நபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்

November 23, 2014
ஸபர் மாதம் வந்துவிட்டாலே சந்தோசம்தான்….. ஆன்மீக வாதிகளுக்கும், அண்ணல் நபிகளின் மீது பேரன்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் ஆனந்தம்தான்…. ஏன் தெரியுமா? அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின் புகழை தொடர்ந்து 29 தினங்களுக்கு மனமாரப் புகழ்ந்து பாடப் போகி்ன்றோம் என்ற சந்தோசம்தான்……
அந்த வகையில்…
நபீபுகழ் பாவலர்களான இமாமுனா மாதிஹுர் றஸூல் அபீ பக்ர் அல் பக்தாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும், இமாமுனா மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹில் காஹிரீ  றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும் கோர்வை செய்யப்பட்ட கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 23.11.2014 அன்று இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

அல்லாஹ் உதவியால் ஸபர் மாதம் முழுவதும் இஷா தொழுகையின் பின் புனித கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ்வும், ஸபர் மாதம் இவ்வுலகை விட்டும் பிரிந்த ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் தங்கள் வாப்பா நாயகம் அன்னவர்கள் பேரிலான மௌலிதும் ஓதப்படும்.

அண்ணலார் மேல் பேரன்பு கொண்ட அனைவரும் இம்மஜ்லிஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன், தங்களது வீடுகளில் தினமும் நபீபுகழ் மாலை புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை ஓதி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.

You may also like

Leave a Comment