“றமழான்” என்றால் பொருள் என்ன?

June 19, 2015
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
இது ஒரு மாதத்தின் பெயராகும். ஒன்றுக்கு முதலில் பெயர் வைப்பவன் எந்த மொழியுடையவனாயினும் அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெயரையே வைப்பான்.
“ஷஃபான்” மாதத்தை அடுத்து வருகின்ற, “ஷவ்வால்” மாதத்திற்கு முன்னுள்ள மாதம் றமழான் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இம்மாதத்திற்கு பெயர் சூட்டினவன் அல்லாஹ்தான். இதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரம் உண்டு. விறிவையஞ்சி கூறவில்லை.

ஏதாவது ஒரு வஸ்த்துக்கு அல்லாஹ் பெயர் வைத்தான் என்றால் அது ஆழமான தத்துவங்களை உள்வாங்கியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
இந்த அடிப்படையில் இச்சொல் தருகின்ற அந்தரங்கத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
 الغنم
رعاها فى الرّمضاء
சூடான மண்ணுள்ள இடத்தில் – பாலவனத்தில் – ஆடு மேய்த்தான் என்ற பொருள் இதற்கு உண்டு.
النّصل جعله
بين حجرين املسين ثمّ دقّه
அம்பை கரடுமுரடான இரு கற்களுக்கிடையில் அதை உடைத்தல் என்ற பொருள் இதற்கு உண்டு.
النّهار إشتدّ
حرّه

பகலின் சூடு கடுமையாகி விட்டது. என்ற பொருள் இதற்கு உண்டு.
மேற்கண்ட பொருள்களைக் கொண்ட “றமழான்” என்ற சொல் கரித்தல், எரித்தல் என்ற பொருள் உடையதாகும்.
இதன் அடிப்படையில் “றமழான்” மாதம் என்பது நோன்பு நோற்று நல்லமல்கள் செய்யும் ஒருவன் ஏற்கனவே செய்த பாவங்களை எரித்துக் கரித்து விடுகிறது. அவன் சுத்தம் பெற்று விடுகின்றான்.
“றமழான்” என்ற இச்சொல்லில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. அவை றே, மீம், ழாத், அலிப், நூன்
இவ் ஐந்தில் முதல் எழுத்தான “றே” என்பது “றஹ்மத்” என்ற அருளையும் இரண்டாம் எழுத்தான “மீம்” என்பது “மஃபிறத்” என்ற பாவமன்னிப்பையும், மூன்றாம் எழுத்தான “ழாத்” என்பது “ழமான்” என்ற உத்தர வாதத்தையும் நாலாம் எழுத்தான “அலிப்” என்பது “உஜ்ரத்” என்ற நற்கூலியையும், ஐந்தாம் எழுத்தான “நூன்” என்பது “நஜாத்” என்ற வெற்றியையும் காட்டி நிற்கின்றன.

இதன் சாரம் என்னவெனில் “றமழான்” மாதம் நோன்பு நோற்குமளவு சக்தியுள்ளவன்
நோன்பு நோற்று, தறாவீஹ், வித்ர் முதலான கடமையல்லாத வணக்கங்களையும், மற்றும் கடமையான வணக்கங்களும் செய்வானாயின் அவன் அன்று பிறந்த பாலகன் போல் ஆகிவிடுவான்.
தொடர்ந்தும் றழழான் மாதம் சம்பந்தமான சிறு குறிப்புக்களை எதிர்பார்த்திருங்கள்.

You may also like

Leave a Comment