமாட்டார்கள்.
தேவையை நிறைவேற்றியபின் சுத்தம் செய்வதற்காக மண்கட்டிகளையும் தண்ணீரையும் கொண்டு செல்வார்கள். மண்கட்டிகள் ஒற்றை எண்ணிக்கையில் இருக்கும். (உதாரணமாக மூன்று ஐந்து போன்று)
தேவையை நிறைவேற்றி வந்தபின் இடதுகையை மண்ணில் நன்றாகத் தேய்த்துக் கொள்வார்கள்.
 கழிவறைக்குப் போகுமுன் இந்த துஆவை ஓதுவார்கள்.
«اللّهمَّإنِّيأَعوذُبكَمنَالْخُبثِوَالخبائثِ ».
கழிவறையிலிருந்து வந்தவுடன் இந்த துஆவை ஓதுவார்கள்
أَلْحَمْدُ لِلهِ الَّذِي أَذْهَبَ عَنِّيَالْاَذَى وَعَافَانِيْ

கோமான் நபீயின் பருகும், உணவுஉண்ணும் ஒழுக்கங்கள்

பெருமானார் தண்ணீர் குடித்தால் பாத்திரத்தில் வாய்வைத்து சத்தம் இல்லாமல் மெதுவாகக் குடிப்பார்கள். கடக்கடக் எனசத்தம் வரும்படி குடிக்கமாட்டார்கள்.

நபீயவர்கள் பருகும்போது பாத்திரத்தின் உள்ளே மூச்சுவிடமாட்டார்கள்.
நபீயவர்கள் தண்ணீரை மூன்று மூச்சில் குடிப்பார்கள். ஒவ்வொரு முறையும் வாயில் இருந்து பாத்திரத்தை எடுத்து மீண்டும் வாயில் வைப்பார்கள்.
தண்ணீர் மற்றும் பானங்களை எப்போதும் அமர்ந்துதான் குடிப்பார்கள். ஏதோசில நேரங்களில் ஓரிருமுறை நின்றும் குடித்துள்ளார்கள்.
இனிப்பான தண்ணீர் நபீயவர்களுக்கு மிகவும் பிரியமாக இருந்தது. தூரமான இடங்களில் இருந்து இனிப்பான தண்ணீரை வரவழைத்துக் குடிப்பார்கள்.
மனைவிமார்களிடத்தில் மிகவும் அன்புடன் பழகும் நபீயவர்கள் மனைவிமார்கள் எந்தப் பாத்திரத்தில் எந்த இடத்தில் வாயை வைத்து குடிப்பார்களோ அந்த இடத்தில் தனது புனிதவாயை வைத்துக் குடிப்பார்கள்.
பருகும் பொருட்களில் நபீயவர்களுக்கு பால் மிகவும் பிரியமாகயிருந்தது.
பாலுடன் சில வேளை குளிர்ந்த தண்ணீரைக் கலந்து பருகுவார்கள்.
நபீயவர்கள் பாலும் தேனும் கலந்த பானத்தைப் பருகமாட்டார்கள். ஒரு கோப்பையில் இரண்டு பானங்கள் எதற்காக என்பார்கள். அதாவது அதை வீண்விரயம் எனக்கருதுவார்கள்.
ஒருமுறை பாதாம் பருப்பின் கஞ்சி நபீயவர்களுக்கு கொண்டு வரப்பட்டபோது இது பணக்காரர்களின் உணவு என்று கூறி பருக மறுத்துவிட்டார்கள்.
நபீயவர்கள் ஓரிரு முறை தண்ணீர்வைக்கும் பெரிய தோல்பைகளில் இன்னும் பெரியவாளிகளில் அப்படியே வாய்வைத்துக் குடித்துள்ளார்கள்
சபைகளில்வரிசையாகபானங்களைகுடித்துவரும்போதுகோப்பையில்பானம்முடிந்துவிட்டால்மறுகோப்பைவந்தவுடன்அதேவரிசையில்விட்டவரிடம்இருந்துஆரம்பம்செய்வார்கள்.
சபைகளில் தன் தோழர்களுக்கு பருகும் பொருட்களை வழங்கினால் நபீயவர்கள் எல்லேரைவிட இறுதியாகக் குடிப்பார்கள். குடிப்பாட்டுபவர் எல்லோரைவிட கடைசியாகத்தான் குடிக்கவேண்டும் எனக்கூறுவார்கள்.
நபீயவர்கள் மண், செம்பு, மரம், பளிங்கு போன்றவற்றால் ஆன பாத்திரங்களில் தண்ணீர் பருகியிருக்கிறார்கள்.
பானங்களை அருந்துகின்ற நேரத்தில் ஒவ்வொரு முறையும் திருவாயைவைக்கும் போது بِسْمِ الله எனக்கூறுவார்கள். திருவாயை எடுத்தவுடன் أَلْحَمْدُ لِله எனக்கூறுவார்கள். கடைசியாக وَالشُّكْرُ لِله எனக் கூறுவார்கள்.
பெருமானாரின் உணவு உண்ணும் ஒழுக்கங்கள் 
நபீயவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவார்கள். 
எப்போதும் வலது கையாலேயே சாப்பிடுவார்கள். 
தட்டிலே தனக்கு முன்பக்கமிருந்தே சாப்பிடுவார்கள். 
நபீயவர்கள் எப்போதும் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதில்லை. 
சாப்பிடும்போது தொழுகையில் அமர்வது போல் கால்களை மடக்கியமர்ந்து சாப்பிடுவார்கள். அல்லது இரண்டு கால்களையும் நட்டுவைத்து அமர்ந்து சாப்பிடுவார்கள். அல்லது குந்தவைத்து இரண்டு பாதங்களையும் ஒட்டிவைத்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள். 
நபீயவர்கள் மேசை, கதிரை போட்டு ஒரு போதும் சாப்பிட்டதில்லை. கீழே விரிப்பை விரித்து அதிலே உணவுத்தட்டை வைத்து சாப்பிடுவார்கள். 
பெரும்பாலும் மூன்று விரல்களைக் கொண்டே சாப்பிடுவார்கள். அதாவது பெருவிரலையும் அதை ஒட்டிய இரண்டு விரல்களையுமே பயன்படுத்துவார்கள். உணவு இலகுவாக இருந்தால் சில நேரங்களில் அதற்கு அடுத்த விரலையும் பயன்படுத்துவார்கள். 
சாப்பிட்டபின் விரல்களை நன்றாகச் சுவைப்வார்கள். முதலில் நடுவிரலையும் அடுத்து சுட்டுவிரலையும் அடுத்து பெருவிரலையும் சுவைப்வார்கள். 
பெரியதட்டில் உணவு குவியலாக வைக்கப்பட்டிருந்தால் மேல் புறத்திலிருந்து உணவை எடுக்கமாட்டார்கள். தன்பக்கத்தின் கீழ் இருந்து எடுப்பார்கள்.உணவில் பறகத் (இறைஅருள்) நடுவில்  இருக்கிறது அது இறுதிவரை இருக்கவேண்டும் எனக்கூறுவார்கள். 
பெரியதட்டில் பலரோடு அமர்ந்து உண்ணுவார்கள். சிறிய சிறிய தட்டுக்களில் வகைவகையான உணவுகளை வைத்துக் கொண்டு செல்வந்தர்களைப் போல உண்ணுவதை விரும்பமாட்டார்கள். 
நபீயவர்கள் ஹல்வா போன்ற இனிப்புப் பண்டங்கள் இன்னும் சுரைக்காய், தேன், வெள்ளரிப்பிஞ்சு, பேரீத்தம்பழம், தர்பூசணி இவற்றை மிகவும் விரும்பி உண்பார்கள். 
இறைச்சியிலே பெருமானாருக்கு முன்சந்து, கழுத்து இன்னும் முதுகு இவற்றின் இறைச்சி மிகவும் பிரியமாகும். 
பேரீத்தம்பழத்துடன் ரொட்டி அல்லது வெள்ளரிப்பழம் அல்லது எள் இவற்றை சேர்த்துச் சாப்பிடுவார்கள். சில நேரங்களில் பேரீத்தம்பழத்துடன் தர்பூஷ் பழத்தை சேர்த்துச் சாப்பிடுவார்கள். 
ஏதாவது உணவு அவர்களுக்கு பிரியமில்லையென்றால் குறை சொல்லமாட்டார்கள். மௌனமாக இருப்பார்கள். சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள். 
நபீயவர்கள் வெங்காயம், பூண்டு இவற்றை சாப்பிடமாட்டார்கள். 
பேரீத்தம்பழம், ரொட்டித்துண்டு போன்றவை சுத்தமான இடங்களில் கீழே கிடந்தால் எடுத்து சுத்தம் செய்து சாப்பிடுவார்கள். 
மிகவும் சூடான ஆவிபறக்கும் நிலையில் உள்ள உணவுகளை உண்ணமாட்டார்கள். ஆறவைத்து உண்ணுவார்கள்.மிகவும் சூடான உணவுகளில் பறகத் (இறையருள்) இல்லை எனக்கூறியிருக்கிறார்கள். 
உணவு பொருட்களை நுகர்ந்து பார்க்கமாட்டார்கள். 
 உணவை எப்போதும் அமர்ந்துதான் சாப்பிடுவார்கள். ஆனால் பழங்கள் போன்ற பண்டங்களை சில நேரங்களில் நின்று கொண்டும் சாப்பிட்டுள்ளார்கள். 
உணவு பாத்திரங்களை எப்போதும் மூடியேவைப்பார்கள். வெறும் பாத்திரங்களையும் எப்போதும் மூடியேவைப்பார்கள். மூடுவதற்கு எதுவும் கிடைக்காவிட்டால் ஒருகுச்சியை யாவது குறுக்கே வைப்பார்கள். 
உணவுப் பொருட்களை நபீயவர்கள் வாயால் ஊதமாட்டார்கள். 
சபையிலே உணவுப் பண்டங்கள் பங்கிடும் போது வலது புறத்தில் இருப்பவர்களுக்கே முதலில் கொடுப்பார்கள். இடதுபுறத்தில் இருப்பவர்களுக்கு முதலில் கொடுக் கநாடினால் வலது புறத்தில் உள்ளவர்களிடம் அனுமதி வாங்கிக்கொள்வார்கள்.
 காலையிலே தேவையான உணவை மாலையிலே எடுத்து வைக்கமாட்டார்கள். அதேபோல மாலையிலே தேவையான உணவை காலையிலே எடுத்து வைக்கமாட்டார்கள். 
 ஆணத்தில் (குழம்பில்) கடைசியாக மீதமாவதை மிகவும் விரும்புவார்கள். சில நேரங்களில் அதை குடித்தும் விடுவார்கள். 
வீட்டுக்கு இறைச்சி வந்தால் அதிலே ஆணத்தை (குழம்பை)வைக்கச் சொல்வார்கள். அப்போதுதான் பக்கத்து வீட்டினருக்கும் கொடுக்கமுடியும் என்று கூறுவார்கள். (பொரித்தால் கொஞ்சமாகவரும் என்பதற்காக) 
சில நேரங்களில் தர்பூஷ் பழத்தை சீனியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். 
பேரீத்தம்பழம் சாப்பிட்டால் கொட்டையை இடதுகையின் நடுவிரல் சுட்டுவிரல் இந் தஇரண்டினுடைய பிற்பகுதியில் வைத்து எறிந்து விடுவார்கள். 
சில நேரங்களில் வெள்ளரிப் பிஞ்சோடு உப்பைச் சேர்த்துச் சாப்பிடுவார்கள். 
நபீயவர்களிடம் புதுவகை உணவு வந்தால் முதலில் அதன் பெயரைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதன்பின் சாப்பிடுவார்கள். 
நபீயவர்களின் உணவிலே எதிரிகள் விஷம் வைத்த நிகழ்ச்சிக்குப் பின்னால் யாராவது புதிய நபர்கள் உணவு கொண்டு வந்தால் முதலில் அவர்களை சிறிது சாப்பிடச் சொல்லி அதன்பின் தாங்கள் சாப்பிடுவார்கள். 
யாராவது விருந்துக்கு அழைத்து நபீயவர்கள் செல்லும்போது அப்போது அழைப்பில்லாத நபர் நபீயவர்களுடன் இருந்தால் விருந்து தருபவரிடம் அவருக்காக அனுமதிகேட்ட பின்பே அழைத்துச் செல்வார்கள். 
நபீயவர்கள் விருந்தளிக்கும் போது தங்கள் விருந்தாளிகளிடம் “இன்னும் சாப்பிடுங்கள் இன்னும் சாப்பிடுங்கள்” எனச் சொல்லமாட்டார்கள். 
பலருடன் உணவருந்தும் போது நபீயவர்கள்தான் இறுதியாக எழுந்திருப்பார்கள். இடையில் எழுந்தால் மற்றவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள் என்பதற்காக வேண்டுமேன்றே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவார்கள். 
 சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் சொல்வார்கள். உண்ணும் போதும் சொல்வார்கள். இவ்வாறு மூன்று கவளம் வரை சொல்வார்கள். 
யாராவது பிஸ்மி சொல்லாமல் சாப்பிட்டால் கையைப் பிடித்துக் கொண்டு பிஸ்மி சொல்லும்படி வற்புறுத்துவார்கள் 
 யாரும் இடதுகையில் உணவை எடுத்தால் கையைத் தட்டிவிடுவார்கள். வலது கையால்உண்ணும்படி கூறுவார்கள். 
சாப்பிடுவதற்குமுன் இரண்டு கைகளையும் கழுவிக்கொள்வார்கள். 
 சாப்பிட்டபின் இரண்டு கைகளையும் நன்றாகக் கழுவிக் கொள்வார்கள். கழுவியபின் ஈரத்தை முகத்திலும் கைகளிலும் தேய்த்துக் கொள்வார்கள். 
கோழி சாப்பிடவிரும்பினால் பல நாட்களுக்கு முன்பே வெளியில் அவிழ்த்து விடாமல் கட்டிப் போடச் சொல்வார்கள். அதன்பின் அறுத்துச் சாப்பிடுவார்கள் 
வெண்ணையும் பேரீத்தம் பழமும் சேர்த்து விரும்பி உண்பார்கள். 
பாலுடன் பேரீத்தம்பழம் சாப்பிடுவார்கள். இரண்டும் உயர்ந்த பொருட்கள் எனக்கூறுவார்கள். 
உணவில் முதல் கவளம் வாயில் வைத்தவுடன் 
يَا وَاسِعَ الْمَغْفِرَةِ 
(விசாலமான மன்னிக்கும் இறைவனே) எனக்கூறி உண்பார்கள். 
சாப்பாடு அருகில் வந்தவுடன் 
أَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارِ எனக்கூறுவார்கள். 
(இறைவா நீ எங்களுக்கு வழங்கியவற்றில் பறகத் செய்வாயாக இன்னும் நரக வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக) எனக்கூறுவார்கள் 
சாப்பிட்டு முடிந்தவுடன் 
اَلْحَمْدُ لِلهِ الَّذِيْ أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِميْنَ 
(எங்களுக்கு உணவும் நீரும் தந்து எங்களை முஸ்லிமாக ஆக்கிவைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) எனக்கூறுவார்கள் 
யாரும் விருந்தளித்தால் 
أَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ 
(இறைவா நீ அவர்களுக்கு வழங்கியதில் பறகத் செய்வாயாக இன்னும் அவர்களை மன்னித்து அருள் புரிவாயாக) என துஆச் செய்வார்கள். 
சாப்பாடு முடிந்து விரிப்பை எடுத்தவுடன் 
أَلْحَمْدُ لِلهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكاً فِيْهِ غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍّ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ 
என்று கூறுவார்கள். 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments