Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நோன்பின் மாண்பு

நோன்பின் மாண்பு

ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள்
நோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.

ஆயினும் அவர்களிற் சிலர் மட்டுமே நோன்பின் பின்னணித் தத்துவத்தைப் புரிந்து நோற்று வருகின்றார்கள். நோன்புக்கு அறபு மொழியில் “ஸவ்ம்” என்று சொல்லப்படும். இச்சொல்லுக்கு மொழியடிப்படையில் ஓர் அர்த்தமும், “ஷரீஅத்” அடிப்படையில் இன்னோர் அர்த்தமும் உண்டு. இச்சொல் மொழி அடிப்படையின் கண்ணோட்டத்தில் பொதுவாகத் “தடுத்தல்”என்ற அர்த்தம் தரும்.“ஷரீஅத்”மார்க்கக் கண்ணோட்டடத்தின் அடிப்படையில், இரவில் நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல் இருப்பதுடன் நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று ஷரீஅத்தில் சொல்லப்பட்டவற்றைச் செய்யாமல் இருத்தலைக் குறிக்கும்.
 
இவ்விரு அர்த்தங்களில் தடுத்தல் என்ற மொழி அர்த்தம் பற்றி முதலில் ஆராய்வோம். “தடுத்தல்” என்ற மொழி அர்த்தம் “ஸவ்ம்” என்ற சொல்லுக்கு “ஷரீஅத்” தருகின்ற அர்த்தத்தை உள்ளடக்கியதாயிருப்பதுடன் “தடுத்தல்” என்பது “அனைத்தையும் தடுத்தல்” என்பதைக் குறிக்கும். இதைத் தடுத்தல் அதைத் தடுத்தல் என்று எந்த ஒன்றையும் குறித்துக்காட்டாது. இவ்வடிப்படையில் இச்சொல், உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவு தவிர வேறு எந்த ஒரு நினைவும் வராமல் தடுத்தலையும் குறிக்கும்.
 
ஆகவே, “ஸவம்” என்ற சொல் உண்ணல், பருகல் போன்றவற்றையும், ஷரீஅத்தில் நோன்பை முறிப்பவை என்று சொல்லப்பட்டவற்றையும் தடுத்திருப்தை குறிப்பதுடன், உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவு தவிர வேறு எந்த நினைவும் வராமல் தடுத்திருப்பதையும் குறிக்கும். மேற்கண்ட கருத்தை மையமாகக் கொண்டு ஞானக்கடல் இமாம் அபூஹாமித் முஹம்மத் அல் கஸாலி (றஹ்) அவர்கள் நோன்பை மூன்று வகைகளாக வகுத்துக் கூறியுள்ளார்கள் அவை,
 
01.“ஸவ்முல் அவாம்”
 
02.“ஸவ்முல் கவாஸ்”
 
03.“ஸவ்முல் கவாஸ்ஸில் கவாஸ்”
 
“ஸவ்முல் அவாம்”என்றால்“ பொதுமக்களின் நோன்பு” என்றுபொருள். அதாவது நோன்பை முறிக்கும் காரியங்களைமட்டும் தடுத்துக்கொண்டிருத்தல் இவர்கள் இரவு நேரத்தில் நோன்புக்கான “நிய்யத்” வைத்து பகல் முழுவதும் உண்ணல், பருகல் இரண்டையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்வதுடன் ஷரீஅத் மார்க்கத்தில் நோன்பை முறிக்கும் காரியங்களென்று சொல்லப்பட்டவைகளையும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
 
மார்க்க அறிவும், இறைஞானமும் ஸுபிஸதத்துவமும் தெரியாதவர்கள் இவ்வாறுதான் நோன்பு நோற்று வருகின்றார்கள்.
 
“ஸவ்முல்கவாஸ்” என்றால்“ விஷேடமானவர்களின் நோன்பு” என்று பெருள்வரும். அதாவது நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டயாவையும் தவிர்த்துக் கொண்டிருப்பதுடன் பொய் சொல்லுதல், கோள்சொல்லுதல், பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சி சொல்லுதல், புறம்பேசுதல் முதலான பாவச்செயல்களையும் தவிர்த்துக் கொண்டிருத்தல்.
 
ஓரளவேனும் மார்க்க அறிவும், இறைஞானமும், ஸுபிஸ தத்துவமும் தெரிந்தவர்கள் இவ்வாறு நோன்பு நோற்றுவருகிறார்கள். இவ்வாறு நோன்பு நோற்பவர்கள் முஸ்லிம்களில் மிகக்குறைந்தவர்களேயாவர்.
 
“ஸவ்முகவாஸ்ஸில்கவாஸ்” என்றால் “அதிவிஷேடமானவர்களின்நோன்பு” என்றுபொருள்.
 
அதாவது நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவற்றையும், பொய்சொல்லுதல், கோள்சொல்லுதல், பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சி சொல்லுதல், புறம்பேசுதல் முதலானபாவச் செயல்களையும் தவிர்த்துக்கொள்வதுடன், அல்லாஹ்தவிர வேறெந்த எண்ணமும் உள்ளத்தில் வராமல்தடுத்து எந்நேரமும் அல்லாஹ்வின் நினைவில் இருத்தல். இவ்வாறு நோன்பு நோற்பவர்கள் நபீமார், வலீமார் போன்றோர் மட்டுமேயாவார்.
 
“ஸவ்முல்அவாம்” பொதுமக்களின் நோன்பு, நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவைற்றைச்செய்வது கொண்டுமட்டுமே முறிந்துவிடும், வீணாகிவடும். இந்தநோன்பு மேற்கண்ட ஐந்து பாவங்கள்கொண்டோ, அல்லது வேறுபாவங்கள் கொண்டோ முறிந்துவிடாது. ஆயினும்உண்ணுதல், பருகுதல் போன்றவைகொண்டும், மார்க்கத்தில் நோன்பை முறிக்கும் காரியங்களென்று கூறப்பட்டுள்ளவற்றைச்செய்வது கொண்டும் மட்டுமே முறிந்துவிடும்.
 
“ஸவ்முல்கவாஸ்” விஷேடமானவர்களின் நோன்பு, நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவற்றைச் செய்வது கொண்டும், மேற்க்கண்ட ஐந்துபாவங்களைச் செய்வது கொண்டும், அவையல்லாத ஏனைய பாவங்கள் செய்வது கொண்டும். முறிந்துவிடும். இது “தரீகத்” வழி செல்வோரின் நோன்பு. முந்தினது “ஷரீஅத்” வழி செல்வோரின் நோன்பு.
 
ஐந்துவிடயம் நோன்பை முறிக்கும். பொய்சொல்லுதல், புறம்பேசுதல்,கோள்சொல்லுதல், பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சிசொல்லுதல், என்று வந்துள்ள ஹதீது நபீமொழி “தரீகத்” அடிப்படையில் கூறப்பட்டதாகும். இது தரீகத் செல்பவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது. ஷரீஅத் அடிப்படையில் நோற்கப்பட்ட நோன்பு மேற்கண்ட ஐந்து பாவங்களில் எதைக்கொண்டும் முறிந்து விடாது. இந்தநபீமொழியை “தரீகத்” அடிப்படையில்நோக்கவேண்டுமேயன்றி “ஷரீஅத்” நிழலில்நோக்கிமேற்கண்டபாவங்கள்கொண்டுநோன்புமுறிந்துவிடுமென்றுபத்வாவழங்கிவிட்டுப்பின்னர்அவதிப்படலாகாது. இஸ்லாத்தில் “ஷரீஅத்” மட்டுமேஉண்டு. “தரீகத்” இல்லையென்போர்இந்தநபீமொழிக்கு “ஷரீஅத்” அடிப்படையில்விளக்கம்சொல்வார்களாயின்நோன்புநோற்கின்றவர்களில்99சதவீதமானோரின்நோன்புமுறிந்துவிடுமென்றுமுடிவெடுக்கவேண்டிவரும்.
 
ஏனெனில் நோன்பு நோற்றிருக்கும் ஒருவன் பொய்சத்தியம் செய்தல், பொய்சாட்சி சொல்லுதல் இவ்விரண்டையும் தவிர்த்துக்கொண்டாலும் கூடபொய்சொல்லுதல், கோள்சொல்லுதல், புறம்பேசுதல் இம்மூன்றையும் அவனால் தவிர்த்துக் கொள்வது மிகவும் கடினமாகும். அந்த அளவு இன்று வாழும்மக்களின்வாழ்வில் இவை புரையோடிப்போய்விட்டன. சங்கைக்குரிய உலமாக்களும், சற்குருக்களுமே சறுக்கி விழுந்துவிடுகின்றார்கள். பொதுமகன் எம்மாத்திரம்! இவைகொண்டு அவன் குற்றவாளியாவானேயன்றி அவனின் நோன்பு முறிந்துவிடமாட்டாது.
 
“ஸவ்முகவாஸ்ஸில்கவாஸ்” அதிவிஷேடமானவர்களின் நோன்பு, நோன்பை முறிக்கும் காரியங்களென்று மார்க்கத்தில் சொல்லப்பட்டவை கொண்டும், மேற்கண்ட ஐந்து பாவங்கள், அவையல்லாத ஏனைய பாவங்கள் கொண்டும் முறிந்துவிடுவதுடன் ஒருவினாடி நேரமேனும் அல்லாஹ்தவிர வேறுநினைவு உள்ளத்தில் ஏற்படுவது கொண்டும் முறிந்துவிடும்.
 
இது “ஹகீகத்” உடைய நோன்பு என்றும், “மஃரிபத்” உடைய நோன்பு என்றும் வழங்கப்படும். இவ்வாறு நோன்பு நோற்கும் ஆற்றலும், வல்லமையும் நபீமார்களுக்கும், அவர்களின் வாரிசுகளான வலீமார்களுக்கும், மட்டுமே உண்டு. நபீமார், வலீமார் இவ்வாறு நோன்பு நோற்கும் ஆற்றல் பெற்றவர்களாயிருந்தாலும் உலமாக்களுக்கு இவ்வாற்றல் உண்டா? அவர்களும் அவ்வாறுதான் நோன்புநோற்கின்றார்களா? என்றகேள்விக்கு இடமுண்டு.
 
இதற்கு சுருக்கமாக விடைசொல்வதாயின் அல்லாஹ் திருக்குர்ஆனிலும், நபீஸல் அவர்களின் நபீ மொழிகளிலும் அல்உலமாஉ என்பது கொண்டுயாரைக் கருதினார்களோ அவர்கள் இவ்வாற்றல் பெற்றவர்களேயாவர்.
 
இதற்கு மாறாக ஏழு வருடங்கள் அறபுக்கல்லூரியில் மொழியிலக்கணம், சொல்லிலக்கணம், சட்டம் போன்ற ஒருசில கலைகளைமட்டும் அரைகுறையாகக் கற்று மௌலவிதராதரப்பத்திரம் பெற்றுவருபவர்கள் அனைவரும் திருக்குர்ஆனிலும் நாயகவாக்கியங்களிலும் கூறப்பட்ட “அல்உலமாஉ” மார்க்க அறிஞர்களாகமாட்டார்கள்
 
மார்க்கஅறிஞர்கள் நபீமாரின் வாரிசுகள் என்ற நபீமொழியின் அடிப்படையில் “அல்உலமாஉ” என்ற சொல் நபீமார்விட்டுச் சென்றதைப் பெற்றுக் கொண்டவர்களைமட்டுமே குறிக்கும். நபீமாரின் அனந்தரம்என்பது அதாவது அவர்கள்விட்டுச்சென்றது பொதுவாக வெளிரங்கமான அறிவையும், குறிப்பாக இறைஞானத்தையும் குறிக்கும். அவர்களின் அனந்தரகாரன் வாரிசு என்பவன் பொதுவாகவெளிரங்கஅறிவும், குறிப்பாக இறைஞானமும் உள்ளவனாக இருத்தல் அவசியம்.
 
நபீமார் தங்கநாணயங்களையோ, வெள்ளிநாணயங்களையோ, கடைகள், தோட்டங்களையோ விட்டுச்செல்லவில்லை. அவர்கள் விட்டுச்சென்ற ஒரேயொருபொருள் இறைஞானம் மட்டுமேயாகும். ஆகையால் இறைஞானமில்லாதவர்கள் தம்மை உலமாக்கள், மார்க்கஅறிஞர்கள் என்று சொல்லிக்கொள்வதும், நபீமாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்வதும், திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் உலமாக்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று கூறப்பட்டிருப்பதால்தாம் கண்ணியப்படுத்தப்பட வேண்டுமென்று வாதிடுவதும், தம்மைபிறர்மதிப்பதை எதிர்பார்ப்பதும் குற்றமும் அறியாமையாகும்.
 
எனவே “கவாஸ்ஸுல்கவாஸ்” அதிவிஷேடமானவர்களில் மௌலவி தராதரப்பத்திரம் பெற்ற எல்லோரும் சேர்ந்து கொள்ளமாட்டார்கள் என்பதும், அவர்களால் அதிவிஷேடமானவர்கள் நோற்கும் நோன்பு நோற்க முடியாதென்பதும் தெளிவாகும். வலீமாரிடம் மௌலவி தராதரபத்திரம் இல்லாது போனாலும் அவர்கள் நபீமாரின் வாரிசுகள் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஏனெனில், மார்க்கஅறிவும், இறைஞானமும் இல்லாத ஒருவருக்கு “விலாயத்” ஒலித்தனம் கிடைக்காது. அவ்வாறு ஒருவரேனும் இருந்ததற்கு வரலாறே கிடையாது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments