Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திக்ர் மஜ்லிஸ்களில் ஆடி, அசைவது கூடுமா?

திக்ர் மஜ்லிஸ்களில் ஆடி, அசைவது கூடுமா?

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله عن رقص الصّوفيّة عند تواجدهم. هل له أصل؟
فأجاب بقوله: نعم له أصل، فقد روي فى الحديث أنّ جعفربن أبي طالب رضي الله عنه رقص بين يدي النّبيّ صلّى الله عليه وسلّم لمّا قال له أشبهتَ خلقي وخلُقي. وذلك من لذّة هذا الخطاب، ولم ينكر عليه صلّى الله عليه وسلّم، وقد صحّ القيام والرّقص فى مجالس الذّكر والسّماع عن جماعة من أكابر الأئمّة. منهم عزّ الدّين شيخ الإسلام ابن عبد السّلام. 

(الفتاوى الحد يثية صفحة 217)

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் அறிஞர் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களிடம் ஸூபிஸ ஞானிகளுக்கு இறை காதல் ஏற்படும் வேளையில் அவர்கள் நடனமாடுவது தொடர்பாக அதற்கு மார்க்கத்தில் இடமுண்டா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்கப்பட்டது. 
அவர்கள் சொன்ன பதில் –
ஆம். அதற்கு ஆதாரம் உண்டு. ஸெய்யிதுனா ஜஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்கள் தோற்றத்திலும், பண்பிலும் என் போன்று உள்ளீர் என்று சொன்ன போது அவர்களுக்கு முன்னாலேயே ஜஃபர் அவர்கள் நடனமாடினார்கள். அவர்கள் இவ்வாறு செய்தது நபீயவர்களின் மகிழ்ச்சியான செய்தி கேட்டதினாலாகும். நபீ பெருமான் அவர்களின் அச்செயலை – நடனத்தை – நேரில் கண்டும் கூட எந்த மறுப்பும் கூறவில்லை. 

அல்லாஹ்வை “திக்ர்” செய்யும் சபைகளிலும், “ஸமாஉ” அல்லாஹ்வை, நபீகள் நாயகத்தை, அவ்லியாஉகளை புகழ்ந்து பாடும் சபைகளிலும் நடனமாடுவதும், எழுந்து நிற்பதும் ஆகும்.
இவ்வாறு செய்யலாம் என்று இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய, பின்பற்றிச் செயல்படுவதற்குத் தகுதியான பல இமாம்கள் – மார்க்க மேதைகள் கூறியுள்ளார்கள். அவர்களில் “ஷெய்குல் இஸ்லாம்” என்றழைக்கப் படுகின்ற இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் “றஹிமஹுல்லாஹ்” அவர்களும் ஒருவர். 
அல்பதாவல் ஹதீதிய்யாஹ்
பக்கம் – 217
சாரம் – ஆன்மீக உணர்வால், அல்லது ஒரு மகிழ்ச்சியால் ஒருவர் நடனமாடுவது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றேயாகும்.
விபரம் – “றகஸ” என்ற சொல்லுக்கு நடமாடினான் என்று பொருள் வரும். இதற்கு அகராதியில் تنقّل ومشى بتفكّك وخلاعة، تنقّل وحرّك جسمه على إيقاع موسيقيّ أوعلى الغناء – إضطرب இவ்வாறு விபரம் கூறப்பட்டுள்ளது. 
இதன் சுருக்கம் என்னவெனில், ஓர் இசைக் கருவி மூலம் வெளியாகும் இசை கேட்டு அல்லது இசையின்றி ஒரு பாடலை நேரடியாகக் கேட்டு துள்ளிக் குதித்தல், உடலை அசைத்தல், உடலை வளைத்து அங்குமிங்கும் நடனமாடுதல் என்பன ஆகுமான விடயங்களாகும். மார்க்கத்தில் “ஹறாம்” விலக்கப்பட்ட இசைகேட்டு மேற்கண்டவாறு செய்தல் கூடாது. விலக்கப்பட்ட இசை எது? அனுமதிக்கப்பட்ட இசை எது? என்பது தொடர்பாக “பிக்ஹ்” மார்க்கச் சட்டம் கசடறக்கற்ற, வஹ்ஹாபி அல்லாத ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றிக்கும், மெயினுக்கும் பாடுகின்ற, “டபிள் கேம்” அடிக்கின்ற வஹ்ஹாபிகளிடம் கேட்டு வழிகெட்டு விடலாகாது.  
பொதுவாக ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது அவன் துள்ளிக் குதிப்பது – நடனமாடுவது – எந்த வகையிலும் மாரக்கத்திற்கு முரணாகாது. எனினும் இதைச் சரி காண வேண்டிய வஹ்ஹாபிகள் இது “ஷிர்க்” என்றும், “பித்அத்” என்றும் கூறுவது அவர்கள் அங்கோடையில் ஓடி உலாவ வேண்டியவர்கள் என்பதற்கு வெளிப்படையான ஓர் ஆதாரமேயாகும். 
“வஹ்ஹாபிஸம்” பிறந்த நாடான சஊதியில் அறபிகள் கையில் வாளேந்தியவர்களாக ஆடிப்பாடுவதை – நடனமாடுவதை தொலைக்காட்சி மூலம் நாம் பார்க்கிறோம். இது “பித்அத்” ஆன செயலென்று சொல்ல வேண்டியவர்கள் அவர்களாயிருக்க பேய் ஓணானும், பெருச்சாலியும் இதை கடுமையாக கண்டிப்பது இவர்கள் தெஹிவளைச் சாலையில் இருக்க வேண்டியவர்கள் என்பதற்கும் மறுக்க முடியாத ஆதாரமேயாகும். 
அல்லாஹ்வை “திக்ர்” செய்யும் போதும், பெருமானானாரைப் புகழ்ந்து பாடும் போதும், மற்றும் அவர்களின் வழி வாழ்ந்து “விலாயத்” ஒளித்தனம் பெற்றவர்களான “அவ்லியாஉ”களைப் புகழ்ந்து பாடும் போதும் நடனமாடுவது – ஆடி அசைந்து – மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையே ஆகும். 
(வஹ்ஹாபிகளின் மார்க்கத்தில் அல்ல)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments