– ஏறும் கொடியும் ஈமான் பலமும் –

May 6, 2012
ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click)
என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை
– ஏறும் கொடியும் ஈமான் பலமும் –

 

ஆழமறியாமல் காலை விட்டதேன்?
மதியன்பன் மதியிழந்ததேன்?
கவித்திலகம்

இவரது கவிதைக் கிறுக்கு
கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று
“ஜாஹில் மார்க்கம் பேசுவான்“
என்ற நபீ மொழி
இதற்குச் சான்று!

தம்புள்ள சாத்தான்
இவரது இதயத்துள்
புகுந்து கொண்டானோ…..?
அதனாற்றான் –
தர்காக்களை உடைக்க
உலமாக்களை அழைக்கிறார்.


“ஏறும் கொடியால் ஈமான் இறங்குதாம்“
என்னே இவர் கண்டுபிடிப்பு.
நாளை மறுமையில்
இவருக்கு
“லிவாஉல் ஹம்து“ கொடியின்
நிழல் கிடைக்குமோ?

அங்கே –
பேரினவாதிகள்
பள்ளிவாயலை உடைக்க
இவர் போன்றவர்தான்
முன்மாதிரியானவர்கள்
காரணம்
இவர்கள்தான்
மார்க்கம் சொல்லும்
மத்ரஸாக்களை உடைத்து
திருக்குர்ஆனை எரி்த்து
மகான்கள் வாழும்
தர்காக்களை உடைத்து
பௌத்தர்களுக்கு
பயிற்சியளித்தவர்கள்.!

இவர்
காபிர்களின் கொடிக்கும்
முஸ்லிம்களின் கொடிக்கும்
வித்தியாசம் புரியாதவர்.!

கையிலேந்திய கொடி
கீழே விழக் கூடாதென்பதற்காக
உயிர்த்தியாகம் செய்த
வீர சஹாபாக்களின்
வரலாறு தெரியாதவர்.!

புனித “லைலதுல் கத்ர்“ இரவில்
ஜிப்ரீல் தலைமையில்
மலக்குகள் கொடியோடிறங்கும்
வரலாறு படிக்காதவர்.!

ஆன்மீக ரீதியில்
வலீமார்களுக்காக
ஏற்றப்படும் கொடிகளை
ஷிர்க் என்று சொல்லும் இவர்
தேசியக் கொடி போன்ற
இலௌகீகக் கொடிகள்
ஏற்றப்படும் போது
எழுந்து நின்று
மரியாதை செய்பவர்!

ஆம்
இவரொரு
வீதி ஆர்ப்பாட்டக்காரர்.
முஸ்லிம்களிடையே
பித்னாவைத் தூண்டும்
ஒரு பறை.!

“மரணித்துப் போனவர்களால்
ஒன்றும் செய்ய முடியாது“
என்று சொல்லும் இவர்
“அதான்“ துஆ ஏன் ஓதுகிறார்?
அத்தஹி்ய்யாத்தில்
நபிகளுக்கு ஏன்
சலாம் சொல்கிறார்?

ஆழமறியாமல் காலை வைப்பது
மதியீனம்!
துறை தெரியாமல் தோணி தள்ளுதல்
அறிவீனம்!

தர்காக்களைக் குறிவைத்த
இவரது கவியம்புகள்
நபிகளின் தர்காவிலும் மோதி
இவரை நோக்கி
திரும்பி விட்டன!

பொறுத்திருந்து பார்ப்போம்
மதியின் விதி –
மாறும் விதத்தை!

You may also like

Leave a Comment