கத்தார் நாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழா.

January 25, 2013
முழு உலகிற்கும் அருளாக வந்துதித்த எம்பெருமானார் முஹம்மதுர் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்துவம் நிறைந்த பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக கத்தார் – ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மீலாதுன் நபிப் பெருவிழா கடந்த 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. 
இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்து கத்தாரில் தொழில்புரியும் சுமார்150 ற்கும் அதிகமான சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டனர். 
அதிகாலை 3.00 மணிக்கு இஸ்லாமிய ஞாபகார்த்த சின்னமாகிய புனித கோடியேற்றத்துடன் ஆரம்பமாகிய விழாவில் மார்க்க உபந்நியாசம், பெருமானாரின் புகழ் ஓதும் மௌலீத் மஜ்லிஸ், ஸலவாத் மஜ்லிஸ், இஸ்லாமிய பாடல், முழு உலகினதும் சுபீட்சம்வேண்டி துஆ பிராத்தனை என்பன இடம்பெற்று இறுதியாக சுபுஹுத் தொழுகையுடனும் தபர்ருக் நார்சா விநியோகத்துடனும் கலை 6.30 மணியளவில் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன. 
இந்நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள்

நன்றி
ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவை 

You may also like

Leave a Comment