காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு

February 12, 2016
காத்தான்குடி மீடியா போரத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினரால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு 11.02.2016 (வியாழக்கிழமை) அன்று இரவு 07.00 மணியளவில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முன்னாள் நகரசபை உதவி தவிசாளர் அல்ஹாஜ்  MIM. ஜெஸீம் JP  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும்   மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அன்னவர்களும், அந்நிறுவனத்தின் நிர்வாகிகளும், காத்தான்குடி தள வைத்தியசாலையின் அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்களும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்களும் மற்றும் பள்ளிவாயலின் ஜமாஅத்தார்களும் கலந்து சிறப்பித்தார்கள். இறுதியாக சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் திருக்கரத்தினால் வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் MSM. ஜாபிர் அவர்களிடத்தில் குளிரூட்டிகள் ஒப்படைக்கப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

You may also like

Leave a Comment