ஞான கீதம்

August 22, 2015


حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ       مَا
فِي قَلْبِيْ غَيْرُ اللهْ

نُوْرُ مُحَمَّدْ صَلَّى اللهْ      لَاإِلــــــــــــــهَ
إِلاَّ اللهْ
இந்தப் பாடல் இலங்கை, இந்தியாவிலும், மற்றும் பல நாடுகளிலும் பாடப்பட்டு வருகிறது. இது யாரால் இயற்றப்பட்டதென்பதற்கு தெளிவான, நம்பத் தகுந்த ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை.
இது யாரால் இயற்றப்பட்டதாயினும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகள் மட்டுமே இதைப்பாடுவார்கள்.

வஹ்ஹாபிகளுக்கு இப்பாடல் கடும் நஞ்சு. அவர்கள் தமது வாழ்வில் ஒரு தரமேனும் பாடியிருக்க மாட்டார்கள். “ஸுன்னீ”கள் அனைவருக்கும் இது மனப் பாடமான ஒரு பாடலாகும். அவர்கள் “றாதிப் மஜ்லிஸ்”, மற்றும் விஷேட நிகழ்வுகளின் போது இதைப் பாடுவார்கள்.
சுருக்கமாக இதன் பொருள். 
“ஹஸ்பீறப்பீ” என்னுடைய இரட்சகன் எனக்குப் போதுமானவன். “ஜல்லல்லாஹ்” அல்லாஹ் உயர்த்தியாகி விட்டான். 
“மாபீ கல்பீ ஙெய்றுல்லாஹ்” எனது உள்ளத்தில் அல்லாஹ் அல்லாத வேறொன்றுமில்லை. (அல்லாஹ் தவிர எதுவுமில்லை.) அதாவது அல்லாஹ்வின் நினைவு தவிர வேறெந்த நினைவும் இல்லை.
“நூறு முஹம்மத் ஸல்லல்லாஹ்” முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது – அவர்களின் ஒளி மீது – அல்லாஹ் “ஸலவாத்” சொல்வானாக!
“லாயிலாக இல்லல்லாஹ்” அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை.
இந்தப் பாடலின் மூன்றாம் அடியான نور محمّد صلّى الله என்பதை
نور محمّد ظلّ الله என்று படிப்பது மொழி இலக்கணத்திற்குப் பிழையில்லாமல் இருப்பதுடன் ஆழமான தத்துவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும்.

(தொடரும்)

You may also like

Leave a Comment