றஜப் மாத ஸலவாத் மஜ்லிஸ்

April 24, 2015
அகிலத்தாருக்கு அருட்கொடையாக அவனியில் வந்துதித்த எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அன்னை ஆமினா றழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் வயிற்றில் கருத்தரித்த பொன்னாளான றஜப் மாத்தின் முதலாம் வெள்ளியிரவினை சங்கைப்படுத்தும் முகமான நேற்று 23.04.2015 (வியாழன் பிற்பகல் வெள்ளியிரவு) அன்று இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மகிமை பொங்கும் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது.

இந்நிகழ்வி்ல் விஷேடமாக எமது பள்ளிவாயலுக்குச் சொந்தமாகக் கிடைத்த திருமுடிகளை வீதியோரங்களில் குழுமியிருந்த முஹிப்பீன்களால் மலர் மலை அணிவிக்கப்பட்டு மிகவும் கண்ணியமான முறையில் மஜ்லிஸ் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது காதல் கொண்ட பெருந்திரளான மக்கள் நேற்றைய ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளில் பங்கு கொண்டதும் சிறப்புக்குரிய அம்சமாகும்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே

You may also like

Leave a Comment