ஊடக அறிக்கை

March 16, 2016
அஸ்ஸலாமு அலைக்கும் 

காத்தான்குடி – 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த  யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம்.

இது தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த சிறுமிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரத்திற்கு சட்டநடவடிக்கை எடுக்குமாறும், குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாம் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றோம்.
இது தொடர்பாக எமது நம்பிக்கைப் பொறுப்பின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ், MIM. ஜெஸீம் (JP) அவர்கள் மூலம் 13-03-2016ம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தோம்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு 28-03-2016 வரை சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மௌலவீ MMA. மஜீத் றப்பானீயை 15-03-2016 ம் திகதி முதல் எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் சகல பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்துள்ளோம்.
தலைவர், செயலாளர்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் 
வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
காத்தான்குடி

You may also like

Leave a Comment