Friday, March 29, 2024
Homeநிகழ்வுகள்சிறப்பு காதிரிய்யஹ் மஜ்லிஸ் நிகழ்வு....

சிறப்பு காதிரிய்யஹ் மஜ்லிஸ் நிகழ்வு….

بسم ا لله ا لر حمن الر يم 
அல் மதத் யாரஸூலல்லாஹ் 
அல் மதத் யாஹபீபல்லாஹ் 
அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஆத்மீகத் தந்தை, ஜவ்ஹறுல் அமல், சாமஷீ, கலாநிதி, காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ், தரீக்கஹ்களின் ஷெய்ஹ் நாயகம், அல்ஆலிமுல் பாழில் அஸ்ஷெய்யிதுஷ் ஷெய்ஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஷ்பாஹி பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹு) அன்னவர்களின் 68வது பிறந்த தினத்தை கண்ணியப்படுத்தும் முகமாக “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிராத்தனை” * 5 – 2 – 2012 ஞாயிறு பி.ப திங்களிரவு நிகழ்வு ஒன்றை காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் வீதியில் இயங்கும் “காதிரிய்யஹ் திருச்சபை” ஏற்பாடு செய்திருந்தது. 
இந்நிகழ்வில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவர்களின் முரீதீன்கள், முஹிப்பீன்கள் கண்ணியமிக்க உலமாக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து விஷேட உரையாற்றினார்கள். 
இந்நிகழ்வில் காதிரிய்யஹ் ராதிப், ஷெய்ஹுனா அன்னவர்களுக்கு பொன்னாடை போர்த்துதல், நினைவுச்சின்னம் வழங்குதல், விஷேட துஆப்பிராத்தனை, கஷீததுல் புர்தஹ் நூல் வெளியீடு, வாழ்த்துப் பாடல்கள், தபற்றுக் விநியோகம், ஸலவாத் போன்றவை இடம் பெற்றன. 
ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்கள் அறபு மொழியில் எழுதிய “அல்ஜவாஹிறுல் முல்தகதஹ் மினல் குதுபில் முஃதமதஹ்” அறபு மற்றும் தமிழ் மொழியில் எழுதிய “தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்” போன்ற நூற்களை வெளியிட்ட எமது காதிரிய்யஹ் திருச்சபை ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்குமுகமாக விஷேட அம்சமாக கஷீததுல் புர்தஹ் நூலை அறபு மற்றும் தமிழ் மொழியில் அச்சிட்டு வெளியிட்டு வைத்தது. 
இந் நூல் வெளியீட்டின் அறிமுக உரையை காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவரும், றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட விரிவுரையாளருமான மௌலவீ MM.அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் நிகழ்த்தினார்கள். 
இந்நூலின் முதற்பிரதியை காதிரிய்யஹ் திருச்சபையின் ஸ்தாபகர் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்கள் வெளியிட்டு வைக்க இம்முதற் பிரதியை காதிரிய்யஹ் திருச்சபையின் உப தலைவர் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். 
ஷெய்ஹுனா மீஸ்பாஹீ அன்னவர்களின் “நூண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிராத்தனை” யை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் பள்ளியின் தலைவரும், றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட அதிபருமான மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள் நிகழ்த்தினார்கள். 
*காதிரிய்யஹ் திருச்சபையின் ஸ்தாபகர் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவர்கள் விஷேட உரையாற்றும் போது 
* கஸீததுல் புர்தஹ் நூல் வெளியீட்டின் அறிமுக உரையை காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவரும், றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட விரிவுரையாலருமான மௌலவீ MM.அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் நிகழ்த்தும் போது 
* கஸீததுல் புர்தஹ் நூலின் முதற் பிரதியை ஷெய்ஹுனா மீஸ்பாஹீ அன்னவர்கள் வெளியிட்டு, காதிரிய்யஹ் திருச்சபையின் உப தலைவர் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA அவர்களிடம் வழங்கம் போது

* காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் பள்ளியின் தலைவரும், றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட அதிபருமான மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள் ஷெய்ஹுனா மீஸ்பாஹீ அன்னவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் போது 

* அகில இலங்கை இஸ்லாமிய மெஞ்ஞான் பேரவையின் பொருப்பாளர் மௌலவீ MMM. சுப்பயான் பலாஹீ அவர்கள் ஷெய்ஹுனா மீஸ்பாஹீ அன்னவர்களுக்கு மாலை அணிவிக்கும் போது 
* காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவர் மௌலவீ MM.அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் ஷெய்ஹுனா மீஸ்பாஹீ அன்னவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கும் போது 

* காத்தான்குடி நகர சபையின் பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்கள் ஷெய்ஹுனா மீஸ்பாஹீ அன்னவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கும் போது

* ஷெய்ஹுனா மீஸ்பாஹீ அன்னவர்களின் பிறந்த தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட முரீதின்கள், முஹிப்பீன்களை படங்களில் காணலாம். 

நன்றி 
காதிரிய்யஹ் திருச்சபை 
BJM வீதி 
காத்தான்குடி-5 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments