ஞானக் கடல் ஷெய்ஹுல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு கந்தூரி நிகழ்வுகள்

February 23, 2015
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் அடக்கம் பெற்று, இறைஞான தத்துவங்களை மிகவும் தெட்டத்தெளிவாக எடுத்தியம்பிய ஞானக்கடல், ஷெய்ஹுல் அக்பர், மிஸ்குல் அத்பர், நூறுல் அப்ஹர், கிப்ரீதுல் அஹ்மர், அஷ்ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 22.02.2015 (ஞாயிற்றுக் கிழமை) அன்று திருக் கொடியேற்றத்துடன் கந்தூரி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அன்றைய தினம் பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையின் பின் வாரந்தோறும் நடைபெற்று வரும் பெருமானாரின் புகழ் மாலை புனித கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ் நடைபெற்றது.
இஷாத் தொழுகையின் பின் ஷெய்ஹுல் அக்பர் அன்னவர்களின் பேரில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட “அல் கஸீததுல் அக்பரிய்யஹ்” மௌலித் ஷரீப் ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களினால் ஷெய்ஹுல் அக்பர் அன்னவர்களின் சிறப்புக்கள் பற்றி ஆத்மீகப் பேருரை நடைபெற்றது.
தொடர்ந்து பெரிய துஆவுடன் தபர்றுக் விநியோகமும் நடைபெற்று இனிதே ஸலவாத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
அல்ஹம்துலில்லாஹ்

You may also like

Leave a Comment