ஏத்துக்கால் கடற்கரையில் கந்தூரி

September 26, 2015
புதிய காத்தான்குடி ஜெய்லானி ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்கள் பெயரிலான மௌலித் நிகழ்வு ஒன்றை 26.09.2015 சனிக்கிழமை பின்னேரம் ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பான இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட உஸ்தாத்மார்கள், மௌலவீமார்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முஹ்யித்தீன் மௌலித் ஓதி, கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களின் பொருட்டு கொண்டு மீனவர்கள், அப்பிரதேச வாசிகள் வாழ்வில் செல்வமும், அருளும் வேண்டி  துஆப்பிரார்த்தனை செய்யப்பட்டது.
27.09.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கந்தூரி நார்ஷா வழங்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும்.

You may also like

Leave a Comment