கத்தார் நாட்டில் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு

July 30, 2012
அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பானது இலங்கை நாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக அறப் பணிகளிலும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முனைப்போடு செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.
இவ் அமைப்பானது DSK/SS/42 இலக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இலங்கை அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒர் அங்கமாக எமது அங்கத்தவர்களால் எமது நாட்டு படைவீரர்களுக்காகவும் அரச வைத்தியசாலைகளுக்காகவும் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தவகையில் கடந்த 05/07/2012 அன்று கத்தார் நாட்டின் HAMAD MEDICAL CORPORATION அரச வைத்தியசாலைக்கான இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
குறித்த தினம் வேலை நாளாக இருந்தபோதிலும் சுமார் 50 ற்கும் மேற்பட்ட இதன் உறுப்பினர்கள் ஆர்வத்துடனும் அர்பணிப்புடனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

நன்றி
அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பு
கத்தார்

You may also like

Leave a Comment