காத்தான்குடி கடற்கரை முன்றலில் கந்தூரி பெருவிழா

February 23, 2016
புதிய காத்தான்குடி – 6 ஸாஹிறா ஆழ்கடல் மீனவர் கிராமிய அமைப்பினர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரிலும், வலீமார்கள் பேரிலும் கந்தூரி ஒன்றை 21.02.2016 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது அருள்மிகு திருக்கொடியேற்றமும், தேசியக் கொடியும் ஏற்றப்பட்டு, மவ்லித் ஷரீப் ஓதப்பட்டு மீனவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டு, அருளன்னதானமும் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்வில் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், கண்ணியமிக்க உலமாஉகளும், றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களும், பொது மக்களும், கலந்து சிறப்பி்த்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்

You may also like

Leave a Comment