Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பெருமானார் (ஸல்) அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களின் பொதுவான சிறப்பம்சங்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களின் பொதுவான சிறப்பம்சங்கள்.

மௌலவீ  MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள்

நபியவர்கள் சாய்ந்து உட்காருவதாக இருந்தா பெரும்பாலும் தங்களின் இடது பக்கம் சாய்ந்து உட்காருவார்கள்.

பருவத்தின் முதல் மழை பெய்தால் மேலாடைகளைக் கழற்றிவிட்டு மழையில் நனைவார்கள்.

நபியவர்கள் மகிழ்ச்சிமிகுந்த நேரத்தில் தங்களின் அருளான பார்வையை கீழே தாழ்த்துவார்கள்.

நபீயவர்கள் கவலையோடு இருக்கும் நேரத்திலே அடிக்கடி தங்களின் புனித மிகுதிருக்கரங்களை தலையிலும், தாடியிலும் தேய்த்துக் கொள்வார்கள்.

நபீயவர்கள்ஆழ்ந்தசிந்தனையின்போதுகுச்சியால்நிலத்தைசிலநேரங்களில்கீறுவார்கள்.
கடைத் தெருவிற்குச் சென்று வீட்டு சாமான்களை வாங்கிவருவதற்கு ஒரு போதும் வெட்கப்படமாட்டார்கள். தாங்களே பொருட்களை சுமந்து வருவார்கள்.

நபியவர்கள் ஹா-ஹா என்று ஒரு போதும் சிரித்ததில்லை. பெரும்பாலும் புன்சிரிப்பே சிரிப்பார்கள். ஒரிருமுறைகள் முன்பற்கள் தெரியும்படி சிரித்து இருக்கிறார்கள்.

நபீயவர்கள் தோட்டங்களில் சென்று உலாவிவருவதை மிகவும் விரும்புவார்கள்.

நபீயவர்களுக்கு நீச்சலும் மிகவு ம்பிரியமாக இருந்தது.

 ஒட்டகை, குதிரை, கழுதை, கோவேறு கழுதை போன்றவற்றை வாகனமாகப் பயன்படுத்துவார்கள். ஆயினும் குதிரையை மிகவும் நேசித்தார்கள் குதிரையின் கண், மூக்கு, வாய்களை தங்கள் கையாலே துடைத்து சுத்தம் செய்வார்கள். அதன் பிடரி முடிகளை விரல்களால் கோதுவார்கள்.

யாரைப்பற்றியாவது மக்கள் குறைகூறி அவரை சபிக்கும்படி கூறினால் அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டட்டும் என்று நல்ல துஆ செய்வார்கள்.

 அம்பு எறிதல், குத்துச் சண்டை போன்ற ஆகுமான விளையாட்டுக்களைப் பார்ப்பார்கள்.

வீட்டில் இருக்கும்போது வீணாக நேரத்தை கழிக்காமல் வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வார்கள்.

  •  மாவு பிசைவது போன்ற சமையல் வேலைகளும் செய்வார்கள்.
  • தங்களின் துணி மனிகள், காலணிகள் கிழிந்து இருந்தால் தாங்களே தைத்துக் கொள்வார்கள்.

இறைவன்பாதையில்போர்செய்யும்போதேதவிரவேறுயாரையும்

எப்போதும் தங்கள் கைகளால் அடித்ததில்லை.

 நபீயவர்கள் பெரும்பாலும் மௌனமாக இருப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பேசுவார்கள்.

 நபீயவர்கள் தன்னுடைய மனைவிகள், குழந்தைகள், வேலைக்காரர்கள் இவர்களில் யாரையும் ஒ ருபோதும் திட்டியதில்லை.

 இதை ஏன் செய்யவில்லை.? இதை ஏன் இப்படி செய்தாய்.? என்று ஒரு போதும் கேட்டதில்லை.

அடிமைகள், சாதாரண மனிதர்கள் விருந்துக்கு அழைத்தாலும் செல்வார்கள்.

பரம ஏழைகளையும் மட்டமாக கருதாமல் அவர்களையும் தீனின் பக்கம் அழைப்பார்கள்.

பேரரசர்களுக்கும் அச்சமின்றி இஸ்லாமிய அழைப்பைக் கொடுப்பார்கள்

நபீயவர்கள் தோழர்களிடம் நகைச்சுவையாக பேசிய சில சம்பவங்கள் உள்ளன.

 எனினும் உண்மையைத் தவிர வேறு ஏதும் பேசமாட்டார்கள்

நகைச்சுவையாக பிறரைக்கிண்டல் செய்வது, பொய், புறம்பேசுவது, பிறரை வெட்கமடையச் செய்வது போன்றவற்றை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.

நபீயவர்கள் யார் எந்த உதவியை நாடிவந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு உதவிசெய்தே அனுப்புவார்கள்.

நபீயவர்கள் புதியஆடை அணிந்தால் பழைய ஆடையை ஏழைக்குக் கொடுத்து விடுவார்கள்.

அசுத்துங்களை சுத்தம் செய்வது மூக்கு சிந்துவது, பாதணிகளை எடுத்து வருவது போன்ற செயல்களை இடது செய்வார்கள். மற்றபடி அனைத்து காரியங்களிலும் வலது கையையும் வலது பக்கத்தையும் முற்படுத்துவார்கள்.

சுப்ஹ் தொழுகையின் பின் சம்மணமிட்டு அமர்ந்து மக்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றி பேசுவார்கள்.

அன்று இரவுகள் தோழர்கள் கண்டகனவு பற்றி விசாரித்து விளக்கம் கூறுவார்கள்.

யாரும் தங்களிடம் காரணம் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வார்கள்.

 நபீ (ஸல்) அவர்கள் சிரிப்பதைப் போலவே அழும் போதும் ஓசையின்றி அழுவார்கள். கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். மூச்சுக்களை இழுத்து விடுவார்கள்.

பிறருக்கு கடிதம் எழுதும் போது எழுதுபவர்களிடம் ஒவ்வொரு வார்த்தையாகச்சொல்லி எழுதச் சொல்வார்கள். முதலில் பிஸ்மில்லாஹ்வையும் அடுத்து அனுப்புபவர் பெயரும் அதற்குப்பின் விஷயங்களும் எழுதச் சொல்வார்கள்.

குழந்தைகளுடன் நபீகள் கோமான் ஸல் அவர்கள்.

பெருமானார் ஸல் அவர்கள் குழந்தைகளை மிகவும் விரும்புவார்கள் குழந்தைகளை முத்தமிடுவார்கள்.

குழந்தைகள் அருகில் வந்தால் தங்களின் புனித மடியில் உட்காரவைத்து விளையாட்டுக் காட்டுவார்கள்.

சில நேரங்களில் பிள்ளைகளை வரிசையாக நிற்கவைத்து சற்றுதூரத்தில் அமர்ந்து கொண்டு என்னை முதலில் தொடுபவர்களுக்கு இந்தப் பொருளைத் தருவேன் என்று கூறுவார்கள். பிள்ளைகள் ஓடிவந்து பெருமானார் (ஸல்) அவர்களின் மீது விழுந்து மூடிக்கொள்வார்கள்.

அபூஉமைர் என்ற சிறுவர் குருவி வளர்த்து வந்தார். அவரைப்பார்க்கும் போதெல்லாம் அ வரிடம் குருவியைப்பற்றியே பேசுவார்கள்.

சில நேரங்களில் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வேறு பெயர்களை ச்சொல்லி அழைப்பார்கள். (அவர்களிடம் உள்ள குணாதிசயத்தைக் கொண்டே அழைப்பார்கள்.) உதாரணமாக அனஸ் (றழி) அவர்களை “யாதல்உத்னைன்” (இரண்டு காதுகளை உடையவரே) என்றஅழைப்பார்கள்.

ஹஸன் றழி அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவர்களை தோற்புயத்தில் வைத்துக் கொண்டு வீதியில் போவார்கள்.

அப்துல்லாஹ் இப்னு பஷீர் எனும் சிறுவர் அவரின் தாயார் பெருமானார் ஸல் அவர்களுக்கு கொடுத்து அனுப்பிய திராட்சைப்பழங்களை வழியில் தானே சாப்பிட்டுவிட்டார். இது நபீயவர்களுக்குத் தெரிந்த பின்னால் அவரை எப்போது கண்டாலும் அன்புடன் அவரின் காதைப் பிடித்துக்கொண்டு “மோசடிக்காரச் சிறுவரே” என்றுஅழைப்பார்கள்.

நபீயவர்கள் வியாதி விசாரிக்கும் முறைகள்

நபீயவர்கள் நோயாளியைப் பார்க்கச் சென்றால் அவருக்கு அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்வார்கள்.

அன்புடன் அவர துகையைப் பற்றிப் பிடித்துக் கொள்வார்கள்.

அவருடன் நெற்றியில் அல்லது வலி ஏற்பட்டுள்ள இடத்தில் கையை வைத்து துஆ செய்வார்கள்.

நோயாளியின் தலைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தற்சமயம் உடல் நலம் எவ்வாறு இருக்கின்றது என விசாரிப்பார்கள்.

அவருடைய உணவைப்பற்றியும் அவர் தற்போது விரும்புகின்ற வஸ்துவைப் பற்றியும் கேட்பார்கள் உடனே அதை வரவழைத்துக் கொடுப்பார்கள். நோயாளி எதைக் கேட்டாலும் அதைக் கொடுங்கள் என்று கூறுவார்கள்.

வீட்டில் நுழைவதில் பூமான் நபியின் ஒழுங்கு முறைகள்

நபியவர்கள் தங்கள் வீட்டிலோ பிறர் வீட்டிலோ நுழைவதாக இருந்தால் ஸலாம் கூறியே நுழைவார்கள்.

பிறரைச் சந்திப்பதாக சென்றால் அவர் வீட்டிற்கு வெளியில் இருந்தே ஸலாம் கூறுவார்கள். வீட்டுக் காரர் பதில் கூறி அழைத்தால் மட்டுமே உள்ளே நுழைவார்கள்.

அனுமதி கேட்கும் போது வீட்டு வாசலுக்கு நேராக நிற்கமாட்டார்கள். மாறாக வலது பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ ஒதுங்கி நின்று ஸலாம் கூறி அனுமதி கேட்பார்கள்.

ஸலாம் கூறியபின் பதில் வரவில்லையென்றால் சற்று நேரம் கழித்து மீண்டும் ஸலாம் கூறுவார்கள். அதற்கும் பதில் இல்லையென்றால் மூன்றாம் முறை ஸலாம் கூறுவார்கள்.

 நபியவர்கள் வீட்டிற்கு யாருவந்து “உள்ளே வரலாமா?” என்று கேட்டால் பணியாளரிடம் அவருக்கு நுழையும் முறையைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்வார்கள். அதாவது முதலில் சலாம் சொல்லிவிட்டு அனுமதி கேளுங்கள் என்பார்கள்.

ஸலாம் சொல்லாமல் யாரும் உள்ளே வந்து விட்டால் மீண்டும் வெளியே சென்று ஸலாம் கூறி விட்டு வருமாறு வேண்டிக் கொள்வார்கள்.

நபியவர்களை சந்திக்க வருபவர் அனுமதிகேட்கும் போது நபியவர்கள் உள்ளிருந் துயார்? என்று கேட்பார்கள். வந்தவர் நான்தான் என்றுசொன்னால்நபியவர்கள்அதிருப்திஅடைவார்கள்.

யாரையும் அழைத்து வர பணியாளரை அனுப்பிவைத்தால் பணியாளருடன் அவரும் அனுமதி வாங்காமல் உள்ளே வந்துவிட்டால் அதைத் தவறாகக் கருதமாட்டார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments