அவ்லியாக்கள் என்றால் ……..

June 4, 2012
-அபூ பஜ்ரி ஜலா-

வெற்றுக் கூட்டம்
ஒன்று
போடுது
பெரும் கோஷம்
அல்லாஹ்வின்
வலியென்றால்
யாரென்று
தெரியாமல்
அவர்களின்
அகமிய – நிலைதான்
புரியாமல்
* * * * * * *

அல்லாஹ்வை
அறிந்து
இறை நேசம் கொண்டு
பயம்
கவலை
அற்று
வாழும்
கலங்கரைவிளக்கங்கள்
அல்லாஹ்வின்
வலிமார்கள்

* * * * * * *
இறைவனே
கதி
என்று
கேடு பயர்க்கும்
மனவாசை விலக்கி
நேரத்தின்
பெரும்பகுதி (யை)
இறை நினைவில்
கழித்து
சைத்தானின்
தூண்டுதலில்
தன்னை விடுத்து
மாசுமறுவற்று
வாழ்கின்ற
அற்புத
ஜீவன்கள்
அல்லாஹ்வின்
வலிமார்கள்
* * * * * * *
அச்சத்தோடு
இறை
வணங்கி
அவனிட்ட
கட்டளைக்குக்
கீழ்
படிந்து
அன்பால்
அனைவரையும்
கவர்ந்து
ஷரீயத்தில் –புலியாய்
சாத்வீக
வழிநடந்து
சத்தியத்தை
உரைத்து
சற்குணம்
குடிகொண்ட
அருள்
நிறைந்த
ஆத்மாக்கள்
அல்லாஹ்வின்
வலிமார்கள்
* * * * * * *
அல்லாஹ்வை
அறிந்து
அவனில்
அழிந்து
அகக்கண்
திறந்து
அனைத்தும்
உணர்ந்து
கொள்கையில்
உறுதியாய்
என்றும்
வாழ்பவர்கள்
அல்லாஹ்வின்
வலிமார்கள்
* * * * * * *
ஆனந்த
வாழ்வை
அஹதுக்கு
அர்ப்பணித்து
மண்ணறை மேலும்
மண்ணறையினுள்ளும்
மகிழ்வோடு
வாழும்
மன்னர்களே
அல்லாஹ்வின்
வலிமார்கள்
* * * * * * *

You may also like

Leave a Comment