நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்

June 17, 2015ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
لِلصَّائِمِ
فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ 
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று. அவன் நோன்பு திறக்கும் போது. மற்றது அவன் தனது “றப்பு” அல்லாஹ்வைச் சந்திக்கும் போது என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

“நோன்பு” என்ற வணக்கம் செய்தவன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பான் – தரிசிப்பான் – அந்நேரம் அவன் மகிழ்ச்சி அடைவான். இந்த மகிழ்ச்சி அளவற்றது. வர்ணிக்க முடியாதது. ஓர் அடியானுக்கு அல்லாஹ்வை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவனுக்கேற்படும் மகிழ்ச்சியை யாரால்தான் வர்ணிக்க முடியும். ஏனெனில் அது பேரின்பம். சிற்றின்பம் அல்ல.
அவன் மறுமையில் அல்லாஹ்வை எவ்வாறு தரிசிப்பான்? ஏதேனும் உருவத்தில் – வடிவத்தில் – தரிசிப்பானா? அல்லது உருவமின்றி தரிசிப்பானா? என்பது தொடர்பாக இங்கு விளக்கம் எழுத நான் விரும்ப வில்லை. தரிசிப்பான் என்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இது தொடர்பாக விளக்கம் தேவையானோர் இறையியற் கலையில் ஆழமான அறிவுள்ள மகான்களைச் சந்திக்க வேண்டும். செல்லாக்காசுகள்
போன்றவர்களைச் சந்தித்து தவறான விளக்கம் பெற்றுக் கொள்ளக் கூடாது.
நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரம் ஏற்படும் மகிழ்ச்சி என்ன? எதனால்? என்பதற்கு அரை குறைகள் ஒரு விளக்கமும், நிறைவுள்ளோர் இன்னொரு விளக்கமும் சொல்கிறார்கள்.
அரை குறைகள் சொல்லும் விளக்கம் என்னவெனில், நோன்பு நோற்றவன் அதை திறப்பதற்கு ஆயத்தமாகும் போது அவனுக்கு முன்னால் கோழிக்கஞ்சி, பெட்டிஸ், கட்லிஸ், பேரீத்தம்பழம், தெம்பிலி முதலானவையும், இன்னும் இவையல்லாத பல்வகை உணவுகளும், இனிப்புப் பண்டங்களும் வைக்கப்படுகின்றன. அன்று பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலுமிருந்த நோன்பாளி இவற்றைக் காணும் போது மகிழ்ச்சி ஏற்படாமல் இருக்குமா? இந்த மகிழ்ச்சியை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்
என்று குறை குடங்கள் கூறுகின்றன.
குறை குடங்கள் கூறும் விளக்கத்திற்கும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்துக்கும்
வெகுதூரம். குறை குடங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களை தம்போன்ற குறை குடமாக கணித்ததே அவர்கள் மேற்கண்டவாறு கூறுவதற்கு காரணமாகும். குறை குடங்களின் இலட்சியம் பெருமானாரைக் குறை குடமாகப் படம் பிடித்து மக்களுக்கு காட்டுவதேயாகும்.
“நப்ஸ்” என்ற மனவெழுச்சிற்கு – மன ஆசைக்கு – ஒரு மனிதன் அடிமையாகி, அது கேட்டதையெல்லாம்
கொடுத்து அதை சக்தியுள்ள மிருகமாக ஆக்கி விடாமல் அதற்கு மாறு செய்து அதன் சக்தியை குறைத்து அதைப் பலம் குறைந்ததாக ஆக்க வேண்டும் என்ற இலட்சியம் உள்ள நபீ பெருமானார் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நப்ஸ்” என்ற மன ஆசைக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நோன்பாளிக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்று சொல்வார்களா?
“நப்ஸ்” என்ற பேய்க்கு அது விருப்புகின்றவற்றையெல்லாம் கொடுக்கும் போது அது இன்னும் பலம் பெற்று அவனை – நப்ஸ் உடயவனை – கொன்று விடவும் சாத்திய முண்டு.

தொடரும்…..

You may also like

Leave a Comment