நின்று வணங்குதல் என்றால் என்ன?

June 20, 2015
قال النّبيّ
صلّى الله عليه وسلّم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدّم من ذنبه.
றமழான் மாதம் பூரண “ஈமான்” விசுவாசத்தோடும், நன்மையை நாடியும் ஒருவன் நின்று வணங்கினால் அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
இந்த நபீ மொழி பலமானதும், பல “ஹதீது” நூல்களில் இடம் பெற்றதுமாகும்.
இந்த நபீ மொழியில் “றமழான்” என்று மாதத்தின் பெயர் மட்டும்தான் கூறப்பட்டுள்ளதேயல்லாமல்ليالي رمضان  றமழான் மாத இரவுகள் என்றோ,  نهار رمضان  பகல் என்றோ கூறப்படவில்லை. பொதுவாக றமழான் என்று வந்துள்ளதால் இரவு பகல் இரண்டையும் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும். குறித்த மாதத்தில் இரவில் மட்டும்தான் வணங்க வேண்டும். பகலில் வணக்கம் தேவையில்லை என்று கருதக் கூடாது.
எனினும் பகல் நேரம் வணக்கம் செய்வதை விட இரவில் அதிகமாகச் செய்ய வேண்டும்.
மேற்கண்ட நபீ மொழியில் “காம” நின்றான் என்ற பொருளுக்குரிய சொல் வந்துள்ளதால் “றமழான்” இரவுகளில் நின்று வணங்குதல் என்று சிலர் பொருள் கொள்கிறார்கள். இவர்கள் சொல்வதே சரியென்று வைத்துக்கொண்டால் இருந்து வணங்கினவர்களும், நடந்து வணங்கினவர்களும், சாய்ந்து வணங்கினவர்களும் “றமழான்” மாதம் வணங்கிய கூட்டத்தில் சேரமாட்டார்கள். அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்காது.
ஆகையால் “காம றமழான்” என்ற வசனத்திற்கு நின்று வணங்கினான் என்ற பொருள் கொள்ளாமல் பொதுவாக வணங்கினான் என்று பொருள் கொள்வதே பொருத்தமானது.

“றமழான்” இரவில் வணங்கின கூட்டத்துடன் ஒருவன் சேர்ந்து கொள்வதாயின் அவன் என்னென்ன வணக்கங்கள் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. சுருக்கம் என்ன வெனில் ஒருவன் “றமழான்” இரவு “மக்ரிப்”, இஷா, தறாவீஹ், வித்று என்பவற்றை “ஜமாஅத்”துடன் தொழுதால் அவன் “றமழான்” மாதம் வணங்கிய கூட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.  

You may also like

Leave a Comment