நபீ புகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்

November 14, 2015
ஸபர் மாத தலைப்பிறை பிறந்து விட்டாலே நாம் அடையும் சந்தோசத்திற்கு அளவேயில்லை… ஏனெனில் அகிலத்தின் அருள் ஜோதி, மதீனத்து மாநபீ முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பமாவதாலேயே… அந்த வகையில் இவ்வருடமும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நபீபுகழ் காப்பியம் புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 13.11.2015 வெள்ளிக்கிழைமை அன்று இஷாத் தொழுகையின் பின் ஆரம்பமானது.
இவ்வருடம் ஸபர் மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இரவுகளில் இஷாத் தொழுகையின் பின்னர் அண்ணலார் பேரிலான வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நடைபெறும்.
இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பி்த்து, அண்ணலாரின் புகழ்பாட அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

************************
மனாராவுக்கான வேலைகள் ஆரம்பம்
தௌஹீதின் தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டடப் பணிகளில் மூன்று குப்பாக்களுக்கான வேலைகள் நிறைவடைந்துள்ளதையடுத்து தற்போது அழகொளிரும் மனாராவுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிகழ்வின் பின்னர் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் துஆப்பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.

மாஷா அல்லாஹ்

You may also like

Leave a Comment