“நிய்யத்” வைத்தான் தொழவில்லை. தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை.

July 14, 2015
ஒருவன் ஒரு தொழுகைக்காக “நிய்யத்” வைத்தான். ஆனால் அவன் தொழவில்லை. அவன் ஒரு தொழுகையை தொழுதான். அதற்காக அவன் “நிய்யத்” வைக்கவில்லை. அத் தொழுகை எது? அதற்கான விபரம் என்ன?
ஒருவன் வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வந்த நேரம் “இமாம்” – தொழுகை நடத்தியவர் – இரண்டாவது “றக்அத்”தில் “அத்தஹிய்யாத்” இருப்பில் இருந்தார். தொழ வந்தவன் “ஷாபிஈ” மத்ஹப் சட்டப்படி “உஸல்லீ பர்ழல் ஜும்ஆ” “ஜும்ஆ”வின் பர்ழை தொழுகிறேன் என்று நிய்யத் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தியவருடன் “அத்தஹிய்யாத்” இருப்பில் சேர்ந்து “அத்தஹிய்யாத்” ஓதினான். “இமாம்” தொழுகையை முடித்த பின் – அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ் – என்று “ஸலாம்” சொன்ன பின் – அவன் எழுந்து நான்கு “றக்அத்” தொழ வேண்டுமேயன்றி இரண்டு “றக்அத்” தொழக் கூடாது என்ற ஷாபிஈ மத்ஹபின் சட்டப்படி அவன் நான்கு “றக்அத்” தொழுது முடித்தான்.

இவன் “நிய்யத்”
வைத்தது “ஜும்ஆ” தொழுகைக்காகத்தான். எனினும் அவன் தொழுத “நான்கு றக்அத்” ளுஹ்ர் தொழுகையேயாகும்.
“ஜும்ஆ” தொழுகைக்காக “நிய்யத்” வைத்தான் “ஜும்ஆ” தொழவில்லை. “ளுஹ்ர்” தொழுதான் அதற்காக “நிய்யத்” வைக்கவில்லை.
நான்கு “அத்தஹிய்யாத்” இருப்புக்கள் யாருக்கு எந்த தொழுகையில் இடம் பெறலாம்?
நான்கு “றக்அத்”துகள் உள்ள தொழுகை மூன்று. அவை ளுஹ்ர், அஸ்ர், இஷாஉ. இவை ஒவ்வொன்றிலும் இரண்டு “அத்தஹிய்யாத்” இருப்புக்கள் உள்ளன. மூன்று “றக்அத்”துகள் உள்ள தொழுகை ஒன்று மட்டும்தான். அது “மக்ரிப்” தொழுகை. இதில் இரண்டு “அத்தஹிய்யாத்” இருப்புக்கள் உள்ளன. இரண்டு “றக்அத்” உள்ள தொழுகை “ஸுப்ஹ்” தொழுகை. இதில் ஓர் “அத்தஹிய்யாத்” இருப்பு உண்டு.
எனினும் மேற்கண்ட ஐவேளைத் தொழுகைகளில் ஒரு தொழுகையில் மட்டும் நான்கு “அத்தஹிய்யாத்” இருப்புக்கள் இருக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் உண்டு. அது எந்தத் தொழுகை? அதற்கான சந்தர்ப்பம் எது?

(விடை
விரைவில்) 

You may also like

Leave a Comment