மிஃறாஜ் இரவும், ஸலவாத் மஜ்லிஸும்

May 18, 2015
றஜப் பிறை 27ம் இரவான 16.05.2015 அன்று (சனிக்கிழமை) மிஃறாஜுடைய இரவை கண்ணியம் செய்யும் முகமாக அன்று காத்தான்குடி- 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் விஷேட ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகள் தரிசன நிகழ்வும் நடைபெற்றது.

அன்றைய தினம் பி.ப 04.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணிவரை பெண்களுக்கும், இரவு 09.00 மணிதொடக்கம் 11.30 மணிவரை ஆண்களுக்கும் அகிலத்தின் பேரொளி, பேரொளிப்பிழம்பு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
விஷேடமாக இரவு 08.00 மணிதொடக்கம் 09.00 மணிவரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும் நடைபெற்றது.
இறுதியாக இனிப்புப் பண்டங்கள் விநியோகம் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

You may also like

Leave a Comment