Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தந்தைக்கு உயிர் கொடுத்த தனயன்

தந்தைக்கு உயிர் கொடுத்த தனயன்

قال يحيى بن يوسف الصرصري الحنبلي رحمه
الله (هــ 656) كما فى المجموعة النّبهانيّة 
2/21
             وَكُـنْـتَ خَـيْـرَ نَــبِـيٍّ عِــنْدَ
خَالِـقِـنَا      وَرُوْحُ آدَمَ لَمْ يَنْهَضْ بِهَا الْجَسَدُ          
             
             فَاَبْصَرَ اسْمَكَ فَوْقَ الْعَرْشِ
مُكْتَتَبًا      وَتِـلْـكَ مَــنْـزِلَـةٌ لَـمْ يُعْطَـهَا
اَحَــدٌ      
ஹிஜ்ரீ 656ல் வாழ்ந்த இமாம் யஹ்யா இப்னு யூஸுப் அஸ்ஸர்ஸரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது மேற்கண்ட பாடலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் அல்லாஹ் இடம் சிறந்த
நபீயாக உள்ளீர்கள்.

நீங்கள் நபீயாக இருந்த நேரம் ஆதிபிதா ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “றூஹ்” உயிர் அவர்களின்
உடலுடன் சேரவில்லை.

அந்த நேரம் அவர்கள் உயிர் பெற்று எழுந்திருக்கவில்லை.
அப்போது உங்களின் திருப்பெயர் அர்ஷின் மீது எழுதப்பட்டிருந்ததை நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்டார்கள்.

அது மிகப் பெரும் பதவியாகும். அல்லாஹ் அப்பதவியை
உங்கள் தவிர வேறு எவருக்கும் வழங்கவில்லை.
ஆதாரம் – அல்மஜ்மூஅதுன் நபஹானிய்யா
(பாகம் – 02 பக்கம் – 21)

நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் “அபுல் ஜிஸ்ம்” என்றும், நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அபுர்றூஹ்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
முந்தினதிற்கு “உடலின் தந்தை” என்றும் இரண்டாவதிற்கு “உயிரின் தந்தை” என்றும் பொருள் வரும். இவ்வடிப்படையில் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயிருக்குக் கூட அவர்களுக்குப் பின்னர் பிறந்த நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தந்தை என்று தத்துவம் சொல்லும். தந்தைக்கு உயிர் கொடுத்த தனயன் நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே.

இத்தத்துவம் வழிகேடர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். ஞானக் கருத்துக்களையும், தத்துவங்களையும் ஒரு போதும் அவர்களால் ஜீரணிக்க முடியாது. அவர்கள் “நஸீப்” நற்பாக்கியமற்ற ஜீவன்களே!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments