Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபியாக்களின் ஜாடை

ஸூபியாக்களின் ஜாடை


 – ஷெய்குனா மிஸ்பாஹீ –

الإشارة : هي ما يَخفى
عن المتكلّم كشفُه بالعبارة . لدِقَّةِ ولَطافةِ 
معناه ، وعلوم الصّوفية إشاراتٌ . 
غَيرةً منهم على تلك العلوم أن تَشِيْع
فى غيرِ أهلِها ، ويقول الشعراني رحمه الله فى “اليواقيت والجواهر” إنّ
السبب الذي من أجله اسْتَخْدَمَ الصّوفية الإشارتِ ، هو تَجَنُّدُ رَميِهم بالكفر
، فالفقيهُ إذا لم يُوفَّق قيل إنه أخطأ. أما الصوفيّ فيُقال إنّه كَفَرَ .
(الألفاظ55) (النادرات العينيّة ص68)
ஸூபி மகான்கள் தமது “ஸூபிஸ” அறிவை – ஞானத்தை – தெளிவான வசனங்களில் பேசுவது மிகக் குறைவு. தம்மோடு இருப்பவர்கள் “ஸூபிஸ” ஞானக் கலையோடு தொடர்புள்ளவர்களாக இருந்தால் மட்டும் தெளிவாகப் பேசுவார்கள். அவர்களோடு இருப்பவர்களில் ஒருவனாவது இக்கலையோடு தொடர்பில்லாதவனாக இருந்தால் “இஷாறா” ஜாடையாகவும், சூசகமாகவுமே பேசுவார்கள்.
“ஸூபிகளும், “ஆரிபீன்களும் இவ்வாறு பேசியதற்கான காரணம் “ஸூபிஸ” ஞானத்தை வெளிப்படையாகப் பேசுதல் கூடாது என்பதற்காக அல்ல. இந்த ஞானத்தோடு தொடர்பில்லாத – இது பற்றி எந்த ஒரு விளக்கமும் தெரியாத – ஒருவனாவது இருக்கும் சபையில் இந்த ஞானத்தை பேசினால் அதை அவன் தவறாக புரிந்து கொண்டு தன்னைப் போல் எந்த ஒரு தொடர்பும் இல்லாத, “ஸூபிஸ” விளக்கம் தெரியாதவர்களிடம் தவறாகக் கூறி குளப்பத்தை ஏற்படுத்தி விடுவான் என்று பயந்ததேயாகும். “ஸூபி”கள் தாம் கூறும் சரியான கருத்தை பிறர் தவறாகப் புரிந்து கொள்வதை விரும்புவதில்லை.
இதனால் ஒரு சபையில் விஷயம் தெரியாத ஒருவனாவது இருந்தால் “ஸூபி” மகான்கள் தவறாகப் பேசாமல் அவன் விளங்கிக் கொள்ளாத வகையில் ஜாடையாகப் பேசுவார்கள். இவ்வாறு பேசினால் தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லாமற் போய் விடும். “பத்வா” வியாபாரிகளுக்கும் வேலை குறைந்து விடும்.
தமது கருத்துக்களை எவரும் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே குறித்த ஞானத்தை ஜாடையாகப் பேசி வந்தார்கள்.
நான் ஞான மகான் ஒருவரிடம் சென்றேன். அவர் தனது “முரீது”களுடன் – ஞானமற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அந்நேரம் “ஸூபிஸ” ஞானம் தொடர்பாக ஒன்றும் தெரியாதவனாக இருந்தேன். ஞானமகான் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவரின் பேச்சில் இருந்து நான் எதையும் விளங்கிக் கொள்ளவில்லை. எனினும் அவர் ஏதோ ஒரு தத்துவம் பேசுகிறார் என்று மட்டும் விளங்கிக் கொண்டேன்.
அவர் பேசிய பாணியிலேயே இங்கு நான் எழுதிக் காட்டுகிறேன்.
(அன்புள்ள முரீதுகளே! நீங்கள் அல்லாஹ் – அல்லாஹ் என்று “திக்ர்” செய்கிறீர்கள். இச்சொல் “முப்ததா” என்று 
சொன்னால் “கப்ர்” எங்கே? அது எவ்வாறிருக்கும்? அது “கப்ர்” என்று நீங்கள் சொன்னால் “முப்ததா” எங்கே? அது எவ்வாறிருக்கும்?)
மகான் அவர்கள் மேற்கண்டவாறு பேசிய நேரம் சபையில் சுமார் பதினைந்து பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் மகான் அவர்களின் சிஷ்யர்கள். நான் மட்டுமே மௌலவியாக இருந்தேன்.
மகான் அவர்கள் மேற்கண்ட பாணியில் பல அறபுச் சொற்கள் கலந்து ஜாடையாக சொன்ன கருத்தை சபையில் இருந்த ஒருவர் கூட விளங்கிருப்பதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு பேசுதல் “இஷாறா” என்று சொல்லப்படும். “ஸூபி” மகான்கள் தமது கொள்கையை விளங்கிக் கொள்ளாதவனை “அஜ்னபீ” அன்னியன் என்று சொல்வார்கள். அவன் இருக்கும் சபையில் அவன் மட்டும் “இஷாறா” ஜாடையாக பேசும் போக்கை கையாள்வார்கள்.
“ஸுபி” மகான்கள் “இஷாறா” ஜாடை பாணியை கையாண்டது தமக்கு “பத்வா” வியாபாரிகள் “குப்ர்” மதமாற்ற “பத்வா” வழங்காமல் இருப்பதற்காகவும், அவர்களாலோ அல்லது மற்றவர்களாலோ தமது உயிருக்கு “ஆபத்து” ஏற்படாமல் இருப்பதற்காகவும், முஸ்லிம்களிடையே கொள்கைக் குளப்பம் ஏற்படாமல் இருப்பதற்காகவுமேயாகும்.
இதனால்தானோ என்னவோ “ஸெய்யிதுத் தாயிபா” “ஸூபிகளின் தலைவர்” என்று ஞான மகான்களால் புகழப்படுகின்ற ஜுனைத் அல் பக்தாதீ (றஹ்மதுல்லாஹ்) அவர்கள் தங்களைச் சந்திக்க வருவோரை வீட்டினுல் எடுத்துக் கொண்டு அதன் கதவை தாளிட்டு திறப்பை தனது துடையில் வைத்துக் கொண்டு “ஸூபிஸ” ஞானம் 
பேசியுள்ளார்கள்.
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஅறானீ றஹ்மதுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூலில் (“ஸூபி”) மகான்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாகச் சொல்லாமல் ஜாடையாகச் சொன்னது விஷயம் தெரியாதோர் தம்மைக் (காபிர் – முர்தத்) என்று சொல்லாமல் இருப்பதற்கேயாகும். ஏனெனில் “புகஹாஉ” மார்க்கச் சட்ட மேதைகளில் ஒருவர் தவறு செய்தாராயின் – ஒரு சட்டத்தை பிழையாகச் சொல்வாராயின் அவர் தவறு செய்தார் என்று மட்டும்தான் சொல்லப்படும். (அவர் “காபிர்” ஆகி விட்டார் என்று சொல்லப்பட மாட்டாது) ஆனால் “ஸூபி” மகான் ஒருவர் ஒன்றைப் பிழையாகச் சொன்னாராயின் அவர் மதம் மாறி விட்டார் என்று சொல்லப்படும்.
அல் அல்பாள் – 55
அந்நாதிறாதுல் ஐனிய்யா 68
“ஸூபி” மகான்கள் தாமறிந்த, அனுபவித்த ஸுபிஸ ஞானத்தை பகிரங்கமாகச் சொல்லாமலும், தெளிவாகக் கூறாமலும் ஜாடை வழியை கையாண்டதற்கான காரணங்கள் முன்னால் கூறப்பட்டுள்ளன.
எனினும் மேற்கண்ட காரணங்களைக் கடந்து அவற்றை கருத்திற் கொள்ளால் “ஸூபிஸ” ஞானத்தை – இறையியலை – மலை உச்சியில் நின்று பகிரங்கமாக பிரகடனம் செய்தவர்களும் “ஸூபீ” மகான்களில் உள்ளனர்.
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (றழியல்லாஹு அன்ஹு)        அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ (றழியல்லாஹு அன்ஹு) அஷ்ஷெய்கு மஜ்துத்தீன் அல் பைறூசா பாதீ (றழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் போன்று.
“ஸுபீ” மகான்கள் தமது ஞானத்தைப் பகிரங்கப் படுத்தாமல் விட்டதால் அதைப் பகிரங்கமாக்குவது “ஹறாம்” என்றோ, “மக்றூஹ்” என்றோ கொள்ள முடியாது. இந்த ஞானம் மலை உச்சியில் நின்று பிரகடணம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்வாறுதான் செய்தார்கள்.  ஸூபிஸ
ஞானம், வஹ்ததுல் வுஜூத், இல்முல் இர்பான், இல்முல் மஃரிபா, ஏகத்துவ ஞானம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுவது இறையியற்கல்வியே.

ஒரு முஸ்லிம் தன்னால் முடிந்த வரை இறையியல் பற்றித் தெரிந்து கொள்வது அவனின் கடமையாகும். 

 – முற்றும் –
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments