திருக்குா்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்தல்

January 21, 2015
திருக்குர்ஆன் என்பது மனிதனின் உள நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இருப்பது போல் அவனின் உடல் நோய்களைச் சுகமாக்கும் மருந்தாகவும் உள்ளது. அது எந்த நோய்க்கு மருந்தென்றாலும் அதைக் கொண்டு மருந்து செய்தால் மட்டுமே நோய் சுகமாகும். அதை உறையிலிட்டு காலையும் மாலையும் அதை முத்தமிட்டு வருவதால் எந்த நோயும் குணமாகி விடாது. அல்லது தினமும் திருக்குர்ஆனை ஓதி வருவதாலும் குணமாகி விடாது.

திருக்குர்ஆனை முத்தமிடுவதும், அதை ஓதுவதும் நன்மை தரக்கூடிய நற் செயல்கள்தான். ஆயினும் அவ்வாறு செய்தல் நோய் நிவாரணியாக மாட்டாது. சில சமயம் ஓதியவன், தான் ஓதிய திருக்குர்ஆன் வசனங்கள் கொண்டு “வஸீலா” உதவி தேடி நோய் குணமாக “துஆ” கேட்டால் சுகம் கிடைக்க  வாய்ப்பு உண்டு.
எனினும் திருக்குர்ஆன் உடல், உள நோய்களுக்கு மருந்து என்ற திருக்குர்ஆனின் ஆணைப்படி அது கொண்டு வைத்தியம் செய்ய வேண்டும்.
திருக்குர்ஆனின் வசனங்கள் கொண்டு வைத்தியம் செய்வதற்கு ஒரு விதிமுறை உண்டு. அதை அறிந்து செய்ய வேண்டும். அது பற்றிய அறிவு “இல்முல்
ஹுறூப்” (எழுத்துக்களின் அறிவு) என்ற கலையிலும்
“இல்முத் திஸல்மாதி” என்ற வைத்தியக் கலையிலும் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
இன்ன நோய்க்கு இன்ன “ஆயத்” திருவசனத்தை இவ்வாறு செய்ய வேண்டும் என்ற விபரம் உண்டு. அதன் படி செய்ய வேண்டும். அந்த விபரம் மேற்கண்ட கலையில் எழுதப்பட்ட நூல்களில் உள்ளன.
அந்த நூல்களை ஆய்வு செய்து வைத்தியம் செய்ய விரும்புகின்ற ஒருவா் மனப்பக்குவம் உள்ளவராகவும், அவ்வாறான ஒரு நல்ல மனிதனிடம் அனுமதி பெற்றிருத்தல் அவசியம்.  
நான் அறிந்தவரை திருக்குர்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்வதில் உலகில் மிகத் திறமை உள்ளவா்கள் “மலபார்”கேரளா மாநிலத்திலேயே உள்ளார்கள். குறிப்பாக தங்கள்மார் அதிகமாக வாழ்கின்ற அந்தரத்தீவிலேயே இருக்கிறார்கள்.
இத்தகைய தங்கள்மார்களிற் சிலரிடம் சில திறமை உண்டு. அதாவது ஒரு வியாதிக்கு உரிய வைத்தியம் தம்மிடமுள்ள வைத்திய நூல்களில் இல்லாவிட்டால் நோயாளியின் பெயா், தாயின் பெயா், பிறந்த நாள், திகதி, நேரம் என்பவற்றை அறிந்து தாமே வைத்தியம் கண்டு பிடித்துச் செய்வார்கள்.
இத்தகைய ஒரு திறமை, மதிப்பிற்குரிய அஷ் ஷெய்குல் காமில் வல் வலிய்யுல் வாஸில் எனது ஆன்மீக ஞான குருக்களில் ஒருவா் “ஹக்கை ஹக்காக” சத்தியத்தை சத்தியமாக கூறி சன் மார்க்கத்தை நிலை நாட்டிய மேதை, உலமாக்களால் எனக்கு வழங்கப்பட்ட “பத்வா”வை சரிகாணாமல் எனது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்ட ஷெய்குனா அப்துா் றஸீத் மௌலானா வாப்பா [தங்கள் வாப்பா] அவா்களிடம் இருந்ததை நான் அறிவேன்.
         
     
அவா்கள் கொழும்பிலுள்ள அவா்களின் “முரீத்”ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த சமயம் நான் அவர்களைச் சந்திப்பதற்காக குறித்த இல்லம் சென்றேன். வாப்பா அவர்கள் செம்புத் தகட்டில் ஓா் “இஸ்ம்” எழுதிக் கொண்டிருந்தார்கள். தகடு மிகப்பெரிதாக இருந்ததைக் கண்ட நான் வியந்தவனாக இது எதற்கு? என்று கேட்டேன்.
அதற்கவா்கள் இந்த வீட்டுக்காரரின் மகன் அமேரிக்காவில் இருக்கிறார். அவருக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு வைத்தியம் செய்வதற்கு பொருத்தமான “இஸ்ம்” எதையும் நான் காணவில்லை. ஆகையால் நானே ஒரு “இஸ்ம்” தயாரித்துள்ளேன் என்று கூறினார்கள். சுமார் இரண்டு மாதங்களின் பின் நோய் பூரண குணமாகி அவா் நாடு திரும்பினார். இன்று வரை உயிரோடு வாழ்கின்றார்.
அந்தக் காலத்தில் கேரளாவில் ஒரு நல்ல மனிதா் வாழ்ந்தார். அவர் திருக்குர்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்வதில் தன்னிகரற்று விளங்கினார். அவரிடம் சென்ற ஓா் அரசியல் வாதி துப்பாக்கி வெடில் தன்னைத் தாக்காமல் ஏதாவது செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அப்பெரியார் 40நாட்கள் கழிந்த பின் வருமாரு பணித்தார்.
41வது நாள் அரசியல் வாதி சென்ற போது அவா் நாலு அங்குல நீளமும், அகலமும் உள்ள ஒரு வெள்ளை தாளில் 1 அல்லது “அலிப்”என்று விளங்கும் வகையில் ஒரு கோடு மட்டும் கீறி அவரிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதி இதில் எனக்கு நம்பிக்கை வரவில்லை.
இந்த கோட்டை கீறித்தருவதற்கா உங்களுக்கு
40 நாட்கள் தேவைப்பட்டன? என்று கேட்டார்.
அந்தப் பெரியார் அவரிடம் கொடுத்த “இஸ்ம்”தாளை வாங்கி தனது வீட்டு வாயலில் நின்று கொண்டிருந்த தான் வளா்த்து வந்த ஆட்டின் கழுத்தில் அதைக் கட்டி விட்டு “உன்னால் முடியுமாயின் இந்த ஆட்டை சுட்டு கொன்று விடு” என்று கூறினார். அரசியல்வாதி தன்னிடமிருந்து ஆறு ரவைகள் கொண்ட கையடக்கத்துப்பாக்கியால் அந்த ஆட்டை சுட்டார்.
அவரின் துப்பாக்கியை அவராலேயே நம்ப முடியாமற் போய் விட்டது. ஆட்டுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அரசியல் வாதி அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டு “இஸ்மை”எடுத்துச் சென்றார்.
ஒரேயொரு கோட்டைக் கீறிக் கொடுப்பதற்கு – எழுதிக் கொடுப்பதற்கு – 40 நாட்கள் தேவையானதற்கான காரணம் அவா் அதை தொடர்ந்து 40 நாட்கள் வசப் படுத்தி வந்ததேயாகும்.
ஷாஹே ஸறன்தீப்

You may also like

Leave a Comment