Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சிவாக், மிஸ்வாக். (பற்சுத்தம்)

சிவாக், மிஸ்வாக். (பற்சுத்தம்)

ஆக்கம் – புஸ்தானுல்
ஆஷிகீன்
 
  
சுத்தம் ஈமானின்
பாதியாகும் என அண்ணல் நபி ஸல் அவர்கள் நவின்றுள்ளார்கள்
 
சுத்தம் என்பது அகச்சுத்தம், புறச்சுத்தம் என்று
இரண்டாகவும்  உடல், உடை, உள்ளம் என விரிவு
படுத்தி மூன்றாகவும் சொல்லப்படுகின்றது. ஒருவர் இறைவனை வழி படுவதாக இருந்தால்
அவரிடம் இம்மூன்றுடன் சேர்த்து இடச்சுத்தத்தையும் கவனிக்கப்படும் . தான்தொழுமிடம் “நஜாசத்”
எனும் அசுத்தம்  உடையதாக இருப்பின் அவரின்
தொழுகை பாதிலானதாக (வீணானதாக) ஆகிவிடும்.

எனவே உடை சுத்தம் பேணப்பட்ட பின்னர் தன்  உடலின் சுத்தத்தை கட்டாயம் கவனிக்க வேண்டும். அதில்
தன்னுடைய அவயவங்களான சகல உள்,வெளி உறுப்புகளும் உள்ளடங்கும். அதில் பற் சுத்தம்
மிக முக்கியமான ஒன்றாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று
நான் கருதியிராவிட்டால்,
(எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.”  என்று கூறினார்கள்.
இதிலிருந்து அதன் முக்கியத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய சம காலத்தை நாம் சீர் தூக்கிப்பார்த்தால்
தன்னுடைய எதிகாலத்தை மத்திபமாக்கியே
ஒவ்வொரு மனிதனின் காலமும், நேரமும் செலவாகின்றதே தவிர பற் சுத்தம் நபி
வழியில் எப்படி அமைந்திருந்தது என்பதை கவனித்துப் படிப்பினை பெறுவதில் அசட்டையாக
ஆகிவிடுகின்றர்.
சுன்னத் வல் ஜமாஅத் மக்களாகிய எம்மிடமும் அது (மிஸ்வாக்)
மிக குறைவாகிவிட்டது. சொற்,செயல், அங்கீகாரம் போன்றதை பின்பற்றுவதே உண்மையான
பின்பற்றல் ஆகும்.
ஒன்றை எடுத்து மற்றதை விடுவதானது முறையான பின்பற்றலாகாது.
பற்சுத்தத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எப்படி? பேணி வந்தார்கள்.  ஷாபீ மார்க்கச்சட்டம் அது பற்றி கூறும்
கருத்துக்கள் என்ன? விஞ்ஞானம் மிஸ்வாக் (பற்சுத்தம்) பற்றி கூறும் கருத்து என்ன? என்பவற்றை
நாம் அறிந்து அதன் படி நடப்பது
சாளச்சிறந்தது ஆகும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிஸ்வாக்  எனப்படும் இவ்விடயத்தில் (பற் சுத்தம்
பேணுவதில்) கடும் பிராயத்தனம் காட்டியுள்ளார்கள். அவர்களின் மரணப்படுக்கையின்
போதும் அதையவர்கள் விட்டு விடவில்லை. இந்த ஹதீதை அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா
அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
என் வீட்டில் என்னுடைய முறைக்குரிய நாளில்
(வந்திருந்த போது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த
நிலையில்) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தார்கள். அல்லாஹ் என்னுடைய
எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் ஒன்று சேர்த்திருந்தான். (எப்படியெனில்) நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (கடுமையான நோய்
வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல்
துலக்கும் – மிஸ்வாக் – குச்சியைக் கொண்டு வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக
இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால்
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன்.
நூல் புகாரீ ஷரீப்.
இன்னுமோர் அறிவிப்பில்
மிஸ்வாக் குச்சியை உவமானப்படுத்த கையாண்டிருப்பதையும்  காணலாம்.
عن معبد بن
كعب السلمي عن أخيه عبد الله بن كعب عن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم
قال من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة فقال له
رجل وإن كان شيئا يسيرا يا رسول الله قال وإن قضيبا من أراك
அபூஉமாமா அல்ஹாரிஸீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை
அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள். அப்போது
ஒரு மனிதர், “அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா,
அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!” என்று, பதிலளித்தார்கள்.
இந்த  ஹதீஸ்  மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
நூல் முஸ்லிம்.
 
சிவாக், மிஸ்வாக்
இவ்விரு சொற்களுக்கும் பற்களை சுத்தம் செய்யும் குச்சி என்றே பொருளாகும்.
(அல்முன்ஜித் 365 ம் பக்கம்.)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பற்களை
அறாக் , உகாய் போன்ற மரத்தின் (ஊத்) குச்சியினால் சுத்தம் செய்துள்ளார்கள். அதனையே
நாம் மிஸ்வாக் செய்தார்கள், அல்லது சிவாக் செய்தார்கள் என்று கூறுகின்றோம்.
மிஸ்வாக் செய்வது தொடர்பாக வந்துள்ள
சில நபிமொழிகள்.
 وعن أنس رضي الله عنه قال: قال
رسول الله صلى الله عليه وسلم: (لقد أكثرت عليكم في السواك).
رواه البخاري
 
சிவாக் செய்யும் விடயத்தில்
உங்கள் மீது  அதிகப்படுத்தி இருக்கிறேன். .
நூல் புகாரீ
وعن ابن عباس رضي الله عنهما قال: (كان رسول
الله صلى الله عليه وسلم يصلي بالليل ركعتين ركعتين، ثم ينصرف فيستاك)
 
இப்னு அப்பாஸ்
றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் நபி ஸல் அவர்கள் இரவு நேரத்தில் இரண்டு, இரண்டு
ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் அதிலிருந்து திரும்பி மிஸ்வாக் (பற்சுத்தம்)
செய்வர்களாக இருந்தார்கள்.
நூல்
அல்ஹாவீ அல்கபீர்
وعن عائشة رضي الله
عنها أن النبي صلى الله عليه وسلم (كان إذا دخل بيته بدأ بالسواك)،
رواه مسلم
நபி ஸல் அவர்கள்
வீட்டினுல் நுழைந்தால் மிஸ்வாக் செய்வது கொண்டு ஆரம்பிப்பவர்களாக இருந்தார்கள்.
என  அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா  அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்  முஸ்லிம்
وعن عمران رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: (أنه كان لا ينام إلا
والسواك عنده، فإذا استيقظ بدأ بالسواك).
நபி ஸல் அவர்கள்  மிஸ்வாக் குச்சி அவர்களிடம் இருக்கும்
நிலமையில் அன்றி  இரவில் உறங்கமாட்டார்கள்.
காலையில் எழுந்தால் “சிவாக்” செய்வார்கள்.
அறிவிப்பவர் இம்ரான் றழி அன்ஹு அவர்கள்.                                                                                                                  நூல் அல்ஹாவீ அல்கபீர்
وعن زيد بن خالد الجهني قال: (ما كان رسول الله صلى الله عليه وسلم يخرج من
بيته لشيء من الصلوات حتى يستاك).
 
 நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
மிஸ்வாக் செய்யும் வரை எந்தத் தொழுகைக்காக்கவும் தனது  வீட்டை விட்டும்  வெளியேறமாட்டார்கள்.
அறிவிப்பாளர்.
சைத்துப்னு  காலிதுல் ஜுஹனீ
 நூல்: அல்ஹாவீ அல் கபீர்
وَرُوِيَ عَنِ
النَّبِيِّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّم أَنَّهُ قَالَ: ” طَهِّرُوا أَفْوَاهَكُمْ بِالسِّوَاكِ، فَإِنَّهَا
مَسَالِكُ القرآن “
சிவாக் கொண்டு உங்களது “வாய்களை”
துப்பரவு செய்யுங்கள்.நிச்சயமாக அது அல் குர்ஆன் செல்லும் பாதைகளாக இருக்கின்றன.
عَنِ ابْنِ جُبَيْرٍ، عَنِ النَّبِيِّ –
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ – أَنَّهُ قَالَ: ” مَا زَالَ جِبْرِيلُ
يُوصِينِي بِالسِّوَاكِ حَتَى خَشِيتُ أَنْ يَدْرِدَنِي “. أَيْ: تَتَنَاثَرُ
أَسْنَانِي،
எனது பற்கள் கீழே உதிர்ந்து (விழுந்து) விடுமோ என்று
நான் அச்சம் கொள்ளும் வரை “சிவாக்”(பற்சுத்தம்)கொண்டு வானவர் ஜிப்ரீல் அவர்கள்
எனக்கு “வஸிய்யத்” செய்பவர்களாக இருந்தார்கள். என நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, இப்னு ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ
لِلرَبِّ
“சிவாக்” செய்வது வாயை சுத்தப்படுத்தும்,
இறைவனின் திருப் பொருத்தத்தை பெற்றுத்தரும். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் நவின்றார்கள்.
நூல்   –
முஸ்னத் அஹ்மத்
قَالَ النَّبِيُّ –
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ -: ” اسْتَاكُوا عَرْضًا وَادَّهِنُوا
غِبًّا وَاكْتَحِلُوا وِتْرً
அகலத்தால்
‘சிவாக்” செய்யுங்கள்,! ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு எண்ணை வையுங்கள்.!,
ஒற்றைப்படையாக கண்ணுக்கு “சுறுமா” இடுங்கள்!, என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்.
நூல் ஷர்ஹு முக்தசறுல் முசனீ
 
 
எவ்வாறு – மிஸ்வாக்செய்வது?
 
وهو يقول: أُع أُع والسواك في فيه كأنه يتهوع)، وهذا التهوع يكون إذا أدخل
الإنسان السواك إلى داخل فمه لتنظيف أسنانه أو لسانه.

நான் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கும் போது உவ்,
உவ் என்று சொல்வதை நான் கண்டேன். குச்சியோ அவர்களது வாயில்
இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போல் இருந்தது.

புகாரி-244:
மிஸ்வாக் செய்வதில் ஷாபியீ மார்க்க
சட்டம்
நஜீஸான குச்சி , விஷத்தன்மை உடையது, கரி, செங்கல், மண்
ஆகியவை அல்லாத சொர சொரப்பானபொருளினால்
சுன்னத்துடைய நிய்யத்தில் மிஸ்வாக்குச் செய்வது சுன்னத்தை உண்டாக்கும்.
நல்ல  மணமுள்ள ஒரு சான் அளவுக்கு மேல்
போகாத ஒரு காய்ந்த குச்சியைத் தண்ணீரில் நனைத்து
மிஸ்வாக்குச் செய்வது ஏற்றமானதாகும். அவற்றில் உகா மரத்தின் வேர், பிறகு
அதன் குச்சி, பிறகு அதிக சொரசொரப்பான பயன் தரும்
குச்சி சிறப்பானதாகும்.
பிறருடைய மிஸ்வாக்கை  அவருடைய ஒப்புதல் இன்றி எடுத்து துலக்குவது
ஹறாமாகும். அவருடைய ஒப்புதல் கிடைத்தாலும் அதைக்கொண்டு துலக்குவது மக்றூஹ் ஆகும்.
அதனால் மறதி உண்டாகும். நோன்பாளி அல்லாதவன் மிஸ்வாக்குச் செய்யும்போது
முதலில்  ஏற்படும் உமிழ் நீரை கொஞ்சம்
விழுங்குவது  சுன்னத்தாகும். அது
பலநோய்களுக்கு மருந்தாகும். என ஹதீதில் வந்துள்ளது என மஙானீ எனும் கிரந்தத்தில் ​
111ம் பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. மிஸ்வாக் செய்த பின்னால் மிஸ்வாக்கை
சப்புவதும்  சப்பிய எச்சிலை விழுங்குவதும்
மக்ரூஹ் ஆகும்.
“மிஸ்வாக் குச்சியை தன் காதின் மேல்
அல்லது  தலைப்பாகையில் வைத்துக்கொள்வதில்
தவறில்லை. ஆனால் தரையில் படுக்கவைப்பது மக்ரூஹ். மிஸ்வாக்கைத் தரையில்
படுக்கவைத்து  அதனால் அவனுக்கு பைத்தியம்
பிடித்தால்  அவன் தன்னையல்லாமல் வேறு
எவரையும் குறை கூறவேண்டாம்” என்று ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

نَعَمْ يُكْرَهُ بِمِبْرَدٍ وَعُودِ رَيْحَانٍ يُؤْذِي، وَيَحْرُمُ بِذِي سُمٍّ وَمَعَ ذَلِكَ يَحْصُلُ بِهِ أَصْلُ السُّنَّةِ. 
كتاب «تحفة المحتاج في شرح المنهاج» لابن حجر الهيتمي
மாதுளம் குச்சி, துளசி போன்ற வாசனைச் செடிகளின் குச்சி போன்ற வற்றாலும், அரத்தினாலும், மிஸ்வாக் செய்வது மக்ரூஹ். “நஜீஸ் உள்ள குச்சி, விஷத்தன்மையுள்ள குச்சி போன்றவற்றினால் மிஸ்வாக்குச் செய்வது ஹறாம் என்றிருந்தாலும், அவற்றினால் செய்தால் சுன்னத் உண்டாகிவிடும்.”.                                                   
துஹ்பதுல் முஹ்தாஜ் பீ ஷறஹில் மின்ஹாஜ்
(ஆசிரியர்: இப்னுஹஜர் ஹைதமீ)
“மிஸ்வாக் செய்த பின் அதைக் கழுவாமல் கீழே வைப்பது மக்ரூஹ்” என்பதாக  ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு வைத்தால்  அதனைக் கொண்டு ஷைத்தான் மிஸ்வாக் செய்வான்  என்றும் கூறியுள்ளார்கள்.
மிஸ்வாக்குச் செய்து துப்பிய உமிழ் நீரை மறைத்து விட வேண்டும்.  இல்லாவிடில் ஷைத்தான்  அதைக்கொண்டு விளையாடுவான் என்று சிலர் கூறுகின்றார்கள். அந்த எச்சிலைத் தன் உடைகளின் மீது துப்பிக் கொள்வதால் ஆபத்து உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிஸ்வாக்கு குச்சியின் இரண்டு  தலைப்புகளைக் கொண்டும்  பல் துலக்குவது  மக்ரூஹ் ஆகும்.
وَأَنْ لَا يَسْتَاكَ بِطَرَفِهِ الْآخَرِ،
பெரு விரலையும், சுண்டு விரலையும் குச்சிக்குக் கீழே
வைத்து மற்ற மூன்றுவிரல்களையும் மேலே வைத்து மிஸ்வாகைப் பிடிப்பது சுன்னத் ஆகும்
وَأَنْ يَجْعَلَ خِنْصَرَهُ وَإِبْهَامَهُ تَحْتَهُ وَالْأَصَابِعَ الثَّلَاثَةَ الْبَاقِيَةَ فَوْقَهُ .
விரல்கள் முழுவதையும் கொண்டு மூடிப்பிடிப்பது மக்ரூஹ் ஆகும். அவ்வாறு பிடித்துத் துலக்குவது மூல வியாதியை உண்டாக்கும் என கூறப்பட்டுள்ளது. பல் துலக்கிய மிஸ்வாகை கழுவாமல் வைப்பது மக்ரூஹ் ஆகும்.
வுழூவில் இரண்டு தடவை மிஸ்வாக் செய்வது சுன்னத் ஆகும். வுழூவுக்காக  பிஸ்மி சொல்லும் முன் ஒரு தடவை. அது பிஸ்மிக்காக செய்யப்படும் மிஸ்வாக்காகும். பிறகு முன் கை கழுவிய பின்  வாய் கொப்பளிக்கும் முன் இரண்டாவது தடவை. இது வுழூவுக்காக செய்யப்படும் மிஸ்வாக்காகும்.
மிஸ்வாக்குச் செய்வதற்கு “பிஸ்மில்லாஹ்” சொல்வது அவசியமாகவும், அதுபோல் பிஸ்மில்லாஹ்வுக்கு “மிஸ்வாக்” அவசியமாகவும் இருப்பதால், வுழூவுடைய சுன்னத்துக்களில் செயல் அளவில் உள்ள  முதல் சுன்னத்து மிஸ்வாக்குச் செய்தல் என்பதாகவும், சொல் அளவில் உள்ள முதல் சுன்னத்து “பிஸ்மில்லாஹ்” சொல்வது என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மிஸ்வாக் செய்வதால்  எழுபது  வகையான பலன்கள் இருப்பதாக அறிஞர்களில் சிலர் (வைத்திய நிபுணர்கள்) எழுதியுள்ளனர். உணவை செறிக்கச்செய்தல், சளியை  முறித்தல், இரத்தத்தை சுத்தப்படுத்தல், பித்தம் தொடர்பான  பலநோய்களைக் குணப்படுத்துதல், போன்ற பல வகையான பலன்கள் அதனால் உண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது.
قَالَ النَّبِي عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام من أكل البغبغة وَقذف الوغوغة وَاسْتعْمل الخشبتين أَمن من الشوس واللوص
والعلوص.
(“சுஃப்ராவில்) விரிப்பில் விழுந்ததை எடுத்துச்சாப்பிட்டு, (இரு குச்சிகளை உபயோகித்தால் அதாவது) பல் குத்தும் குச்சியைக் கொண்டு பல்லிடுக்கிலுள்ளதை எடுத்தெறிந்து, மிஸ்வாக்கை கொண்டு பல் துலக்கினால், கண்வலி, காதுக்குத்தல், வயிற்று வலி ஆகிய நோய்கள் அணுகா” என்றும் அருளப்பட்டுள்ளது.
மிஸ்வாக் செய்தல்- சுன்னத்தான  இடங்கள்.
1. ஒவ்வொரு தொழுகையிலும் தக்பீர் கட்டுவதற்குச் சற்று முன்.
2. ஜனாஸாத் தொழுகைக்கு முன்.
3. திலாவத் சஜ்தாவிற்கு முன்.
4. ஷுக்றுடைய ஸஜ்தாவிற்கு முன்.
5.உணவு சாப்பிடும் முன்னும், சாப்பிட்ட பின்னும்.
6. வாய் நாற்ற மெடுக்கும்போது.
7. தூங்குவதற்கு முன்.
8. தூங்கி விழித்தபோது.
9. மரண வேதணையின் போது.
10. உபதேசம், ஹதீஸ் கூறும்போது.
11. குத்பா ஓதும்போது.
12.குர்ஆன் ஓதும்போது.
13. திக்ரு செய்யும்போது.
14. தன் வீட்டில் நுழையும் போது.
15. வித்ருத் தொழுத பிறகு.
16. ஸஹர் நேரம்.
17. குளிக்கும்போது.
18. ஒவ்வொரு வுழூவின்போதும்.
நோன்பாளி மதியத்திற்குப் பின்னர் மிஸ்வாக்குச் செய்வது மக்ரூஹ். ஆனால்  வாய் அதிக நாற்றமுடையதாய் இருந்தால் செய்யலாம். நாவின் நீள வாட்டத்திலும், பல்லின் அகல வாட்டத்திலும், மிஸ்வாக்செய்வது சுன்னத்து. இதற்கு மாற்றமாகச் செய்வது  மக்ரூஹ். மிஸ்வாக் செய்து விட்டு தரையில் வைத்ததைக் கழுவாமல் மீண்டும் மிஸ்வாக் செய்வது மக்ரூஹ். மிஸ்வாக் குச்சியில் அழுக்கு நாற்றம் ஏதேனும் இருந்தால் அதனைக் கழுவுவது சுன்னத்.
பல்லில்லாதவர்களும் மிஸ்வாக் செய்வது சுன்னத். தங்கம், வெள்ளியினால் பல் கட்டியிருப்பவர்களுக்கும் அது சுன்னத். கண் வலி போன்ற ஏதேனும் ஒரு நோயின் காரணத்தால் மிஸ்வாக் செய்ய முடியாதவர் முடிந்த மட்டும் இலேசான  முறையில்  செய்து கொள்வார்.
மிஸ்வாக் செய்வதால் ஏராளமான பலன்கள் இருக்கின்றன. அது நபி இப்றாஹீம்  அலை அவர்கள் முதலாக எல்லா  நபிமார்களின் வணக்கமாகவும், முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது பர்ளாகவும் இருந்தது.
இமாம்களில் சிலர்:
قَالَ فِي الْمَجْمُوعِ، وَهَذَا، وَإِنْ لَمْ يَكُنْ لَهُ أَصْلٌ لَا بَأْسَ بِهِ
மிஸ்வாக் செய்யும்போது கீழ் வரும் ஓதலை  ஓதிக்கொள்வது சிறப்புடையது, என்றும் இவ்வோதலுக்கு அடிப்படை இல்லாதிருந்தாலும் சரி அதில் பிரட்சணை இல்லை என்றும் கூறியுள்ளனர்.
நூல் : அல்மஜ்மூஃஹ்.
ஓதல் இது :                                                            
اللَّهُمَّ بَيِّضْ بِهِ أَسْنَانِي، وَشُدَّ بِهِ لِثَاتِي، وَثَبِّتْ بِهِ لَهَاتِي، وَبَارِكْ لِي فِيهِ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
பற்சுத்தம் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
 
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: தினசரி ஒரு முறை மட்டுமே பல் துலக்குவது நினைவாற்றலை பாதித்து மறதி நோயை ஏற்படுத்தும். எனவே காலை மாலை இரவு என அன்றாடம் 2 அல்லது 3 முறை வாய் மற்றும் பற்களை சுத்தப்படுத்துவது அவசியம். உணவு உண்ட பின் நல்ல தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், பல் சொத்தை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இரவு படுக்க போகும் முன்பு அவசியம் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்கும் பழக்கம் உள்ளவர்களை மறதி நோய் தாக்கும் சாத்தியம் 65 சதவீதம் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் மற்றும் பல் சுத்தம் அவசியம் என்பதை அவ்வப்போது மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, 2 அல்லது 3 முறை தினமும் பல் துலக்கினால் மறதி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் தினசரி குறைந்தது 2 முறை பல் துலக்குவது அவசியம். இது அவர்களின் நினைவாற்றலை கூர்மையாக்கும். மறதி நோயை விரட்டும் இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேகூறப்பட்ட ஆய்வு இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பு தீர்க்கதரிசியாக இவ்வுலகில் அவதரித்த அண்ணல்  நாயகத்தின் வாழ்க்கையை 100 சதவீதம் உண்மையெனப்படம் பிடித்துக்காட்டுகின்றது. நபிகள் நாயகம் அவர்களின் விடயத்தில் பற்சுத்தம் ஏன் கடமையான ஒரு நற்செயலாக ஆக்கப்பட்டது? என சிந்தித்து, ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுடன் திணித்துப்பார்த்தால்  பல் சுத்தம் குறைவாக எம்மில் இடம்பெறும் போது மறதி வருகின்றது. ஒரு தீர்க்கதரிசியின் விடயத்தில் மறதி ஏற்படுவது ஆபத்தான முடிவுகளைக் கொண்டுவந்து சேர்க்கும். தீர்க்கதரிசியாக வாழும் ஒரு நபீ, மறதியை விட்டும் நீங்கியிருப்பது அவசியம். ஆகையால் அல்லாஹ்வால் கண்மணி நாயகம் அவர்களுக்கு ஏவப்பட்ட முக்கிய விடயம் பற்சுத்தம். அது சீராக மனித வாழ்வில் நடைபெறும்போது ஆபத்தான நோய்கள், மற்றும் மறதி போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.
 
மரக்குச்சியினால் பற்சுத்தம் ஆக்கப்பட என்ன காரணம்?
அகிலத்தைப் படைத்த வள்ள அல்லாஹ் மரத்தின் குச்சியைக்கொண்டு பல்லைதுலக்குமாறு ஏன் ஏவினான்.?
தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான பேஷ்டுகள், பிரஷ்கள் ஆகியவற்றை உபயோகித்தால்.  கனிமங்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதாக நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. ஆயினும் மரங்களில் அது இல்லை.
மிஸ்வாக் குச்சியானது வருடக் கணக்கில்   வைத்திருந்து பாவிக்க முடியும். அதனால் பற்களுக்குப் பாதிப்போ அல்லது வேறு தீவிரநோய்களோ  எம்மை அணுகா.
ஆனால் இப்போது நாம் பாவிக்கும் “பிறஷ்” போன்றவற்றை உயோகிப்பதனால் பல அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை இன்றைய உலகம் ஏற்றுக் கொள்கின்றது.
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில்:
“ வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.
நபி வழியில் பற்சுத்தம்பேணி நடப்பதால் பக்ரீரியா நோய் தொற்றுகளில் இருந்து, கிரிமித் தாக்கங்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை மேல் வந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
என்னையும், உங்களையும் நேரான நபி வழியில் வாழ வள்ள அல்லாஹ் ஆக்கியருள்வானாக!.
ஆபத்தான நோய்களில் இருந்து பாது காப்பானாக! ஆமீன்! யாறப்பல் ஆலமீன்!
– முற்றும் –
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments