அல் இஸ்றாஉ, வல் மிஃறாஜ்

April 12, 2018
ஆக்கம் – மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம், மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்
தீன் நகர், காத்தான்குடி.
மின் காந்த அலைகளை  விட வேகமாகவும், மூன்று, அல்லது நான்கு அல்லது  அதைவிட மிக வேக நொடிப் பொழுதில் நிகழ்ந்தவையே “இஸ்றாஉ” எனப்படும் இராவெளிப்பயணமும், “மிஃறாஜு”” எனப்படும் உறூஜ், சுஊத் எனும் ஏற்றமுமாகும்.
இவ்விரு அம்சமும் முர்ஸலூன்கள், நபிய்யூன்களுக்கு மத்தியில் ஏன் அனைத்து படைப்புக்களுக்கு மத்தியில் உயிரினும் மேலான  அண்ணல் முஸ்தபா  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  மகா வலுப்பத்தை, உயர் நிலையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
அல்குர்ஆனும் இராவெளிப் பயணம் ‘அல் இஸ்றாஉ” குறித்து விளக்கம் தருகின்றது.

سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல்
ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல்
முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச்  சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்)  சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; 
நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன்  (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும்
இருக்கின்றான்.
அத்தியாயம் 17.  வசனம் 1
இவ்வசனம்   இரா வெளிப்பயணம்  ஓர் இரவில் நிகழ்ந்ததாகவும், மக்கா நகரத்தில் இருந்து பைதுல் அக்ஸா (முஸ்லிம்களின் முதல் கிப்லா) அளவில்  தனது அடியார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பயணம் மேற் கொண்டதாகவும் சொல்லிக்காட்டுகின்றான் அல்லாஹு சுப்ஹானஹுவ்வதஆலா அஸ்ஸவஜல்.
 
இஸ்ராஉப் பயணம் குறித்த கருத்து
واختلف الناس في الإسراء برسول الله صلّى الله عليه وسلّم. فقيل: إنما كان ذلك في المنام والحق الذي عليه أكثر الناس، ومعظم السلف وعامة الخلف من المتأخرين والفقهاء والمحدثين والمتكلمين أنه أسري بروحه وجسده صلّى الله عليه وسلّم ويدل عليه قوله سبحانه وتعالى : سُبْحانَ الَّذِي أَسْرى بِعَبْدِهِ لَيْلًا ولفظ العبد عبارة عن مجموع الروح والجسد
நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்பட்ட “இஸ்ராஉ” எனப்படும்  இராவெளிப் பயணத்தின் விடயத்தில் மக்கள் (இமாம்கள்) கருத்தபிப்பிராயம் கொள்கின்றனர். அது கனவில் நடந்தது (ரூஹுடன் மட்டும்) என்று சிலர் சொல்கின்றனர்.
இமாம்களில் பெரும் பான்மையினர், முன்னோர்களில் வலுப்பமிக்க அந்தஸ்துடையோர், மற்றும் பின்னோர்களில் மார்க்க சட்ட வல்லுணர்களும், ஹதீத்களை மேதைகளும், முதகல்லிமீன்களும் கூறும் சரியான சொல்லானது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்களின், ரூஹுடனும், உடலுடனுமே விண்வெளிப்பயணம் இஸ்ரா சென்றார்கள்.
அதற்கு ஆதாரமாக சூரதுல் இஸ்ராவில் இராவெளிப் பயணம் சம்பந்தமாக வந்துள்ள “பிஅப்திஹீ​” (தனது அடியாரை கொண்டு) என்று சொல்லப்பட்ட வார்த்தையை  குறிப்பிட்டு, அடியார் என்று குறிப்பிடும் போது உடல், உயிர், இரண்டையுமே  சேர்த்து நோக்கவேண்டும். எனவே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இரண்டைக் கொண்டே இஸ்ரா சென்றார்கள் என்ற அவர்களின் கருத்தை லுபாபுத் தஃவீல் பீ மஆனித்தன்ஸீல் = ( காசின் விரிவுரை) விரிவுரையாளர் அலாஉத்தீன் அலீ இப்னு முஹம்மத் றஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


மிஃராஜ் பயணம் பற்றிய கருத்து
 
قال الشيخ الأكبر قدس سره ان معراجه عليه السلام اربع وثلاثون مرة واحدة بجسده والباقي بروحه رؤيا رآها اى قبل النبوة وبعدها وكان الاسراء الذي حصل له قبل ان يوحى الي
توطئة له وتيسيرا عليه كما كان بدأ نبوته الرؤيا الصادقة والذي يدل على انه عليه السلام عرج مرة بروحه وجسده معا
 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மொத்தம் முப்பத்தி நான்கு தடவை மிஃறாஜ் பயணம் செய்தார்கள். அதில் ஒரு தடவை உடலுடன் சென்றார்கள், மற்ற முப்பத்தி மூன்று தடவையும், தன்னுடைய ரூஹுடன் சென்றார்கள். ரூஹுடன் சென்ற மிஃறாஜுப் பயணம் நபித்துவத்திற்கு முன்னும், அதன் பின்னாலும் நிகழ்ந்ததாகும்.
இராவெளிப் பயணமானது வஹீ அறிவிக்கப்படும் முன்னர் நடந்த நிகழ்வாகும்.
இங்கு ஆதாரத்திற்குரிய கருத்தானது,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது உடலுடனும், ரூஹுடனும், மிஃறாஜ் சென்றார்கள். என  ஷைகுல்  அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹ் அவர்கள் கூறுகின்றார்கள் என ரூஹுல் பயான்  ஆசிரியர் இஸ்மாயீல் ஹக்கீ றஹ் அவர்கள் தங்களின் குர்ஆன் விளக்கவுரையில் 5ம் பாகம் 103ம் பக்கத்தில் குறிப்பிடுக் காட்டுகின்றார்கள்.
அன்று றஜப் மாதம் பிறை இருபத்தி ஏழு, சரியான சொற்படி திங்கட் கிழமை (ஹிஜ்றத்திற்கு முன்பு)  உம்மு ஹானீ றழி அன்ஹா அவர்களின் வீட்டில் நபிகள்  நாயகம் ஸல் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வானவர் கோண் ஜீப்ரீல்  அலை, வானவர் மீகாயீல் அலை, வானவர் இஸ்ராபீல் அலை ஆகியோர் வருகின்றனர். வல்லோன் அல்லாஹ் றப்புல் ஆலமீன் தங்களை சந்திக்க அழைக்கின்றான் என்றனர். அதன் பின் அவர்களின் நெஞ்சத்தைப் பிழந்து நெஞ்சையும், கல்பையும். ஸம்ஸம் நீர். கொண்டு கழுவினர்.
“புறாக்” எனும் ஓர் உயிர்ப்பிராணி அவர்களின் வாகனமாக கொண்டு வரப்பட்டிருந்தது. புறாக் என்பது நான்கு
கால்கள் கொண்டதாகவும், சிறிய கோவேறுக் கழுதை அல்லாமல்   கழுதையை விட பெரியதாகவும், இருந்தது. ஆண், பெண் இனத்தில் உள்ளதாக அது இருக்கவில்லை.
அதைப்பற்றியும் “இஸ்ராஉ” பற்றியும் நீண்ட ஹதீன் துவக்கத்தில் பெருமானார் ஸல் அவர்கள் கூறுகையில்,
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، ح وقَالَ لِي خَلِيفَةُ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَهِشَامٌ، قَالاَ: حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” بَيْنَا أَنَا عِنْدَ البَيْتِ بَيْنَ النَّائِمِ، وَاليَقْظَانِ – وَذَكَرَ: يَعْنِي رَجُلًا بَيْنَ الرَّجُلَيْنِ -، فَأُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ، مُلِئَ حِكْمَةً وَإِيمَانًا، فَشُقَّ مِنَ النَّحْرِ إِلَى مَرَاقِّ البَطْنِ، ثُمَّ غُسِلَ البَطْنُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ مُلِئَ حِكْمَةً وَإِيمَانًا، وَأُتِيتُ بِدَابَّةٍ أَبْيَضَ، دُونَ البَغْلِ وَفَوْقَ الحِمَارِ: البُرَاقُ، فَانْطَلَقْتُ مَعَ جِبْرِيلَ
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ‘புராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன்.
பின்னர் மதீனா, மத்யன் இப்னு மூஸா (மூஸாவின் மகன் என்று வருணிக்கப்பட்ட மத்யன் மரம்) என்ற மரத்தின் அருகில், பைத்துல்லஹ்ம் –தொழுவம்- (ஈஸா அலைஹிஸ்ஸாம் பிறந்த இடமான பெத்லஹ்ம்)  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ர் , இப்ராஹீம் அலை அவர்களின் புனித மஸார் ஆகிய இவ்விடங்களில் புனிதத் தளங்களில் இரண்டு றக்அத் வீதம் ஒவ்வொரு இடத்திலும் தொழுதார்கள்.
 حتى بلغ أرضا فقال له جبريل انزل فصل هاهنا ففعل ثم ركب فقال له جبريل أتدري اين صليت قال (لا) قال صليت بمدين وهى قرية تلقاء غزة عند شجرة موسى سميت باسم مدين بن موسى لما نزلها فانطلق البراق يهوى به فقال له جبريل انزل فصل ففعل ثم ركب فقال له أتدري أين صليت قال (لا) قال صليت ببيت لحم وهى قرية تلقاء  بيت المقدس حيث ولد عيسى عليه السلام 
 ஸஹீஹுல் புகாரீ – 3207
அதன் பின்னால் பைதுல் முகத்தஸ் பள்ளிவாயலுக்கு  கிழக்குத்திசையில் அமைந்துள்ள  வாயலினால்  உள் நுளைந்தார்கள். நுழைந்த அண்ணலார் நாயகம் ஸல் அவர்களும், அமரர்கள் மூவரும் தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிவாயல் காணிக்கை) தொழுகையை தொழுதார்கள்.
நபிமார்கள், றசூல்மார்கள், மலகுகள், இன்சுகள், ஜின்கள் அவரவர்களின் ஜடத்தோடும், ஆன்மாவோடும், மரணத்தை தழுவியோரும், உயிருடனிருந்தோரும். ஒன்று சேர்ந்தனர். ஜிப்ரீல்  அழைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுகைக்காக அழைப்பு விடுத்தனர். அதனைக் கேட்ட, வருகை தந்திருந்த எல்லோரும் தொழுகைகாக எழுந்து நின்றனர்.
இங்கு  ஒரு கேள்வி எழலாம் (“தொழுகையே இன்னும் விதியாக்கப்படவில்லை” அப்படி இருக்க  எந்தத் தொழுகையை  அங்கு தொழ எழுந்தார்கள்.???) என-. மிஃராஜ் பயணத்தின் போதுதான் ஐவேளைத் தொழுகை அனைவருக்கும் விதியானது உண்மை. ஆனால் அதற்கு முன்னரே நபி ஸல் அவர்களுக்கு காலையில் இரண்டுறக்அத்தும்,  மாலையில் இரண்டு றக்அத்தும் தொழ ஏவப்பட்டிருந்தார்கள்.
ஐவேளை தொழுகை விதிக்கப்பட்ட பின்னர் அச்சட்டம் மாற்றப்பட்டது என மௌலித் பர்சன்ஜீ நூலாசிரியர் அல் இமாம், அஸ்ஸெய்யித் ஜஃபர் இப்னு ஹஸன் அல் பர்சன்ஜீ றஹ் அவர்கள் கூறிக்காட்டுகின்றார்கள்.

அதன் பின்னர் பல  பிரிவுகளாக , அணிகளாக (ஸப்புகளாக)  நின்றனர். அவற்றில் றசூல்மார்கள் மூன்று ஸப்புகளாகவும், நபிமார்கள் நான்கு ஸப்புகளாகவும், மலகுகள், ஜின்கள், மனிதர்கள் (வலிமார்கள்) எண்ணற்ற ஸப்புகளாகவும்  அணிவகுத்து நாம் தொழுகைக்காக நிற்பதனைப் போன்று நின்றனர். அல்லாஹ்  அந்நேரத்தில் பைதுல்  அக்ஸாவை விசாலப்படுத்தி கொடுத்தான்.
தங்களுக்குத் தொழுகை நடாத்த இமாம் வருவதை எதிர்பாரத்தவர்களாக யாவரும் நின்ற சந்தர்ப்பத்தில் வானவர் கோண் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அண்ணவர்களின் திருக்கரம் பற்றி மிஹ்ராப் (தொழுகை நடாத்தும் அறை) உள்ளே செல்லுமாறு இமாமத்திற்கு முற்படுத்தினார்கள்.
அந்நேரத்தில் அண்ணல் நாயகம் அவர்கள் இரண்டு றக்அத்கள் தொழவைத்தார்கள். இந்த தொழுகையை  எந்தத் தொழுகை என்று விளக்கம் சொல்லும் றூஹுல் பயான் ஆசிரியர் அவர்கள் அது வித்ருத் தொழுகை என்று கூறி, அதற்கு ஓர் ஹதீதையும் ஆதாரமாக அறிவித்துக் காட்டுகின்றார்கள்.
மேலும் அவர்கள்:,
 وأول من صلى الوتر رسول الله صلى الله عليه وسلم ليلة المعراج வித்ருத் தொழுகையை  ஆரம்பமாக  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் மிஃராஜுடைய இரவில் தொழுதார்கள். என கூறுகின்றார்கள். இன்னும் அது “நப்ல் முத்லக்” என்ற (பொதுவான சுன்னத் தொழுகை) என்றும் அந்நூலாசிரியர், மற்றோர் இடத்தில் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்கள்.. அல்லாஹு வறசூலுஹூ அஃலமு.
இதுவே  இராவெளிப் பயணத்தின் இறுதி இபாதத் வணக்கமாக அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர்தான் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளிப்பயணம் மிஃராஜ் (மின்னல் வேக) உறூஜ்  ஆரம்பமானது.
புறாக் வாகனம் கட்டப்பட்ட இடம்.


 
நபி தாஊத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அவர்களின் மகன் பேரரசர் உலகத்தை ஆண்ட வள்ளரசர், நபி சுலைமான்  அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்  அமர்ந்திருந்ததாக கூறப்படும்  ஓர் கற்பாரையில்   புறாக் வாகனத்தை (அடையாளத்திற்கென) கட்டிவிட்டு, காரண உலகின் காரணத்தை கையாண்டு பின்னர் உயரப்பறந்தார்கள், ஐனில்லா அறபி, மீமில்லா அஹ்மத்,  நபிய்யுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
 
حَتَّى أَتَيْنَا السَّمَاءَ الدُّنْيَا، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ جِبْرِيلُ: قِيلَ: مَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ المَجِيءُ جَاءَ، فَأَتَيْتُ عَلَى آدَمَ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنَ ابْنٍ وَنَبِيٍّ، فَأَتَيْنَا السَّمَاءَ الثَّانِيَةَ، قِيلَ مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: مَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: أُرْسِلَ إِلَيْهِ، قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ المَجِيءُ جَاءَ، فَأَتَيْتُ عَلَى عِيسَى، وَيَحْيَى فَقَالاَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ، فَأَتَيْنَا السَّمَاءَ الثَّالِثَةَ [ص:110]، قِيلَ: مَنْ هَذَا؟ قِيلَ: جِبْرِيلُ، قِيلَ: مَنْ مَعَكَ؟ قِيلَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ المَجِيءُ جَاءَ، فَأَتَيْتُ عَلَى يُوسُفَ، فَسَلَّمْتُ عَلَيْهِ قَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ، فَأَتَيْنَا السَّمَاءَ الرَّابِعَةَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ : جِبْرِيلُ، قِيلَ: مَنْ مَعَكَ؟ قِيلَ مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قِيلَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ المَجِيءُ جَاءَ ، فَأَتَيْتُ عَلَى إِدْرِيسَ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ، فَأَتَيْنَا السَّمَاءَ الخَامِسَةَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ : جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قِيلَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ المَجِيءُ جَاءَ، فَأَتَيْنَا عَلَى هَارُونَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ، فَأَتَيْنَا عَلَى السَّمَاءِ السَّادِسَةِ، قِيلَ: مَنْ هَذَا؟ قِيلَ جِبْرِيلُ، قِيلَ: مَنْ مَعَكَ؟ قِيلَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ المَجِيءُ جَاءَ، فَأَتَيْتُ عَلَى مُوسَى، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ، فَلَمَّا جَاوَزْتُ بَكَى، فَقِيلَ: مَا أَبْكَاكَ: قَالَ: يَا رَبِّ هَذَا الغُلاَمُ الَّذِي بُعِثَ بَعْدِي يَدْخُلُ الجَنَّةَ مِنْ أُمَّتِهِ أَفْضَلُ مِمَّا يَدْخُلُ مِنْ أُمَّتِي، فَأَتَيْنَا السَّمَاءَ السَّابِعَةَ، قِيلَ مَنْ هَذَا؟ قِيلَ: جِبْرِيلُ، قِيلَ مَنْ مَعَكَ؟ قِيلَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ، مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ المَجِيءُ جَاءَ، فَأَتَيْتُ عَلَى إِبْرَاهِيمَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنَ ابْنٍ وَنَبِيٍّ، فَرُفِعَ لِي البَيْتُ المَعْمُورُ، فَسَأَلْتُ جِبْرِيلَ، فَقَالَ : هَذَا البَيْتُ المَعْمُورُ يُصَلِّي فِيهِ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، إِذَا خَرَجُوا لَمْ يَعُودُوا إِلَيْهِ آخِرَ مَا عَلَيْهِمْ، وَرُفِعَتْ لِي سِدْرَةُ المُنْتَهَى، فَإِذَا نَبِقُهَا كَأَنَّهُ قِلاَلُ هَجَرَ وَوَرَقُهَا، كَأَنَّهُ آذَانُ الفُيُولِ فِي أَصْلِهَا أَرْبَعَةُ أَنْهَارٍ نَهْرَانِ بَاطِنَانِ، وَنَهْرَانِ ظَاهِرَانِ، فَسَأَلْتُ جِبْرِيلَ، فَقَالَ: أَمَّا البَاطِنَانِ: فَفِي الجَنَّةِ، وَأَمَّا الظَّاهِرَانِ: النِّيلُ وَالفُرَاتُ، ثُمَّ فُرِضَتْ عَلَيَّ خَمْسُونَ صَلاَةً، فَأَقْبَلْتُ حَتَّى جِئْتُ مُوسَى، فَقَالَ: مَا صَنَعْتَ؟ قُلْتُ: فُرِضَتْ عَلَيَّ خَمْسُونَ صَلاَةً، قَالَ: أَنَا أَعْلَمُ بِالنَّاسِ مِنْكَ، عَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ المُعَالَجَةِ، وَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَسَلْهُ، فَرَجَعْتُ، فَسَأَلْتُهُ، فَجَعَلَهَا أَرْبَعِينَ، ثُمَّ مِثْلَهُ، ثُمَّ ثَلاَثِينَ، ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عِشْرِينَ، ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عَشْرًا، فَأَتَيْتُ مُوسَى، فَقَالَ: مِثْلَهُ، فَجَعَلَهَا خَمْسًا، فَأَتَيْتُ مُوسَى فَقَالَ: مَا صَنَعْتَ؟ قُلْتُ [ص:111]: جَعَلَهَا خَمْسًا، فَقَالَ مِثْلَهُ، قُلْتُ : سَلَّمْتُ بِخَيْرٍ، فَنُودِيَ إِنِّي قَدْ أَمْضَيْتُ فَرِيضَتِي، وَخَفَّفْتُ عَنْ عِبَادِي، وَأَجْزِي الحَسَنَةَ عَشْرًا، وَقَالَ هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَن الحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي البَيْتِ المَعْمُورِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்” என்றார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும் அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. அவர், ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்க, ‘உங்களுடன் இருப்பவர் யார்?’என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார்.
‘(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆம்” என்று பதிலளித்தார். ‘அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்” என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து
வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” பதிலளித்தார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” என்று பதிலளித்தார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்கள்.
நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது…
நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்” என்றார்கள். பிறகு, ‘அல் பைத்துல் மஃமூர்’ எனும் ‘வளமான இறையில்லம்’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன்.
அவர், ‘இதுதான் ‘அல் பைத்துல் மஃமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்” என்றார்.
பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ‘ஹஜ்ர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன.
அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும்.
வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘என்ன செய்தீர்?’ என்று கேட்டார்கள்.
நான், ‘என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான்.
நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தீர்?’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்” என்றேன்.
அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, ‘நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்” என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), ‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன் “என்று அறிவிக்கப்பட்டது.
மேற்படி அறிவிப்பின் ஆரம்பத்தில் ஏழு வானங்களிலும் நபிமார்களை சந்தித்தார்கள். என்று வந்தன. அவை முறையே:
முதலாம் வானத்தில்​:
நபிய்யுனா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும்,
இரண்டாம் வானத்தில்: இப்னு
மர்யம் ஈஸா  நபி அலைஹிஸ்ஸலாம் , அவர்களின் சாச்சி மகன் , சட்டங்கள் வழங்கப்பட்ட நபீ யஹ்யா அலைஹிஸ்ஸலாம்  அவ்விருவரையும்,
மூன்றாம் வானத்தில்:  பேரழகர் நபி யூசுப்  அலைஹிஸ்ஸலாம் அவர்களையும்,
நான்காம் வானத்தில்: மரணம் வந்து பின்னர் உயிர் பெற்று சுவர்க்கம் புகுந்த, வானவர்கள் கண்டு வியந்த நபீ இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்  அவர்களையும்,
ஐந்தாம் வானத்தில்: இஸ்ரயீல் சந்ததியினரால் அன்பு கொள்ளப்பட்ட  நபீ ஹாரூன்  அலைஹிஸ்ஸலாம் அவர்களையும்,
ஆறாம் வானத்தில்: அல்லாஹ்வுடன் தூர் சீனா மலையில்  உரையாடிய கலீமுல்லாஹ், மக்கள் நாளை மறுமையில் எழுப்படும்போது அல்லாஹ்வின்  அர்ஷைப் பிடித்துக் கொண்டு மயக்கத்திலிருக்கும் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்களையும்,
ஏழாம் வானத்தில்: அல்லாஹ்வுக்காக  அனைத்தையும் அரப்பணித்து, தன் மகனைக்கூட இறைவனுக்காக பலியிடத் துணிந்தவர்களும்,  நம்றூத் அரசனின் நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட வர்களுமான நபீ இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் கண்டார்கள்.
அதன் பின்னால்  ‘ஜலாலிய்யத்” எனும் திரைகள் அகற்றப் பட்டு றுபூபிய்யத் எனும் சமூகத்திலிருந்து தன்னுடைய தலைக் கண்கள் இரண்டினாலும் றப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் தரிசனத்தைப் பெற்றார்கள் ஏந்தல் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள்.
பல சம்பாசனைகள் நடந்தன. ஹபீப், மஹ்பூப் எனும் இரண்டு பெயர் நாமங்களும் ஒருமித்தன.
சம்பூரண ஜோதி, மழ்ஹறுல் அதம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னில் தானான பல
இரகசியங்களை திரை மறைவின்றிக் கண்டார்கள்.
ஐம்பது நேரத் தொழுகைகள் வழங்கப்பட்டன. அவற்றைக் குறைக்கப்பட்டு  ஐந்து நேரத் தொழுகைகளாக மாற்றம் பெற்று விதியாக்கப்பட்டன.
பிரயாணத்திலிருந்து திரும்பிய பின்னர் நபி ஸல் அவர்கள்  மிஃறாஜ் பற்றி மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினார்கள்.
அவர்கள் கூறிய செய்தியை குறைசிக் காபிரீன்கள் மறுதலித்துப் பேசலானார்கள். ஆனால் ஸித்தீக் நாயகம் அவர்கள் முதலில் ஏற்று உண்மைப்படுத்தினார்கள் அதனால அவர்கள் சித்தீக் எனும் சொல்கொண்டு அழைக்கப்பட்டார்கள் என தப்ஙீர் காசின் விளக்கவுரையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழுவானங்களில் என்னென்ன நிகழ்வுகழ் நடந்தன என்பதனை  நாம் பார்த்த சஹீஹான கிரந்தங்களின்  நபிமொழி அறிவிப்புக்கள் ஓரளவு தெளிவு படுத்தின.
இன்னும் சில வேறுபட்ட அறிவுப்புக்கள் ஸஹீஹ் அல்லாத ஹதீத் நூற்களிலும், இடம் பெற்றிருக்கின்றன. அந்நூற்கள் பிரசித்தி பெற்ற பல இமாம்களால், ஞானவான்களால் விளக்கப்படுத்தி, தப்ஸீல் செய்யப்பட்டுள்ளன. அவைகளில் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் இங்கு விரிவை அஞ்சி தவிர்க்கப்பட்டன. அறிவதற்கு நாட்டம் கொண்டவர்கள்  நீங்கள் கரம் பற்றிய ‘முர்ஷிதிடத்தில்” ஷைகுவிடத்தில் கால் மடித்துப், படித்துக் கொள்ள அன்பாய் வேண்டுகின்றோம்.
‘பித்அத்” வாதிகள், குழப்பக்காரர்கள் மிஃறாஜ் விடயத்தில்  பல கருத்து பேதங்களைக் கட்டவிழ்த்து, மக்களின்
மனங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கும், அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஹப்பத்தை கலங்கப்படுத்த முயல்கின்றனர்.  ஈமானைப்பிடுங்க ஷைத்தானிய வடிவம் பூண்டு வரின்றனர். ஏமாந்து விடாதீர்கள்.!
உங்களையும், உங்களின் குழந்தைகளையும் அவர்களின் ஆபத்தில் நின்றும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.!!!
பெரியவர்களைவிட வளரும் தலைமுறையினரே அவர்களுக்குத் தேவை. அவர்களின் கருத்துக்கள் இளம் சமூகத்தின் துணையோடுதான் நகர்கின்றன.
றஜப் மாதம் பிறை 27 ல் இஸ்ராஉ, மிஃராஜ் பயணம் நடைபெற்றிருப்பதால் அந்நாளை  நாம் சந்தோசமாக வரவேற்பதும் , அண்ணலார் மீது அன்பு கொண்டு சலவாத் ஓதுவதும், மௌலித் படிப்பதும், ஏழை எளியோர்களுக்கு தர்மம் செய்வதும், குர்ஆன் ஓதுவதும், எங்களின் சிறார்களின் உள்ளங்களில் நாயகத்துடைய அன்பையும், அவர்களின் தன்மையையும், அறியவைத்து தெளிவூட்டுவதும், மிஃறாஜ் பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும்  அந்நாளின் மகத்துவத்தைப் பேணுவதில் உள்ள நல்ல விடயங்களாகும். இது மார்க்கத்திற்கு முறனான “பித்அத்” விடயமாக குழப்பவாதிகள், குட்டி தஜ்ஜால்கள் கொக்கரிப்பார்கள்.அப்படியல்ல இப்படித்தான் என ஆதாரங்கள் பல காட்டுவார்கள். ஆனால் அவர்களோ ஆழமாக சுழி ஓடி முத்துக்குழிக்கத் தெரியாதவர்கள். முத்துக்குழித்த சுழியோடிகளான ஆரிபீன்கள் மிஃறாஜ் இரவை கண்ணியம் செய்வதும், அவ்விரவில் வணக்கம் புரிவதும் ஒருபோதும் ‘பித்அத்தாக” ஆகாது.
மிஃராஜ் உடைய இரவை கண்ணியப்படுத்துவது பற்றி அல்குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ தடைவந்திருந்தால் மட்டுமே அது மார்க்கத்திற்கு முறனான விடயமாக ஆகும். அப்படி அல்குர்ஆனிலோ  அருள் நபி மொழியிலோ தடை உத்தரவு வரவில்லை என்றால் நாம் அவ்விடயத்தை செய்வதில் தவறில்லை. பாவம் இல்லை. இதுதான் இமாம்களின் ஏகோபித்த கருத்தாகும்.
ஆதலால் நாம் செய்வது நாயகத்தின் காலப்பகுதியில், அல்லது அவர்களைப் பின்பற்றி வந்த ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள் போன்றோரின் காலத்தில் இல்லாதிருந்தாலும் அது பிழையாக ஆகாது. குர்ஆன் , ஹதீதில் அது குறித்த தடை வந்திருக்கின்றதா? இல்லையா என்பதையே நாம் பார்க்கவேண்டும்.
மிஃறாஜ் இரவில் நின்று வணங்குதல், நோன்பு  நோற்றல்.
 
அன்று தொடக்கம் இன்று வரை மிஃராஜ் தினத்தை நாமும், எமக்கு முன்னர் வாழ்ந்த நம்முன்னோர்களும் கண்ணியப்படுத்துகின்றோம். அன்றை இரவில்  தொழுகின்றோம். விடிந்தெழும் போது நோன்புடன் நோன்பாளிகளாக காலையாகின்றோம். இவ்வாறான செயலுக்கு நம்முன்னோர் ஸஹீஹ் அல்லாத ஹதீத்களைக் ஆதாராமாகக் கொண்டே பின்பற்றி வணக்கம் செய்துவந்துள்ளார்கள். ழயீபான ஹதீதைக் கொண்டு அமல் செய்வது ஆகும் என்று பல  பெரும் தகைகள் கூறிக்காட்டியிருக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில் கீழ்வரும் ஹதீத் எமக்கு ஆதாரமாக  அமைகின்றது.
 روى أبو هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من صام يوم سبع وعشرين من رجب كتب الله له صيام ستين شهراً
எவர் றஜப் மாதம் (பிறை இருபத்தேழில்) நோன்பு நோற்றாரோ அவருக்கு அறுபது (60) மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான். என நபி ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நூல்: இஹ்யா உலூமித்தீன், பக்கம்: 373 பாகம்  01
றஜப் மாதம் பிறை 27 ல் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்  மிஃறாஜ் எனப்படும் விண்ணுலகப் பயணம் மேற் கொண்டார்கள் இவ்விரவில் நின்று வணக்கம் புரிவது அதிகப்படியான  நன்மைகளை பெற்றுத்தருவதாக  ஆரிபீன்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
எனவே நாம் அவ்விரவில் நின்று வணக்கம் புரிவதுடன் மறு நாள் காலையில் நோன்பாளியாக கண் விழிக்கவும் வேண்டும்.
மிஃறாஜ் இரவன்று தொழப்படும் தொழுகையின் விபரத்தை இமாம் அபூஹாமித் ஹுஜ்ஜதுல் இஸ்லாம், அறிவுக்கடல் இமாம் கஸாலீ றஹ் அவர்கள் தங்களின் கிரந்தமான இஹ்யாவில் எழுதிக்காட்டுகின்றார்கள். அதன் விபரத்தை மிஃறாஜ் உடைய மகிமையை உணர்ந்து, அமல்செய்யும் அன்புள்ள சகோதர்களுக்காக மட்டும் இங்கு தருகின்றோம். (புஜ்ஜார்கள், அஷ்கியாக்களுக்கு அல்ல).
وأول ليلة من رجب وليلة النصف منه وليلة سبع وعشرين منه وهي ليلة المعراج وفيها صلاة مأثورة فقد قال صلى الله عليه وسلم للعامل في هذه الليلة حسنات مائة سنة (1) فمن صلى في هذه الليلة اثنتي عشرة ركعة يقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة من القرآن ويتشهد في كل ركعتين ويسلم في آخرهن ثم يقول سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا الله والله أكبر مائة مرة ثم يستغفر الله مائة مرة ويصلي على النبي صلى الله عليه وسلم مائة مرة ويدعو لنفسه بما شاء من أمر دنياه وآخرته ويصبح صائماً فإن الله يستجيب دعاءه كله إلا أن يدعو في معصية
 
றஜப் மாதம் பிறை ஒன்றிலும், பிறை பதினைந்திலும், மிஃராஜு டைய இரவான பிறை 27 இருபத்தேழிலும் தொழப்படும் சுன்னாத்தான தொழுகை ஒன்று இருக்கின்றது. அதனைத்   தொழ வே​ண்டு மென வலியுருத்தும் இமாம் கஸ்ஸாலீ றஹ் அவர்கள், இவ்விரவில் நின்று வணக்கம் புரிபவருக்கு நூறு வருடங்கள் நின்று வணங்கிய நன்மைகள் உண்டு என்ற நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொண் மொழியையும் கூறி, அந்தத் தொழுகையின் (கைபிய்யத்)  முறையை கீழ்வரும் விளக்கப்படி சொல்லிக்காட்டுகின்றார்கள்.
மொத்தம் 12 றக்அத்துக்கள். இரு றக்அத்துக்களாக ஆறு சலாம் வரும் விதத்தில்  தொழ வேண்டும். ஒவ்வொரு றக்அத்திலும் அல்ஹம்து சூறா  ஓதிய பின் அல் குர்ஆனில் தெரிந்த சிறிய சூறா ஒன்றையும் இரு றக்அத்திலும் ஓதி வலமையான “நப்ல்’ போன்று தொழுது ஸலாம் சொல்ல வேண்டும். இப்படி 12 றக்அத்துக்கள் தொழுது முடித்தபின் சுப்ஹானல்லாஹி  வல் ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் 100 விடுத்தமும், அஸ்தஃபிருல்லாஹ் 100 விடுத்தமும், ஸலவாத் 100 விடுத்தமும் ஓதி இம்மை மறுமைத் தேவைகளில் தனக்குத் தேவையானவற்றை அல்லாஹ்விடம் கேட்டுப்பிரார்த்தித்து தொழுது முடிக்கவேண்டும்.
இந்தத்தொழுகையானது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லிக்காட்டிய தொழுகை என்றும் பலவீனமான
அறிவிப்புக்கள் கூறுகின்றன.
நிய்யத் :
தொழுபவர்கள், “உஸல்லிஸ் ஸுன்னத  லைலதல் மிஃறாஜி றக்அதைனி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்” என்று நிய்யத் வைத்து தக்பீர் கட்டவேண்டும்.
வள்ள நாயன் அல்லாஹ் என்னையும், உங்களையும், மிஃராஜ் இரவைக் கொண்டாடி
அமல் செய்து வெற்றி பெற்ற தனிப்பெரும் சிறப்புடைய கூட்டத்தில் ஆக்கியருள்
புரிவானாக! ஆமீன்.

 

You may also like

Leave a Comment