புனித அறபா நாள் !

September 22, 2015
மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்

சங்கையான
மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் சங்கையான மாதங்கள்
குறித்து குறிப்பிடும்போது..
اِنَّ عِدَّةَ
الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ
الْقَيِّمُ
فَلَا
تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً
كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌  ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ
الْمُتَّقِيْنَ
‏ 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில்
வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு
ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து)
உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து
கொள்ளுங்கள்.
சங்கையான அந்நான்கு மாதங்களாவன, “துல்
கஃதா, துல்ஹஜ், முஹர்றம், றஜப்,” ஆகியனவாகும்.

ஹஜ்ஜுடைய  மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாள்
ஆகும்.
ஹஜ்ஜுடைய மாதங்கள் பற்றி அல்குர்ஆனில் சூரா
பகராவில்
اَلْحَجُّ
اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்;” என்று
அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.
தப்ஸீருடைய இமாம்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள்
பற்றி குறிப்பிடும்போது முறையே  “ஷவ்வால்,
துல்கஃதா, துல் ஹிஜ்ஜா (துல் ஹஜ்)” என்று ஆகிய மூன்று மாதங்களையும் சொல்லிக் காட்டுகின்றார்கள்.

ஹஜ்ஜுடைய மாதத்தில் அல்லாஹ்வினால்
குறிப்பிடப்பட்ட சில
நாட்களில் நின்றுமுள்ள  ஒரு நாள் அறபாவுடைய நாள் ஆகும்.

குறிப்பிடப்பட்ட நாட்கள் என்று அல்லாஹ்
அறிவுக்கும் வசனமாகிறது…  
              
لِّيَشْهَدُوْا
مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى
مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ‌‌
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; “குறிப்பிட்ட நாட்களில்” அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு,
மாடு, ஒட்டகம் போன்ற)
நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும்
(வருவார்கள்)
என்று சூரா அல் ஹஜ்ஜில் 28ம் வசனமாக
மேற்படி வசனம் வருகின்றது. அவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் தப்ஸீர் கலை மேதை
அல்லாமா இப்னு அப்பாஸ் றஹிமஹுல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
“குறிப்பிடப்பட்ட நாட்கள் என்பது  துல் ஹஜ்
மாதத்தில் வருகின்ற (ஆரம்ப) பத்து நாட்களேயாகும். என்று தப்ஸீர் அறிவித்துக் காட்டுகின்றார்கள்.
அல்லாஹ் சத்தியம் செய்யும்
பத்து நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும்.
அது பற்றி அல்லாஹ் சுட்டிக்காட்டும்
போது…
وَلَيَالٍ
عَشْرٍۙ‏

பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
என்று
கூறுகின்றான்.
இவ்வசனத்திற்கு விளக்கவுரை செய்யும்  இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நிச்சயமாக அந்த பத்து இரவுகளாகிறது 
ஹஜ்ஜுடைய மாதத்தின் பத்து நாட்களாகும். என்று கூறுகின்றார்கள்.
மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள் தரும்
கருத்துக்கள், போதனைகளின் அடிப்படையில் நாம் பார்க்கும் போது, சங்கையான மாதங்களின்
நாட்கள், ஹஜ்ஜுடைய  மாதங்களின் நாட்கள், குறிப்பிடப்பட்ட சில நாட்கள், அல்லாஹ் சத்தியம் செய்யும் பத்து நாட்கள்  ஆகிய நாட்களில்  அறபாவுடைய நாளும் ஒன்றாகும் என்பது
எங்களுக்கு  விளங்குகின்றது.
அல்லாஹ்விடத்தில் மிகத்தூய்மையான, நற்கூலியால்
மிக வலுப்பமான எந்த அமலும் கிடையாது  “அல்லாஹ்வுடைய
பத்து நாட்களிலே  அவன் புரியும்  நன்மையை விட” என நபிகள் நாயகம்  ஸல் அவர்கள் கூறிய போது  அல்லாஹ்வின் பாதையில் புனிதப்போர் புரிவதும்
நற்கூலியால், உயர்ந்தது  இல்லையா
நாயகமே  என  ஸஹாபாக்களால்
வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதும் 
இல்லை.
தானும் , தன்னுடன் உள்ள  செல்வத்தையும் கொண்டு சென்றவர். அவற்றில் நின்றும் எதைக் கொண்டும்  தன்னிடம்  மீளவில்லையோ அந்த ஒரு மனிதனைத்தவிர. என்று நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.  இந்த  ஹதீத் தாரமீ ஹதீத்  தொகுப்பில் 
கூறப்பட்டுள்ளது.
இந்த ஹதீதில் நாம்  “ அல்லாஹ்வுடைய 10 நாட்கள் என நபிகள் நாயகம் ஸல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
எடுத்துக்கூறியிருப்பது துல் ஹஜ் மாதத்தின் 
ஆரம்ப பத்து நாட்களையாகும்.” என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும்  அந்நாட்களில் நாம் செய்யும்  இபாத்ததுகள் 
மிக அளவிடற்கரிய  சிறப்புக்களை  கொண்டிருக்கின்றது என்றும்,  ஹஜ் என்று வரும் போது அதில் உயிர்
மட்டுமல்ல  அல்லாஹ்வுக்காக தன் பொருளாதாரம்
செலவிடப்படுகின்றன. அது யுத்தம்  செய்வதை
கானவும்  சிறப்புடையது என்பதைம் அறிந்து
கொள்ளலாம்.
அமீருல் முஃமினீனே! உமருப்னுல் கத்தாபே !
நீங்கள் ஓதுகின்ற வேதத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. அப்படியொரு வசனம் எங்களுக்கு
இறக்கப்பட்டிருக்குமாகில்  யூதர்களாகிய
நாங்கள் அந்த வசனம் இறக்கப்பட்ட நாளை 
பெருநாளாக ஆக்கியிருப்போம் என்று ஒரு யூதன் இரண்டாம் கலீபா உமர் நாயகத்தை
நோக்கி  சொன்னான். அதற்கவர்கள் அது எந்த
வசனம் என கேட்டார்கள் ?
அதற்கு அந்த யூதன் கீழ் கானும் இந்த மறை
வசனத்தை கூறினான்.
اَ
لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ
وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ
ِ
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி
விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம்
மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;
இதனைக் கேட்ட உமர் றழியல்லாஹு அன்ஹு
அவர்கள் வெள்ளிக்கிழமையன்று அறபாவுடைய
நாளில் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கும்போதே அவ்வசனம் இறக்கப்பட்டது என்பதனை  திடமாக நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம் என
நவின்றார்கள்.
இந்த சம்வம் அறபா நாளின் முக்கியத்துவத்தையும்
, அதன் மாண்பையும் எடுத்துக்காட்டுகின்றது.
ஹஜ்ஜுடைய 
அமல்களில் அரபாவில் தரித்தல் ஹஜ்ஜின் ஆறு பர்ளுகளில் ஒன்றாகும். “தரித்தல்”
எனும் இந்தச் செயல் விடுபடுமாகில் “ஹஜ்” நிறைவேறாததாகிவிடும்.
அறபாவுடைய 
நோன்பு

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களிடம் அறபாவுடைய நாளில்  நோன்பு
நோட்பது  தொடர்பில் கேட்கப்பட்டபோது  “கடந்த கால வருடத்திற்கு தென்ட
குற்றப்பரிகாரமாகவும், வரும் வருடத்திற்குரிய தென்ட குற்றப்பரிகாரமாகவும் அது  இருக்கும்” என பதில் சொன்னார்கள்.
ஆதாரம் :
முஸ்லிம்.
அறபாவுடைய நாள், அறுக்கின்ற (எவ்முன்
நஹ்ர்) நாள், மினாவுடைய நாட்கள் இஸ்லாமியர்களான எங்களது பெருநாளாக இருக்கும்.
என  நபி ஸல் அவர்கள் (“அஹ்லுல் மவ்கிப்”) ஹாஜிமார்களுக்கு
பிரத்தியேகமாக நவின்றுள்ளார்கள்.
அதேநேரத்தில்  அறபாவுடைய நோன்புடைய வரிசையை  நோக்கும் போது ஹாஜிமார்களுக்கு அது சுன்னத்தல்ல
என்பதனால் அதில் தங்கியுள்ள சிறப்பை 
ஹாஜிமார் அல்லாத எம்போன்றவர்களுக்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
விட்டுச் சென்றுள்ளார்கள்.
அறபாவுடைய நாளில் நாம் அதிகம் பிரார்த்தனை
செய்ய  வேண்டும். பிரார்த்தனையில்
சிறந்தது  அறபாவுடைய நாளில் கேட்கப்படும்
பிரார்த்தனையாகும். என நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறபாவுடைய நாளில் அதிகமாக  நரகவாசிகளை அல்லாஹ் விடுதலை செய்வதாகவும்,
அறபாவில் தரித்து நிற்பவர்களை மலக்குமார்களிடம் பெருமையடித்து  அல்லாஹ் பேசுவதாகவும்.  இன்னும் சில அறிவிப்புக்களில்  காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆகையால் அறபாவுடைய நாள் சிறப்பிற்குரிய நாள்! அல்லாஹ்வின் சங்கையான மாதங்களில்
உள்ள நாள்! ஹஜ்ஜுடை  மாதத்தில் உள்ள
கண்ணியமிக்க நாள்! அல்லாஹ்வினால் குறிப்பிடப்பட்ட பத்து நாட்களில் உள்ள முக்கிய
நாள்! அல்லாஹ்வினால் சத்தியத்திற்குட்பட்ட பத்து நாளில் தனிச்சிறப்பு பெற்ற நாள்!
நபிகளாரின் அமுத நாவு கொண்டு எங்களுக்காக வந்த அருளான அறபா நாள்!
என்பதனை விளங்கி அந்த நாளை நோன்பு கொண்டு
கிரீடம் அணிவித்து, துஆ, ஸலவாத், திக்ர் போன்ற நகைகள் கொண்டு அலங்கரித்து வழியனுப்பிவைப்போம்.!
மலர இருக்கும் “ஈதுல் அழ்ஹாவில்” மன இச்சைகளை கசக்கிப் பிழிவோம்! மகத்தான றப்பின்
சமூகத்தில் மலர்வோம் மணப்போம்.!.

அல்லாஹு அக்பர் ! அல்லாஹ் அக்பர்! அல்லாஹு
அக்பர் ! 
லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 
வலில்லாஹில் ஹம்த்.

You may also like

Leave a Comment