கொள்கை விளக்கக் கருத்தரங்கு

May 18, 2015
மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் ஸூபிஸ, சுன்னத வல் ஜமாஅத் கொள்கை சார்ந்த இளைஞர்கள், மாணவர்களுக்கான கொள்கை விளக்கக் கருத்தரங்கு 17.05.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி. 01.30 மணிவரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மௌலவீ MSA. ஸாஹ்ஜஹான் றப்பானீ அன்னவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தின் உறுப்பினர் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA Hons. அன்னவர்களும், மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தின் தலைவர் மௌலவீ MJM.ஜஹானீ றப்பானீ அன்னவர்களும் விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு. சிறப்பு அதிதிகளாக சங்கைக்குரிய உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment