Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உலகம் அல்லாஹ் தானானதா?அல்லது அவனுக்கு வேறானதா?

உலகம் அல்லாஹ் தானானதா?அல்லது அவனுக்கு வேறானதா?

هل العالم عين الحقّ؟ أو غير الحقّ؟
 
(عينيّة بوجه وغيريّة بوجه، ولكنّ العينيّة هي الحقيقة المعتبرة)
 

قال الشيخ محي الدين ابن عربي رضي الله عنه في كتابه ” لواقح أنوار القدسيّة “ (لا يقدر أحد وَلَوِارْتَفَعَتْ دَرَجَاتُ مُشاهدتِه أن يقول أنّ العالم عين الحقّ أو اتّحد به)

 
وانظر إلى ذاتك يا أخي فتعلم قطعا أنّك واحد لكن تعلم أنّ عينَك غيرُ حاجِبِكَ ويدَكَ غيرُ رجلِك الى غير ذلك، وأنّ هذه الأعضاء تفاصيلُ في عين ذاتك. لا يُقال إنّها غيرك، ومن فهم ما أَوْمَأْنَا إليه فهو الّذي يفهم قوله تعالى قل الروح من أمر ربّي، فلم يَحْدُثْ بابتداعِه العالَم في ذاته حادث، تعالى الله عن ذلك علوّا كبيرا، وبالجملة فالقلوب به هائمة والعقولُ فيه حائرةٌ يريد العارفون أن يَفْصِلُوه تعالى بالكلّيّة عن العالم من شدّة التنزيه فلا يقدرون، ويريدون أن يجعلوه عينَ العالم من شدّة القرب فلا يتحقّق لهم فهمٌ على الدّوام متحيِّرُون. فتارة يقولون هو، وتارة يقولون ما هو، وتارة يقولون هو ما هو، وبذلك ظهرت عظمتُه تعالى،
 
(ஒரு கண்ணோட்டத்தில் அது அவன் தானானது. இன்னொரு கண்ணோட்டத்தில் அது அவனுக்கு வேறானது. எனினும் அது அவன் தானானதென்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட எதார்த்தமாகும்)
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(எந்த ஒருவனின் ஆன்மிக பலம் எவ்வளவுதான் உயர்ந்தாலும் உலகம் அல்லாஹ் தானானதென்று அவன் சொல்வதற்கோ, அல்லது அவன் அதோடு ஒன்றாகிவிட்டான் என்று சொல்வதற்கோ எவனும் சக்தி பெறமாட்டான்.)
சகோதரா! உன்னைக் கவனி. நீ ஒருவன் என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியும். எனினும் உனது கண், உனது கண் புருவத்திற்கு வேறானதென்பதும், உனது கை, உனது காலுக்கு வேறானதென்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். இந்த உறுப்புக்களெல்லாம் உனது உடலின் கிளைகளாகும். இவையெல்லாம் உனக்கு – உடலுக்கு – வேறானவை என்று சொல்ல முடியாது.
நாங்கள் இப்போது சுட்டிக் காட்டிய தத்துவத்தை விளங்கிக் கொண்டவன் “றூஹ் என்பது எனது “றப்பு” இரட்சகனின் விடயத்திலுள்ளது” என்ற அல்லாஹ்வின் பேச்சை விளங்கிக் கொள்வான். அல்லாஹ் தன்னில் நின்றும் உலகத்தை – பிரபஞ்சத்தை – முன்மாதிரியின்றிப் படைத்தால் அவனில் – அவனுடைய தாத்தில் – எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. அல்லாஹ் தன்னில் குறை ஏற்படுவதை விட்டும் துய்யவன்.
பொதுவாக – மொத்தத்தில் – அல்லாஹ்வின் விடயத்தில் உள்ளங்கள் நிலை குலைந்துள்ளன. அறிவுகள் தடுமாறுகின்றன. அவனின் அதி தூய்மைத் தன்மையை கவனித்த இறை ஞானிகள் பிரபஞ்சத்தை விட்டும் அவனைப் பிரிக்க – வேறாக்க – நினைக்கின்றார்கள். ஆனால் அதற்கு அவர்களால் முடியவில்லை. அதேபோல் அவன் பிரபஞ்சத்திற்கு அதி நெருக்கமாயிருப்பதை கவனித்த அவர்கள் பிரபஞ்சம் அவனேதான் என்று சொல்ல நினைக்கின்றார்கள். அதற்கும் அவர்களால் முடியவில்லை. இவ்விடயத்தில் ஞானிகள் தடுமாறி நிற்கின்றார்கள். சில நேரம் பிரபஞ்சம் அவனேதான் என்று சொல்கிறார்கள். சில நேரம் அவனில்லை என்று சொல்கின்றார்கள். இன்னும் சில நேரம் இரண்டும்தான் என்றும் சொல்கின்றார்கள். இவ்வாறு “ஆரிபீன்” இறை ஞானிகளே தடுமாறுவதன் மூலம் அல்லாஹ்வின் வலுப்பம் வெளியாகின்றது.
(தொடரும்)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments