நபீகளார் தேடிய வஸீலா

August 13, 2015
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ
أُمُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ:… قَالَ: «اللهُ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ،
اغْفِرْ لِأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ، ولَقِّنْهَا حُجَّتَها،
وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا، بِحَقِّ نَبِيِّكَ وَالْأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ
قَبْلِي فَإِنَّكَ أَرْحَمُ الرَّاحِمِينَ»
(المعجم الكبير للطبراني 871، وأبونعيم فى الحليّة والحيثمي فى مجمع
الزوائد 9257)
அலீ “றழியல்லாஹு
அன்ஹு” அவர்களின் தாயார் – பாதிமா பின்தி அஸத் – அவர்கள் மரணித்த போது நபீ பெருமான் “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” அவர்கள் (யா அல்லாஹ்! உன்னுடைய
நபீயின் பொருட்டு
கொண்டும், எனக்கு முன்னுள்ள நபீமார் பொருட்டு கொண்டும் எனது தாய்க்கு பின் எனது தாயாரானவரின் பாவத்தை நீ மன்னித்து விடுவாயாக) என்று பிராத்தனை செய்தார்கள்.
(ஆதாரம் – அல்
முஃஜமுல் கபீர் லித்தபறானி
– 871)
(அபூ நூஐம் பில் ஹில்யா பாகம் – 03 பக்கம் – 121)
(ஹைதமீ பீ மஜ்மயிஸ் ஸவாயித் பாகம் – 09 பக்கம் – 257)

சுருக்கம் – நபீ பெருமான் “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” அவர்கள் அவர்களின் தாய்க்குப் பின் தாயாக இருந்த அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் பாதிமா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின், (யாஅல்லாஹ்! என்னுடைய பொருட்டு கொண்டும், எனக்கு முன்னுள்ள நபீமார் பொருட்டு கொண்டும் என்தாய்க்குப் பின் தாயான பாதிமாவின் குற்றத்தை மன்னித்தருள்வாயாக) என்று “வஸீலா” தேடி பிரார்த்தனை செய்தார்கள்.
இவ்வாறு “துஆ” கேட்பது “வஹ்ஹாபிகளுக்கு” பிடிக்காதாகையில் இந்த “ஹதீதை” – நபீ மொழியை 
– “ழயீப்”
பலமற்றதென்று சொல்வதற்கு ஆதாரம் தேடி வலை வீசுவார்கள். அவர்களின் வலையில் ஒரு சில செத்து நாறிப்போன மீன்கள் கிடைத்தாலும் கூட “வஸீலா”வை சரி என்று நிறுவுவதற்கு இந்த “ஹதீது” மட்டும் ஆதாரமல்ல என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நபீ மொழி “ழயீப்” பலம் குறைந்ததென்று வைத்துக் கொண்டாலும் கூட இத்தகைய நபீ மொழி கொண்டு “அமல்” செய்யலாம் – செயல்படலாம் – என்று நம்பத்தகுந்த பல அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். அவர்களில் இமாம் நவவீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களும் ஒருவர்.
இதுவே திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் வடித்து எடுக்கப்பட்ட சாரம்.

வஹ்ஹாபிகள் தமக்குப் பிடிக்காத – தமது “அக்ல்” ஏற்றுக் கொள்ளாத – நபீ மொழிகளை “ழயீப்” என்று கூறி வருகின்ற வேகம் இன்னும் சில வருடங்களில் அதிவேகமாகி எந்த ஒரு “ஹதீது” நூல்களிலும் “ஸஹீஹ்” பலம் வாய்ந்த ஹதீது ஒன்றுமில்லை என்று சொல்லி விடுவார்கள் போல் தோன்றுகின்றது.

You may also like

Leave a Comment