Tuesday, March 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

மௌலவீ  KRM. ஸஹ்லான் றப்பானீ  BBA (Hons) Jp



தலைப்புக்கள்

  1. ஜனாஸா தொழுகை
  2. தொழுகையின் ஷர்த்துக்கள்
  3. ஜனாபத்
  4. தொழுகையின் பர்ழுகள்
  5. தொழுகை நேரங்கள் 
  6. வுழு
  7. தொழுகையைமுறிப்பவைகள்
  8. உழ்ஹிய்யஹ்வின் சட்டங்கள்

ஜனாஸா தொழுகையின் ஷர்த்துகள்

ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.
1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும்.
ஜனாஸா தொழுகையின் பர்ழுகள்
1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை, கிப்லாவைநோக்கி, அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.
2. நின்று தொழசக்தியுடையோர் நின்று தொழுவது பர்ழாகும். 
3. தக்பீர் தஹ்ரீமாவை சேர்த்து நான்கு தக்பீர் சொல்லித் தொழுவது பர்ழாகும்.
ஒவ்வொரு தக்பீரையும் சொல்லும் போதுகைகளை உயர்த்திபின்பு அவைகளை நெஞ்சுக்குக் கீழே கட்டிக்கொள்வது சுன்னத்தாகும். 
4. முதல் தக்பீர் கட்டியவுடன் சூரத்துல்பர்திஹா ஓதுவது பர்ழாகும். பாதிஹாவிற்கு முன் அஊது கூறுவதும் இறுதியில்ஆமீன் கூறுவதும் சுன்னத்தாகும்.
5. இரண்டாவது தக்பீர்கட்டியவுடன் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதுஸலவாத்து சொல்வது பர்ழாகும். அத்துடன் அவர்கள் குடும்பத்தார்களையும் ஸலவாத்தில் இணைத்து ஓதுவதும் ஸலவாத்திற்கு முன் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவதும் எல்லா முஃமின்களுக்காகவும் துஆ செய்வதும் சுன்னத்துக்களாகும்.
6. மூன்றாவது தக்பீர்கட்டியவுடன் மய்யித்திற்காக துஆ செய்வதுபர்ழாகும். 
துஆவின்குறைந்தஅளவு: 
الّلهمّ اغفرله وارحمهُ 
“அல்லாஹூம்மஃபில்லஹூ வர்ஹம்ஹூ “ என்பதாகும். 
மையித்திற்காக நீண்ட துஆச்செய்வது சுன்னத்தாகும். 
மூன்றாவதுதக்பீரில்ஓதவேண்டியசுன்னத்தானதுஆ: 
اللهمّ اغفرله واعف عنه وعافه واكرم نزله ووسّع مدخله واغسلهُ بالماء والثـّلج والبرد ونقـّه من الخطايا كما يُنقـّي الثوبُ الابيض من الدّنس وابدله دارا خيرا مّن داره واهلاخيرا من اهله وزوجا خيرا من زوجه واد خله الجنّة وأعذه من عذاب القبر وفتنته ومن عذاب النّار اللهمّ اغفر لحيّنا وميّتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأُنثانا اللهمّ من احييته منّا فاحيه علي الاسلام ومن توفـّيته منا فتوفه علي الايمان 
மய்யித்து குழந்தையாக இருப்பின்: 
اللهمّ اجعله فرطا لابويه وسلفا وذخرا وعظة واعتبارا لهما وشفيعا لهما وثقّل به موازنيهما وافوغ الصّبر علي قلوبهما 
என்று துஆச்செய்வது சுன்னத்தாகும் 
நான்காவதுதக்பீரில்: 
الّلهمّ لاتحرمنا اجره ولاتـفتنّا بعده واغفر لنا وله 
காயிப் ஜனாஸா 
வெளியூரில் இறந்தநபருக்காக (அந்த ஊர் குறைவான தூரத்தில் உள்ளது என்றாலும்) காயிப் ஜனாஸா தொழுது கொள்ளலாம். வேறுவேறு ஊர்களில் இறந்தமய்யித்துகளுக்காக காயிப் ஜனாஸா தொழுவது சுன்னத்ஆகும். 

ஜனாஸா தொழுகைக்கு ஜமாஅத்சுன்னத்தாகும். 
                                                      *********************************



தொழுகையின் ஷர்த்துக்கள்

ஷர்த் என்பது எவ்வகை வணக்கத்துக்கும் இன்றியமையாததொன்றாகும். வணக்கம் தொடங்கி முடிவுவரை ஷர்த் பேணப்படல் அவசியம், இன்றேல் அவ்வணக்கம் செல்லுபடியாகாது. 

தொழுகையின் ஷர்த்துகள் பத்து ஆகும். முதல் ஐந்தும் அறிவோடு சம்மந்தப் பட்டவை. நோன்பு , ஹஜ் போன்ற எல்லா வணக்கங்களும் இவை பொதுவானவையாகும். பிந்திய ஐந்தும் தொழுகை, ஜனாஸாத் தொழகை, ஸஜ்தாஷுக்ர், ஸஜ்தாதிலாவத் முதலியவற்றுக்குச் சொந்தமான ஷர்த்துகளாகும். 
1. முஸ்லிமாயிருத்தல். 
2. தம்யீஸ்எனும் விபரமறிதல். 
3. பர்ழு (தொழுகை) களை பர்ழு என அறிதல். 
4. நிறை வேற்றும் முறையை அறிதல். 
5. (தொழுகையின்) பர்ழு, ஸுன்னத்துக்ளைப் பிரித்தறிதல். 
6. (சிறு தொடக்கு பெருந்) தொடக்குகளை விட்டும் சுத்தமாயிருத்தல். 
7. (உடல், உடை, தொழுமிடம் என்பன) நஜிஸ்களை விட்டும் சுத்தமாயிருத்தல். 
8. அவ்றத்தை மறைத்தல். 
9. தொழுகைக்கு நேரமாகி விட்டதை அறிதல். 
10. கிப்லாவை முன்னோக்குதல். 
சிறு தொடக்கு பெருந்தொடக்குகளை விட்டும் சுத்தமாயிருத்தல். 
வுழூ செய்ததும் சிறு தொடக்கு நீங்கிவிடும். வுழூ முறியாவிடின் அடுத்த தொழுகைக்கு, திரும்பவும் வுழூசெய்வது அவசியமல்ல. எனினும் அடுத்த தொழுகைக்கு திரும்ப வுழூ செய்வது ஸுன்னத்தாகும். குளித்தல் கடமையானால்பெருந்தொடக்கு உண்டாகிவிடும். பெருந்தொடக்கு நீங்க உரிய முறையில் குளித்தல் அவசியம். 
(உடல், உடை, தொழுமிடம் என்பன) நஜிஸ்களை விட்டும் சுத்தமாயிருத்தல். 
தொழுபவரின் உடல், உடை, தொழுமிடம் என்பன நஜிஸ்களை விட்டும் சுத்தமாயிருத்தல் அவசியம்.தலை, மயிர், உள்வாய், உட்கண், உட்பட உடல்முழுவதும் நஜிஸ்களை விட்டும் சுத்தமாயிருத்தல்அவசியம். உடயைப் போன்றே உடலில் அணிந்துள்ள சகலதும் நஜிஸை விட்டும் சுத்தமாயிருத்தல் மிக அவசியம். 
மனிதனால் தவிர்ந்திருப்பதற்கு கடினமான சில நஜிஸ்கள் மன்னிக்கப்படுகின்றன.அவை படிந்திருக்கும் போது தொழுவது பிழையல்ல. அவற்றுக்கம் சில விதிகள் உள்ளன. விதிகள் தவறும் போது அவை மன்னிக்கப்படமாட்டாது. 
தன் உடலிருந்து வெளியாகும், இரத்தம், ஊனம், சீழ், பாதையிலுள்ள நஜிஸான சேறு, ஈ, நுளம்பு,தெள்ளு முதலானவற்றின் இரத்தம், அவற்றின் மல சலம், உடம்பிலும் உடையிலும் தோய்ந்திருந்தால் மன்னிக்கப்படும். ஆனால், அவற்றை உடையில் அல்லது உடம்பில் பூசிக்கொள்ளாதிருத்தல் அவசியம். தவிர்ந்திருப்பது மிகக் கஷ்டமான பறவைகளின் மல சலம் நிலத்தில் காய்ந்து போயிருந்தால் அவை மன்னிக்கப்படும். அறிந்து கொண்டே அவற்றை மிதித்தால் மன்னிக்கப்படமாட்டாது. எலிகளின் மலம் உடல், உடை,இடம் எதிலிருந்தாலும் மன்னிக்கப்படமாட்டாது. 
அவ்றத்தை மறைத்தல். 
அவ்றத் என்பது உடலில் வெளியாக்கக்கூடாத பகுதியாகும். 
தொழுகையின் அவ்றத்: தொழுகையின் போது ,பெண்கள் மணிக்கட்டுவரை முன்கையையும் முகத்தையும் தவிர மற்ற பகுதிகள் அனைத்தையும் மறைப்பது கடமையாகும். தலைமயிர், உள்ளங்கால் என்பவைகூட வெளிப்பட்டால்தொழுகை முறிந்துவிடும். ஆண்களும் அடிமைப் பெண்களும் முழங்காலுக்கும் தொப்புளுக்கு மிடைப்பட்ட பகுதியை மறைத்துக்கொண்டாலும் தொழுகை நிறைவேறிவிடும். எனினும் முகம், பாதம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்வது ஸுன்னத்தாகும். மரப்பட்டை, இலை, குழைகள், சேறு முதலான எப்பொருளாலும் அவ்றத்தை மறைக்கலாம். ஒன்றும் கிடைக்காத இக்கட்டான நிலையில் நிர்வானமாகவாவதுதொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும். உடலின் நிறம் தெரியாத வகையில் மறைத்துக்கொள்வது கடமை. மிக மென்மையான உடையால் மறைத்து உடலின் நிறம் தெரியுமாயின் அது அவ்றத்தைமறைத்ததாகக்கொள்ளமுடியாது. 
தொழுகைக்கு நேரமாகி விட்டதை அறிதல். 
“ நிச்சயமாகவே தொழுகையானது முஃமீன்கள்மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆகிவிட்டது” – அல்குர் ஆன். 
பர்ழு, ஸுன்னத் தொழுகைக்குரிய நேரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த நேரத்தை (நிச்சயமாக) அறிந்து கொள்ளும்முன், குறித்த தொழுகையைத் தொழுவது ஹறாமாகும். அது நிறைவேறவும் மாட்டாது. குறிப்பிட் நேரம் பிந்தினால் அது கழாவாகிவிடும் பர்ழுத்தொழுகை கழாவாகிவிட்டால். அதை கழாவாகத் தொழுவதும் பர்ழாகும். ஸுன்னத்தை கழாச் செய்வதும் ஸுன்னத்தாகும்.

                                                 *********************************



ஜனாபத் 

ஜனாபத் என்பதன் பொருள்’தூய்மையின்மை’ என்பதாகும். சிறுதொடக்கு உள்ளவர்கள் வுழூச்செய்து தூய்மைப்படுத்திக்கொள்வது போன்று பெருந்தொடக்கு உள்ளவர்கள் குளித்து தூய்மைப்படுத்திக்கொள்வது கடமையாகும். 
புணர்தல், பிரசவித்தல், விந்து வெளிப்படுதல் ,உறக்கத்தில் ஸ்கலிதமாதல், மாதவிடாய் இரத்தம் வெளிவருதல், மரணித்தல் ஆகிய இந்த தூய்மையற்ற நிலைகளிலிருந்து குளித்து தூய்மைப்படுத்திக் கொள்வது பர்ளாகும்.

இதேபோன்று ஆண்இன உறுப்பின் கத்னா செய்தபகுதியானது பெண்இன உறுப்பில் மறைந்துவிட்டால் விந்து வெளிவந்தாலும், வராவிட்டாலும் இருவரின்மீதும் குளிப்பது கடமையாகும்.
ஹைளு: 
குறித்தகாலங்களில் பெண்களின் கருப்பையின் ஓரப்பகுதியிலிருந் துவெளிவரும் இயற்கை உதிரப்போக்கிற்கு ஹைளு (மாதவிடாய்) என்று சொல்லப்படும். 9 வயதில் தொடங்கும் மாதவிடாய் 55 வயதை அடையும் போது நின்றுவிடும். சிலருக்கு 60 வயது வரை நீடிப்பதுமுண்டு. 
ஹைளு ஏற்படும் குறைந் தபட்சக்கால அளவு 24 மணிநேரங்கள். அதன் அதிகபட்ச காலஅளவு 15 நாட்கள். மிகுந்த காலஅளவு 6 அல்லது 7 நாட்கள். இந்த 24 மணி நேரத்தை விடக்குறைந்த அளவோ 15 நாட்களைவிட அதிகமான அளவோ உதிரப்போக்கு ஏற்படின் இதுஹைளாகக் கணிக்கப்படமாட்டாது. அவைவியாதி இரத்தம் அல்லது இஸ்திஹாளா (பெரும்உதிரப்போக்கு) எனக்கருதப்படும்.

ஒருமாதம் வெளிப்பட்ட ஹைளுக்கும் மறுமாதம் வெளிப்டும்ஹைளுக்கும் இடையே (சுத்தமான) இடைவெளி15 நாட்கள் அவசியம்இருக்கவேண்டும். அவ்வாறு 15 நாட்கள் இடைவெளிக்குப்பிறகு வரும் இரத்த மேஹைளு (மாதவிடாய்) ஆகும். அவ்வாறின்றி ஏற்படும் இரத்தப்போக்கு இஸ்திஹாளா (பெரும்உதிரப்போக்கு) எனக்கருதப்படும். 
சிறிய, பெருந்துடக்குள்ளவர்கள்செய்யக்கூடாதசெயல்கள்: 
தொழுதல், தவாபுசெய்தல், குர்ஆனைத்தொடல், ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதியதற்காக ஸுஜூதுசெய்தல், குர்ஆன்ஷரீபின் ஆயத்துகள் எழுதப்பட்டிருக்கும் தாள்கள் அல்லது பலகைகளைத் தொடுதல் ஆகியவைஹராமாகும். குர்ஆன்ஷரீப் நஜீஸில் விழுந்துவிடும் அல்லது நீரில் மூழ்கிவிடும் அல்லது தீயில் கரிந்துவிடும் அல்லது அவமதிக்கப்படும் என பயந்தால் சிறிய,பெரிய தொடக்குள்ளவர்கள் அவைகளை எடுத்து பாதுகாப்பதில் தவறில்லை. 
பெருந்துடக்குள்ளவர்கள் பள்ளிவாசலில் தங்கியிருப்பதும், குர்ஆன் ஆயத்துக்களின் சில வாக்கியங்களை ஓதுவதும்ஹராமாகும். 
ஹைளு, நிபாஸ் (பிரவசத்தொடக்கு) உள்ளவர்கள் பள்ளியில் உள்செல்வதும், அங்கு தங்கியிருப்பதும், குர்ஆன் ஷரீபை தொடுவதும், அதை ஓதுவதும் நோன்பு நோற்பதும், தங்கள் கணவரோடு மருவுவதும் ஹராமாகும். இப்பெண்களின் தொப்புழுக்குக்கீழ், முட்டுக்காலுக்கு மேலுள்ள பகுதிகளில் திரையின்றிச் செய்யும் மோகச்செயல்களும் ஹராமாகும். 
இச்சமயங்களில் விடுபட்ட தொழுகைகளைகளாச் செய்யவேண்டியதில்லை. ஆனால் ரமளான் மாத நோன்புகளை மட்டும் களாச்செய்வது பர்ளாகும். 
இஸ்திஹாளா(பெரும்உதிரப்போக்கு)​ 
ஹைளுக்கென்று தீர்மானிக்கப்பட்ட அதிகபட்சகாலஅளவான 15 நாட்ளைக் கடந்து வரும் பெரும் உதிரப்போக்கிற்கு இஸ்திஹாளா எனப்படும். ஹைளு காலங்களில் ஹறாமானவை அனைத்தும் (பள்ளியில்உள்செல்வதும், அங்குதங்கியிருப்பதும் தவிர) இதில் ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. 
இஸ்திஹாளாவடைய பெண்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் தங்களின் மறைவிடங்ளைக்கழுவி இரத்தம் வெளியேறாதவாறு துணியினால் அதைக்கட்டிக்கொள்வதோடு வுழூச்செய்து தொழுவதும் ரமழான் மாத்த்தில் நோன்பு நோற்பதும் பர்ழாகும். இவர்கள் ஒவ்வொருநேரத்தொழுகைக்கும் இவ்வாறு தூய்மைப்படுத்திக் கொள்வதோடு தங்களின் வுழூவினால் ஒரு பர்ழுத்தொழுகயை மட்டும் நிறைவுசெய்யமுடியும். எனினும் சுன்னத்தான தொழுகைகள் அதிகம்தொழுதுகொள்ளலாம். 
நிபாஸ்: 
குழந்தை பெற்றவுடன் அல்லது குறைந்த மாதகட்டிகள் விழுந்தவுடன் ஏற்படும் உதிரப்போக்கிற்கு நிபாஸ் என்று பெயர். இந்த இரத்தம் வெளிவரும் குறைந்தகால அளவு ஒரு நொடிப்பொழுது ஆகும். நிறைந்தகால அளவு அறுபது நாட்கள். மிகுந்த காலஅளவு நாற்பது நாட்கள் ஆகும். ஹைளுடைய சட்டங்கள் அனைத்தும் நிபாஸுக்கும்பொருந்தும். 
அல்குஸ்லு(குளிப்பு) 
‘குளிப்பின் பர்ழை நிறைவேற்றுகிறேன்’ என்ற நிய்யத்தைக் கொண்டு உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீரை ஓட்டுதலுக்குப் குளிப்பு என்று பெயர். 
இதன்பர்ழுகள்இரண்டு. 
1. நிய்யத் 
2. உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீர் ஊற்றுதல். 
முழுக்கு குளியலின்போது நகங்களின் உட்பகுதிகள், உரோமங்களின்உள், வெளிப்பகுதிகள், மலசலம் கழிக்க அமரும்போது பெண்ணின் மறைவிடங்களில் வெளித்தெரியும் பகுதிகள் ஆகியவற்றை நன்கு கவனித்து கழுவுதல் பர்ழாகும். 
500 ராத்தல் (280 லிட்டர்) கொள்ளளவு நீர் நிறைந்த தொட்டிகளில் முங்கிக்குளித்துக் கொள்ளலாம். இதைவிடச் சிறிய பாத்திரங்களிலிருந்து நீரை அள்ளிக்குளிப்பவர்கள் குளிப்பின் நிய்யத்துடன் கைளைத் தண்ணீர்ப் பாத்திரத்தினுள் முக்கினால் அத்தண்ணீர் குளிக்கப்பயனற்றதாக ஆகிவிடும். 
ஸுன்னத்துக்கள்: 
குளிக்கும் முன்சிறுநீர்கழித்தல், மேனியிலோ, ஆடையிலோ படிந்திருக்கும் அசுத்தங்களை (நஜீஸ்களை) கழுவுதல், பரிபூரணமாக வுழூசெய்துகொள்ளுதல், குளிக்கத்தொடங்கும் போது பிஸ்மில்லாஹ் சொல்லல், வாயையும், மூக்கையும் சுத்தம் செய்துகொள்ளல், ஆரம்பத்தில் தலைக்கும் பின்பு வலது மற்றும் இடது புறங்களுக்கும் தண்ணீர் ஊற்றுதல், ரோமங்களை கோதிவிடுதல், ஒவ்வொ ருபகுதியின்மீதும் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல், உடலைத் தேய்த்துக்குளித்தல், கமுக்கட்டு, தொப்புள், கை மொழிகள் போன்ற இடங்களை நன்றாக வனித்துகழுவுதல், கிப்லாவை முன்னோக்கி இருத்தல், தேவையில்லாமல் உரையாடாதிருத்தல், ஓர் உறுப்பு உலருமுன் தொடர்ந்து மற்றொரு உறுப்பைக்கழுவுதல்,குளித்தபின்வியாதி, குளிர், சளி போன்ற காரணமில்லாவிடில் துடைக்காமல்விடுதல், குளித்தபின் ஹைளுவந்த வழியில் நறுமணம் பூசுதல் ஆகியவை குளிப்பின் ஸுன்னத்துக்களாகும். குளித்தபின் ஷஹாதத் கலிமாவை ஓதி, பின்பு வுழூவின் துஆவைஓதி, மூன்று முறை இன்னாஅன்ஸல்னா’ சூராவை ஓதுவதும் அதன்பின், 
اللهمّ اغْفرْ لـيْ ذنبيْ ووسّعْ ليْ فيْ داريْ وبارك ليْ فيْ رزْقيْ ولاتفتنيْ بما زويْت عنّيْ
என்று ஓதுவதும் ஸுன்னத்தாகும். 
சுன்னத்தானகுளிப்புகள்: 
ஜும்ஆ தொழுகை, இரு பெருநாள் தொழுகைகள், சூரிய சந்திர கிரகணத்தொழுகைகள் ஆகியவைகளுக்காக,மழைதேடிதொழுவதற்காக, ஹரம் ஷரீபிலும், மதீனா முனவ்வராவிலும் நுழைவதற்காக, தவாஃப்செய்வதற்காக, அரபா மினாவில் தங்குவதற்காக, பைத்தியம் போதை மயக்கம் தெளிந்ததற்காக, மய்யித்தைக் குளிப்பாட்டியதற்காக, ஹாஜிகள் ஜம்ரத்துல் அகபா,ஊலா, வுஸ்தாவில் கல் எறிவதற்காக, ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுவதற்காக, சன்மார்க்க நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக, பெருந்தொடக்கு இல்லாத காபிர்கள் இஸ்லாம் ஆகுவதற்காக  ஆகியவை சுன்னத்தான குளிப்புகள். 
ஸுன்னத்தான குளிப்பை நிறை வேற்றுகிறேன் என்றோ அல்லது’ இன்னசெயலுக்காக குளிக்கிறேன் என்றோ நிய்யத் செய்துகொண்டால் சுன்னத்தை நிறைவேற்றிய நன்மைகளை அடையலாம். நிய்யத்துச் செய்யாவிட்டால் நன்மைகள் கிடைக்கமாட்டாது.

*********************************
தொழுகையின் பர்ழுகள்

தொழுகையின்பர்ழுகள் 19 அவை 
1. நிய்யத் 
2. ஆரம்ப தக்பீர் மொழிதல்
3. நின்று தொழசக்தியுள்ளோர் நின்று தொழுதல் 
4. பாத்திஹாசூரா ஓதுதல் 
5. ருகூஉ செய்தல் 
6. அதில் தாமதித்தல் 
7. இஃதிதாலில் நிற்றல் 
8. அதில் தாமதித்தல் 
9. முதல் ஸுஜூது செய்தல்

10. அதில் தாமதித்தல் 
11. நடு இருப்பில் இருத்தல் 
12. அதில் தாமதித்தல் 
13. இரண்டாம் ஸுஜூதுசெய்தல் 
14. அதில் தாமதித்தல் 
15. கடைசிஅத்தஹிய்யாத்திற்காகஅமர்தல் 
16. அத்தஹிய்யாத் ஒதுதல் 
17. அதில் ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் மீது
  ஸலவாத்ஓதுதல் 
18. முந்தின ஸலாம்சொல்லுதல் 
19. இவற்றைவரிசைக்கிரமமாகசெய்தல் 
தொழுகையின் பர்ழுகள் பற்றிய விபரங்கள். 
1. நிய்யத்: இதற்கு உள்ளத்தால் நாடுதல் என்று பொருள். இது தொழுகையின் ஆரம்பபர்ளாகும். இன்னநேரத்தின் பர்ழான தொழுகையை தொழுகிறேன் என்பதிலுள்ள மூன்று அம்சங்களும் பர்ழான தொழுகையில் இருக்கவேண்டிய அம்சங்கள். 
அதாவாக கிப்லாவை முன்னோக்கி இத்தனை ரக்அத்துகளை அல்லாஹ்விற்காக என்ற இந்த நான்கையும் நிய்யத் செய்வதும் உள்ளத்தில் நிய்யத் செய்வதை நாவால் மொழிவதும் சுன்னத்தாகும். 
2. ஆரம்ப தக்பீர் மொழிதல் 
இதற்கு தக்பீரதுத்தஹ்ரீம் எனப்படும் தொழுகையை நிய்யத்செய்து அல்லாஹுஅக்பர் என்று கூறுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. தொழகையிலுள்ள எல்லா ஓதல்ளையும் தன் காதுக்கு கேட்கும் அளவாவது ஓதுவது கடமையாகும். சாதாரணமாக தன் காதுக்கு கேட்கும் அளவு ஓதாவிட்டால் ஓதியதாக கணிக்கப்படமாட்டாது. 
الله أكبـرஅல்லாஹு அக்பர் என்று எத்தகைய மாற்றமுமின்றி சொல்லுதல் அவசியமாகும். 
3. நின்று தொழசக்தியுள்ளோர் நின்று தொழுதல் 
நிற்க முடியுமானவர்கள் பர்ழுத்தொழுகையை நின்றுதொழவேண்டும். தானாகவோ,பிறரின் உதவியினாலோ அல்லது சுவரில் சாய்ந்தோ நிற்க முடியுமெனில் நின்றேதொழவேண்டும். 
கூன்விழுந்திருப்பதாலோ,வியாதியினாலி நிமிர்ந்து நிற்க இயலாதபோது கூனிய அமைப்பிலேயேதொழவேண்டும். 
4.பாத்திஹா சூராஓதுதல்: ஜனாஸா தொழுகையைத் தவிர எல்லா தொழுகைகளிலும் வஜ்ஹத்து ஓதுவது ஸுன்னத்து ஆகும். 
وجّهتُ وجهي للّذي فطرالسّماوات والاْرْض حنيْفا مسلم وما انا منالْمشْركيْن. انّ صلاتيْ ونسكيْ ومحياي ومماتي لله ربّ العالمين. لاشريك له وبذالك امرْت وانا من الْمسلمين 
ஸூரத்துல் பாத்திஹா ஓதுவது எல்லாத் தொழுகையிலும் தனியாகத் தொழுதாலும், இமாம் ஜமாஅத்துடன் தொழுதாலும் பர்ழாகும். பிஸ்மில்லாஹ்வை சேர்த்து இந்தசூரத்தின் எழுத்துக்கள் 156 ஆகும்.அதன்ஷத்துகள் 14 ஆகும். இதில் ஏதாவது ஒரு எழுத்தையோ ஷத்தையோ விட்டு ஓதினால் பாத்திஹா நிறைவேறாது. ஏதாவது ஒன்றை விட்டது நினைவு வந்தால் மீண்டும் சரியாக ஓதுவது அவசியமாகும். 
பாத்திஹாசூராவின் முதல் ஆயத்தை ஓதி முடிந்தவுடன் அடுத்த ஆயத்தை தொடர்ந்து ஓதவேண்டும். தும்மியதற்காக “அல்ஹம்து லில்லாஹ்” சொல்வதுபோன்ற,தொழகயோடு சம்பந்தமில்லாத திக்ருகளை இந்த ஆயத்துகளுக்கிடையில் கூறினால் இதன் தொடர் முறிந்துவிடும். எனவே திரும்பவும் பாத்திஹாசூராவின் ஆரம்பம் முதல் ஓதவேண்டும். 
இமாமுடன் சேர்ந்து மஃமூம் ஆமீன் கூறல், இமாம் “றஹ்மத்” அல்லது “அதாப்” உடைய ஆயத்துளை ஓதியதற்காக மஃமூம் “றஹ்மத்” கிடைக்வேண்டுதல், அல்லது அதபை விட்டு காவல்தேடுதல், இமாமுடன் சேர்ந்து திலாவத்தடைய ஸுஜூதுசெய்தல் ஆகிவைபோன்ற தொழுகையோடு சம்பந்தப்பட்ட திக்ருளை ஆயத்துகளிடையேகூறுவதினாலோ, செயல்ளைச் செய்வதினாலோ பாத்திஹா சூராவின் தொடர் முறிவதில்லை. விட்ட இடத்திலிருந்து ஓதிக்காள்வது போதுமானது. 
பாத்திஹாசூரா ஓதும் முன்பு’அஊது பில்லாஹிமினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று சப்தமின்றி எல்லாரக் அத்திலும் ஓதுவது ஸுன்னத்தும் முதல் ரக்அத்தில் ஓதுவது ஸுன்னத் முஅக்கதாவும் ஆகும். முதல் ரக்அத்தில் அஊது ஓதாமல்விடுவது மக்ரூஹ் ஆகும். 
பாத்திஹாஸூராவை ஓதியபின் ஆமீன் என்று கூறுவது ஸுன்னத்தாகும். 
5.ருகூஉசெய்தல்: தொழுகையில் தக்பீர்கட்டி (கியாம்) நிலையில் பாத்திஹாவும், சூராவும் ஓதியபின்பு குனிந்து நிற்கும் செயலுக்கே ருகூவு என்று பெயர். 
ருகூஉவின் பர்ழுகள் மூன்று ஆகும். 
1. முழங்காலைஉள்ளங்கையால்தொடும்அளவுக்குகுனிவது 
2. ருகூவுசெய்வதற்காகவேகுனிவது 
3. குனிந்தபின்அங்கஅசைவுகள்அமைதியாகும்வரைஅதில்தரிபடுவது. 
ருகூஉவின் சுன்னத்துகள்: 
1. தக்பீர் தஹரீமா போன்று இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் சொல்லியவாறு ருகூவிற்கு வருதல் 
2. சமமான பலகையைப் போன்று கழுத்தையும், முதுகையும் நேராக்கி குனிந்திருத்தல் 
3. இரு முழங்கால்களையும் ஒருசாண் அளவு பிரித்து நேராக நாட்டிநிற்றல் 
4. திரையின்றி திறந்துமற்றும் விரித்த வண்ணம் உள்ளங்கைகளினால் முழங்கால்களைப் பிடித்துக்கொள்ளல். 
5. ஆண்கள் தங்களின் முழங்கைகளை விலாப்பகுதியை விட்டும் வயிறை தொடைப்பகுதியை விட்டும் விலக்கிவைத்தல், பெண்கள் இவைகளை சேர்த்துவைத்தல். 
6.سبحان ربّي العظيم وبحمده என்று மூன்று முறை ஓதுவது. 
7 .தனியாகத் தொழுபவர் கீழ் காணும் துஆவை ஓதிக்கொள்ளல் 
اللهم لك ركعت وبك اَمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ومخّـي وعظمي وعصبي وشعري وبشري ومااستقلت قدمي لله رب العالمين 
‘அல்லாஹும்மலகரகஃதுவபிகஆமன்துவலகஅஸ்லம்துகஷஅலகஸம்யீவபஸரீவமுஃக்கீவஅள்மீவஅஸபீவஷஅரீவபஷரீவமஸ்தகல்லத்கதமீலில்லாஹிரப்பில்ஆலமீன்.’ 
6. அதில் தாமதித்தல் ருகூஉக்குப்போன உடலின் அசைவுகளும் அதிலிருந்து எழும் உடலின் அசைவுகளும் வெவ்வேறாகும்வரை ருகூஉவில் சற்று ஒடுங்கித்தாமதித்தல். இஃதிதால்,ஸுஜூது, நடு இருப்பு ஆகியவற்றிலும் தாமதித்தல் என்பதன் கருத்து இதுவாகும். 
7. இஃதிதாலில் நிற்றல்: ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்குத் திரும்பிவருவதற் குஇஃதிதால் என்று பெயர். இஃதிதாலுக்காகவே நிமிர்ந்து வருதல் மற்றும் அதில் தரிபடுதல் ஆகியவை இதன் பர்ழுகளாகும். 
ஒருவர் விஷப்பிராணியைக்கண்டு திடுக்குட்டு நிமிர்ந்தால் அது இஃதிதாலாக கணிக்கப்படமாட்டாது. திரம்பவும் ருகூஉக்குச்சென்று அங்கிருந்து இதற்காகவே நிமிர்ந்து எழுதல்வேண்டும். 
ருகூவிலிருந்து எழும்போது இருகைகளையும் தக்பீர்தஹ்ரீமா போன்று உயர்த்தி 
سمع الله لمن حمده . ربنـا لك الحمد ملأ السموات وملأ الأرض وملأ ماشْت من شيْ بعد’

ஸமி அல்லாஹுலிமன் ஹமிதஹ் ரப்பனாலகல்ஹம்து மில்அஸ்ஸமாவாதி வமில்அல்அர்ழி வமில்அமாஷிஃத மின்ஷையின் பஃது’ என்று சொல்வது ஸுன்னத்தாகும். 

குனூத்: 
இதற்குப்பணிதல், தொழுகையின் போது இறைஞ்சுதல் என்று பொருள். ஸுபுஹுத் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தின் இஃதிதாலிலும் மற்றும் ரமழான் மாதத்தின் பிற்பகுதி 15 நாட்களில் வித்ரு தொழுகையின் கடைசி ரக்அத்தின் இஃதிதாலிலும் வழமையாக ஓதும் இஃதிதாலின் திக்ருகளை ஓதி முடித்தபின் குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும். இது போன்று உணவுப்பஞ்சம், வறட்சி, நோய், சன்மார்க்க விரோதிகளினால் அச்சம் உண்டானாலும் மற்றும் துன்பங்கள் சோதனைகள் போன்றவை ஏற்பட்டாலும் பர்ழுத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும். 
குனூத் துஆ: 
اللهمّ اهدني فيمن هديت . وعافني فيمنعافيت . وتولّني فيمن تولّيت. وباركلي فيما اعطيت. وقني شرّ ما قضيت
فانّك تقضي ولا يقضي عليك. فانّه لايذلّ من وّاليت. ولايعزّ من عاديت. تباركت ربّنا وتعاليت. فلك
الحمد علي ما قضيت. استغفرك واتوب اليك وصلّي الله علي سيّدنا محمّد وعلي آله وصحبه وسلّم 
இமாம் சப்தமிட்டு குனூத்தை பன்மை வசனத்தோடு ஓதுவதும், இமாமின் குனூத் துஆ, இறுதி ஸலவாத் ஆகியவைகளுக்கு மஃமூம்கள் ஆமீன் கூறுவதும்’பஇன்னகதக்ழீ’ முதல்’வஅதூபுஇலைய்க’ வரை இமாமுடன் சேர்ந்து சப்தமின்றி மஃமூம்கள் இதே வாக்கியங்களை ஓதுவதும் ஸுன்னத்துகளாகும். துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டால் இமாம் குனூத் ஓதிவிட்டு அதற்கென்று தனியாக துஆ செய்வது ஸுன்னத்தாகும். குனூத் துஆவை ஒருமை வசனத்தில் இமாம் ஓதுவது மக்ரூஹ் ஆகும். 
9. முதல் ஸுஜூது செய்தல்: ஸுஜூது என்பதற்கு தலையை தரையில் வைத்துப் பணிதல் என்று பொருள் தொழகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு ஸுஜூதுகள் செய்வது பர்ழாகும். 
இதற்கு 7 விதி முறைகள் உள்ளன. அவை: 
1.ஸுஜூது செய்வதற்காகவே தரைக்கு செல்லவேண்டும்.

2.தரைக்கு வந்தபிறகு அங்க அசைவுகள் அமைதியாகும் வரை  தரிபட வேண்டும்.

3. நெற்றி,இரு உள்ளங்கைகள், இரு முட்டுக்கால்கள், இரு உள்ளங்கால்களின் விரல்கள் ஆகிய ஏழு உறுப்புகளில் ஒவ்வொன்றினுடைய சிலபகுதிகளையாவது தரையில் பதித்தல்வேண்டும். இவைகளோடு மூக்கையும் சேர்த்துவைப்பது ஸுன்னத்தாகும்.

4,5. திரையின்றி திறந்தநிலையில் நெற்றியைதரையில் அழுத்தமாக வைப்பது பர்ளாகும். 
6. தலை, தோள் பகுதியை தாழ்த்தியும் இடுப்புப்பகுதிகளை உயர்த்தியும் ஸுஜூது செய்யவேண்டும். 
7. ஸுஜூதில் ஏழு உறுப்புகளையும் ஒன்றாக தரையில் வைத்திருக்கவேண்டும்.
ஸுஜூதின் ஸுன்னத்துகள்: 
இஃதிதாலிலிருந்து தக்பீர் கூறியவாறு கீழே வந்து முதலில் தன் இரு முட்டுகால்களையும் ஒருசாண் அளவு பிரித்து நிலத்தில் வைப்பதும், இரண்டாவதாக இரு கைவிரல்களையும் கிப்லாவை நோக்கி தோள்புயத்திற்கு நேராக நிலத்தில் வைப்பதும்,மூன்றாவதாக மூக்கையும், நெற்றியையும் வைப்பதும், நான்காவதாக கால் விரல்களை கிப்லாவை நோக்கி நட்டியும் ஒரு சாண் அளவு இருகால்களையும் பிரித்துவைப்பதும் ஸுன்னத்தாகும். ஸுஜூதில் கண்களை திறந்திருப்பதும், மூன்றுமுறை 
سبحان ربيّ الأعلي وبحمده 
என்று ஓதுவதும் ஆண்கள் தங்கள் முழங்கைகளை விலாப்பகுதியை விட்டும் வயிற்றைத் தொடைப்பகுதிகளை விட்டும் விலக்கிவைத்து ஸுஜூது செய்வதும், பெண்கள் இவைகளை சேர்த்துவைத்து ஸுஜூது செய்வதும், இருபாலரும் முழங்கைகளை தரையை விட்டு உயர்த்தியவாறு ஸுஜூது செய்வதும் தனித்தனி ஸுன்னத்துகளாகும். 
11. நடு இருப்பில் இருத்தல் 
:’ஜுலூஸ்’ என்பதற்கு இரு ஸுஜூதுகளுக்கிடையில் சற்று அமர்வது என்றுபெயர். முதல் ஸுஜூதிலிருந்து சிறு இருப்புக்காக எழுந்து வருதல், சிறு இருப்பில் அமர்ந்தபின் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை அதில் தரிபடுதல் இவ்விரண்டும் இதில் பர்ளாகும். 
இவைகளின் ஓதப்படும் திக்ருகளின் கால அளவைக்கடந்து, அதற்கு மேலும் பாத்திஹாசூராஓதும் அளவுக்கு இதில் காலம் தாழ்த்தினால் தொழுகை முறிந்துவிடும். எல்லாத்தொழுகைகளிலும் முதலாவது மூன்றாவது ரக்அத்துகளின் ஸுஜூதுகளை முடித்து நிலைக்கு எழுந்திருக்கும்போது சற்று அமர்ந்த பின்பு உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றி நிலைக்குவருவது ஸுன்னத்தாகும். 
15. கடைசிஅத்தஹிய்யாத்திற்காகஅமர்தல்: 
மண்டியிட்டு வலது கால் விரல்கள் கிப்லாவை முன்னோக்கி இருக்கும் வண்ணம் வலது காலைத்தரையில் ஊன்றிவைக்க வேண்டும். இடதுகாலின் புறப்பகுதியைத் தரையோடுசேர்த்துவைத்து இடது கரண்டைக்கால்மீது பித்தட்டைவைத்து அமரவேண்டும். இவ்வாறு அமர்வது நடு இருப்பில் (முதல்அத்தஹிய்யாத்தில் சுன்னத்தாகும். இரண்டாம்(கடைசி) அத்தஹிய்யாத்தில் வலது கால்விரல்கள் கிப்லாவை முன்னோக்கி இருக்கும் வண்ணம் அதைத்தரையில் பதித்துவைக்க வேண்டும். இடதுபாதத்தை வலதுகாலின் கீழே வெளிப்படுத்தி வைத்துக்கொண்டு பித்தட்டைத் தரையின்மீது வைத்துஅமரவேண்டும். 
இரண்டு அத்தஹிய்யாத்திலும் இருகரங்களையும் முழங்கால் முட்டிற்கு நேராகவைத்து வலதுகையின் ஆள்காட்டிவிரலை த்தவிர்த்து ஏனையவிரல்களை மூடிக்கொள்ளவேண்டும். அதன்பெருவிரலின் நுனியை ஆள்காட்டிவிரலின் அடியில் வைத்துக்கொள்ளவேண்டும். பின்பு அத்தஹிய்யாத்ஓதி ‘இல்லல்லாஹ்’ என்றுகூறும்போது சான்று பகர்வதற்கு அறிகுறியாக கலிமாவிரலை மட்டும் நீட்டிக்கொள்ளவேண்டும். இதன் பின்னர்விரலை அசைத்துக்கொண்டேயிருப்பது கூடாது . தொழும்போது அவரவர் சுஜூதுசெய்யும் இடத்தில் பார்வையைபதிப்பது சுன்னத்தாகும். ஆனால் அத்தஹிய்யாத்தில் கலிமாவிரலை உயர்த்தியபின்பு ஸலாம் கொடுக்கதிரும்பும் வரைபார்வையை கலிமாவிரலின்மீது படியவைக்கவேண்டும். இதுசுன்னத்தாகும். 
அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின்பு ஸஜ்தாஸஹ்வு செய்யவேண்டியிருப்பின் ஸஜ்தாஸஹ்வு செய்யும்வரை முதல்அத்தஹிய்யாத்தில் இருப்பதைப் போன்று இருப்பது சுன்னத்தாகும். 
தொழுகையில் கடைசி அத்தஹிய்யாத் தவிரமற்ற எல்லா இருப்புகளும் நடுஇருப்பைப்போன்று இருப்பது சுன்னத்தாகும். 
16. கடைசிஅத்தஹிய்யாத்ஓதுதல். 
17. இதில் ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதுதல் 
التحيّات المباركات الصّلوات الطيبات لله السّلام عليك ايّها النّبي ورحمة الله وبركاته. السّلام علينا وعلي عبادالله الصالحين.أشهد ان لاّاله الاّالله و أشهد انّ محمّد رّسول الله. اللهمّ صلّ علي محمدوعلي اَل محمّدكما صَلَّيْتَ علي ابراهيموعلي آل ابراهيم وبارك علي محمّد وعلي آل محمّد كما باركت علي ابراهيم وعلي آل ابراهيم في العالمين انّكحميد مّجيد 
அடிக்கோடிட்டுள்வைகளை மட்டும் முதல் அத்தஹிய்யாத்தில் ஓதுவதுசுன்னத்தும், கடைசி அத்தஹிய்யாத்தில் ஓதுவதுபர்ளுமாகும். ஏனெயவைகளை கடைசி அத்தஹிய்யாத்தில் மட்டும் ஒதுவதுசுன்னத்தாகும் د 
18. முதல்ஸலாம்கூறுதல்: அஸ்ஸலாமுஅலைக்கும் என முதல்ஸலாம் கூறிதொழுகையை முடிப்பது பர்ளு ஆகும். இடதுபாகம் திரும்பி இரண்டாவது ஸலாம் கூறுவதும் ஸலாமுடன்’வரஹ்மத்துல்லாஹ்’ எனசேர்த்துச்சொல்வதும் சுன்னத்துகளாகும். 
ஜனாஸா தொழுகையில் மட்டும் வபரகாத்துஹு என்பதைச்சேர்த்துக் கூறுவது சுன்னத்தாகும். 
19. இவற்றைவரிசைக்கிரமமாகசெய்தல்.

                                                    *********************************

தொழுகையின் நேரங்கள்

ஈமான் கொண்டோர் மீது தொழுகை, நேரம் குறிப்பிடப்பட் கடமையாகவுள்ளது. (ஆல்குர்ஆன் :4:103).

ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.தொழுகையின் நேரம் வந்து விட்தை அறிந்து தொழுதால்தான் தொழுகை நிறவேறும்.அதன்நேரம் வந்ததை அறியாமல் ஒருவர் தொழுதால், உண்மையில் அதன் உரியநேரத்தில் தொழுதுதிருந்தாலும் கூட தொழுகை நிறைவேறாது.

ளுஹர்தொழுகையின் நேரம்: பொழுது உச்சியை விட்டு சற்று சாய்ந்த்தது முதல் ஒருபொருளின் நிழல் அதன் சம உயரத்தை அடையும் வரை ளுஹரின் நேரமாகும். 

அஸர்தொழுகையின் நேரம்: ஒருபொருளின் நிழல் அதன் சம உயரத்தை அடைந்த்தது முதல் சூரியன் முழுமையாக மறையும் வரை அஸரின்நேரமாகும்.
மஃரிப்தொழுகையின் நேரம்: சூரியன் முழுமையாக மறைந்த்தது முதல் செம்மேகம் மறையும் வரை மஃரிபின்நேரமாகும்.
இஷாத்தொழுகையின்நேரம்: செம்மேகம் மறைந்த்தது முதல் அதிகாலையில் கிழக்குவெளுக்கும் வரை இஷாவின் நேரமாகும். 
சுப்ஹுத்தொழுகையின்நேரம்: கிழக்குவெளுத்த்து முதல் சூரியனின் சிறிய பகுதி உதயமாகும் வரைசுப்ஹின் நேரமாகும். 
அதாஃ(உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட்ட தொழுகை)
தொழுகையின் ஒரு ரக்அத்தை பூரணமாக அதற்குரியநேரத்தில் நிறைவேற்றிவிட்டால் தொழுகை முழுவதுமே உரிய நேரத்தில்நிறைவேற்றப்பட்ட தொழுகையாக (அதாஃ) ஆகிவிடும்.
கழாஃ(உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாத தொழுகை)
ஒரு ரக்அத்தை கூட பூரணமாக அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றப்படா விட்டால் தொழுகை முழுவதுமே உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாத தொழுகையாக (கழாஃ) ஆகிவிடும்.
தொழுகையின் சிறு பகுதியைக் கூடவேண்டுமென்றே அதன் உரிய நேரத்தைவிட்டும்(வக்த்) பிற்படுத்துவது ஹறாமாகும்.
தண்ணீரினால், தீயினால் அல்லது வேறொரு காரணத்தினால் உயிருக்கோ உடைமைகளுக்கோ ஆபத்து ஏற்படமென அஞ்சினால் அந்த ஆபத்தை நீக்க முயற்சிப்பதும் அதனால் தொழுகை கழாஃவானால் பிற்படுத்திதெழுவதும் கடமை(பர்ழ்) ஆகும்.
தொழுதுகொண்டிருப்பவர் மற்றவர்களின் உயிருக்கோ உடைமைகளுக்கோ ஆபத்து ஏற்படுவதைக்கண்டால் தொழுகையை இடையில்விட்டு விட்டு காப்பாற்றுவது கடமை(பர்ழ்) ஆகும்.
ஒருதொழுகையின் நேரம் ஆரம்பமான பின்னர் தொழாமல் அதன் நேரம் முடிவடைவதற்குள் எழுந்துவிடலாம் அல்லது மற்றவர்கள் எழுப்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு தூங்குவது மக்றூஹ் ஆகும். அந்த நம்பிக்கை இல்லயெனில் தூங்குவது ஹறாமாகும்.
தொழுவது மக்ரூஹானநேரங்கள்:

1.சுப்ஹுத்தொழுகையைதொழுதபின்சூரியன்உதயமாகும்வரையிலும்

2.சூரியன்உதயமாகிஓர்ஈட்டியின் அளவுக்கு அடிவானில்அது உயரும்

   வரையிலும்

3. வானில்சூரியன்உச்சியில்இருக்கும்போதும்.

4. அஸர்த்தொழுகையைமுடித்தபின்சூரியன் மறையும்வரையிலும்.

5. சூரியன் மறையும்போதும்.

இந்த நேரங்களில் நப்ல்முத்லக், தஸ்பீஹ் தொழுகை, மற்றும் இஹ்ராமிற்குரியநப்ல் தொழுகை ஆகிய மூன்று தொழுகைகளைமட்டும் தொழுவது மக்ரூஹ்தஹ்ரீம் ஆகும். வெள்ளிக்கிழமை உச்சிப்பொழுதில் நப்ல்முத்லக், தஸ்பீஹ் தொழுகை ஆகியவற்றை தொழுவதுகூடும்.
இம்மூன்றையும் தவிரவுள்ளபர்ளான அதா, களா தொழுகை,ஜனாஸாத் தொழுகை, பள்ளிவாச ல்காணிக்கைத் தொழுகை, கிரகணத் தொழுகை, வுளுவின் சுன்னத்தான தொழுகை போன்றவற்றை இந்த நேரங்களி ல் தொழுதால்கூடும்.

                                                  *********************************


வுழூ:
தண்ணீரா ல்உடலின் சிலகுறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு வுழூ என்றுபெயர். தொழுவதற்கு முன் வுழூ என்னும் அங்க சுத்தி செய்து கொள்ளல்வேண்டும்.
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள்கைகளையும், கணுக்கால்வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும் (சிறுபகுதியைத்) தடவிக்கொள்ளுங்கள்’.
-அல்-குர்ஆன் (5:6)
இந்தவுழூவிற்குஷர்த்துகள், பர்ழுகள், சுன்னத்துக்கள்இருக்கின்றன..
வுழூ வின்பர்ழுகள்(கடமைகள்):
1. வுழூவின்கடமையைநிறைவேற்றுகிறேன்என்றுநிய்யத்செய்தல்.
2. முகம்கழுவுதல்
3. முழங்கைகள்வரைகைகளைக்கழுவுதல்
4. தலையின்சிறுபகுதியைமஸ்ஹுசெய்தல்
5. கணுக்கால்வரைகால்களைகழுவுதல்
6. இவைகளைவரிசைக்கிரமமாகசெய்தல்.
வுழூ வின்பர்ழுகள்(கடமைகள்) பற்றிய விளக்கம்
முகம் கழுவும்போது நிய்யத் வைக்கவேண்டும். நிய்யத் இல்லாமல் முகம் கழுவினால் வுழூ நிறைவேறாது.
தலைமுடி முளைத்துள்ள இடம்முதல் நாடிக்குழிவரையிலும் மற்றும் இரண்டு செவிசோனைகள்வரையிலும் உள்ள பகுதிகளையும் கழுவவேண்டும்.
கைகளை முழங் கைவரையிலும் கால்களைகணுக்கால் வரையிலும் சிறுபகுதி கூடவிடாது கழுவவேண்டும்.
வுழூவின் உறுப்புகளான முகம், கை, தலை, கால்களில் நீர் சேர்வதைதடுக்கு ம்நகப்பாலிஷ், உதட்டுசாயங்கள், பெயிண்ட் போன்ற கட்டியான திரவப்பொருள்களிருப்பின் வுழூ நிறைவேறாது. எண்ணெய்போன்ற இளகிய திரவங்கள் இருந்தால் தவறில்லை.
சுமார் 280 லீட்டர் தண்ணீர் கொள்ளும் தொட்டியில் கைகளினால் நீரை அள்ளி எடுத்துக்கொள்ளலாம். இதைவிட குறைந்த அளவுள்ள தொட்டிகள், வாளிகள், பாத்திரங்கள் முதலியவற்றிலிருந்து நீரைக்கைகளில் ஊற்றியே வுழூ செய்வது சிறப்பானதாகும்.
வரிசைக்கிரமங்களுக்கு மாற்றமாக வுழூ செய்தால்வுழூநிறைவேறாது.
வுழூ வின்சுன்னத்துக்கள்:
أعوذ باالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أشهد أن لا إله الاّ الله وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله الذي جعل الماء طهورا.
அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம். அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு. அல்ஹம்துலில்லாஹில்லதீ ஜஅலல்மாஅதஹூரா.’ என்ற சொற்றொடரை உளுவின் ஆரம்பத்தில் ஓதுவதும், இதனை முழுமையாக ஓதமுடியாவிட்டால்’பிஸ்மில்லாஹ்’ மட்டும் ஓதுவதும் சுன்னத்தாகும். அத்துடன் இருகைகளின் முன்பகுதிகளை மணிக்கட்டு வரை மூன்றுமுறை கழுவுவதும் சுன்னத்ஆகும். மிஸ்வாக் செய்வது சுன்னத்தாகும்.
மிஸ்வாக்செய்தபின் மூன்றுமுறை வாய்கொப்பளிப்பது, மூக்கினுள் நீர் செலுத்தி அதன் அழுக்கை அகற்றுவதும், ஒரு சிரங்கை நீரிலேயே வாயையும், மூக்கையும் இணைத்தே மூன்று முறை கழுவுவதும், முகம் கழுவும் போது தலையின் முன்பகுதியையும் இரண்டு செவிகளையும் கழுத்தின் இரு பகுதிளையும் சேர்த்துக்கழுவுவதும், கைகழுவும் போது முழங்கையைவிட மேலே சற்று அதிகமாக கழுவுவதும் கால் கழுவும் போது கரண்டைக் காலை விட சற்று மேலே கழுவுவதும் சுன்னத்தாகும்.
தலை முழுவதையும் நீரில் நனைத்த கைகளினால் மஸ்ஹுசெய்வதும்,செவி மடலின் உட்புறப்பகுதிளையும் செவியின் துவாரங்ளையும் மஸ்ஹுசெய்வதும், த​லையையும் செவியையும் தனித்தனியாக நீரினால் மஸ்ஹுசெய்வதும் சுன்னத்தாகும்.
அடர்த்தியானதாடியை விரல்களால்கோதிகழுவுதல், கைகால் விரல்களை கோதி கழுவுதல் ஒவ்வொரு உறுப்பையும் மும்முறை கழுவுதல் ஆகிய இவையாவும் சுன்னத்துக்களாகும்.
வுழூ வின்ஒழுக்கங்கள்:
வுழூச்செய்யும்போது கிப்லாவை முன்னோக்கிஅமர்தல், வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல், ‘ஹவ்ழ்’- நீர்தொட்டி வுழூச் செய்பவரின் வலப்பாகத்திலும், ஊற்றிக் கழுவும்போது நீர்ப்பாத்திரம் அவரின் இடதுபாகத்திலும் இருக்கும் அமைப்பில் உளுச்செய்தல், தேவையற்றவர்கள் பிறரின் உதவியின்றி தாமாகவே உளுசெய்தல், வியாதி, குளிர், சளிபோன்ற காரணமின்றி உளுச்செய்த நீரைத் துடைக்காமலிருத்தல் ஆகியவை வுளுவின் ஒழுக்க முறைகளான சுன்னத்துக்களாகும். ஒவ்வொரு உறுப்பையும் கழுகும்போதும் ஷஹாதத்கலிமாவை
أعوذ باالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أشهد أن لا إله الاّ الله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله
‘அஷ்ஹதுஅன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅஷ்ஹது அன்னஸெய்யிதனாமுஹம்மதன்அப்துஹுவரஸூலுஹு’ என்றுஓதுவதுசுன்னத்ஆகும்.
வுழூச்செய்தபின்  கையிலுள்ள நீரைக்குடிப்பது சுன்னத்தாகும். ‘இந்நீர் அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்தாகும்’ என நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 (ஆதாரம்: நஸயீ,ஹாகிம்)
வுழூச்செய்தபின் இருகரங்களையும் முகத்தையும் வான் நோக்கிஉயர்த்தி
. أشهد أن لا إله الاّ الله وحده لاشريك له وأشهد أن محمدا عبده ورسوله. أللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.
‘அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு அல்லாஹும்மஜ்அல்னீமினத்தவ்வாபீன் வஜ்அல்னீமினல் முததஹ்ஹிரீன வஜ்அல்னீமின் இபாதிகஸ்ஸாலிஹீன் ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லாஅன்த அஸ்தக்ஃபிருகவ அதூபுஇலைக.’
என்ற துஆவை ஓதுவதும், உயர்த்திய கரங்களைத் தாழ்த்தி மூன்றுமுறை ‘இன்னாஅன்ஜல்னா’ ஸூராவை ஓதுவதும் அதன்பின்பு
اللهم اغفرلي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي ولاتفتنــّي بما زويت عنـّـي
‘அல்லாஹும்மஃபிர்லீதன்பீ வவஸ்ஸிஃலீஃபீதாரீ வபாரிக்லீஃபீரிஸ்கீ வலாதஃப்தின்னீபிமாஸவய்தஅன்னீ என்று ஓதுவதும் சுன்னத்தாகும்.
ஒருவர் வுழூ செய்த பின் அதன் துஆவை ஓதினால் அவருக்காகசுவனத்தின் எட்டுவாயில்களும் திறக்கப்படும். அவர்விரும்பியவாயில் வழியாக நுழைந்து செல்லட்டும்; என்றும் (நூல்: முஸ்லிம்)
‘அவருடைய அந்தச்செயல் முத்திரையிட்டுப் பாதுகாக்கப்படுகிறது. அதன்நன்மையை அவர் அடைந்தேதீருவார்’ என்றும் (நூல்: ஹாகிம்) துஆவின் பெருமையையும் சிறப்பையும்பற்றி அண்ணலாரின் அரும்மொழிகள் இருக்கின்றன.
வுழூவின் சுன்னத்தான தொழுகை:
வுழூச்செய்யும் நேரங்களிலெல்லாம் வுழூவின் சுன்னத்தான தொழுகையை நிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்துடன் இரண்டு ரக்அத்துகள் தொழுவது சுன்னத்தாகும்.
முதல்ரக்அத்தில் ஸூரத்துல்பாத்திஹாவிற்குப்பின்
ولو أنـّهم إذظلموا أنفسهم جاؤوك فاستغفرواالله واستغفر لهم الرسول لوجدوا الله توّابا رحيما.
‘வலவ் அன்னஹும் இழ்ளலமூ அன்ஃபுஸஹும் ஜாஊக ஃபஸ்தஃக்ஃபருல்லாஹ வஸ்தக்ஃபரலஹுமுர்ரஸூலுல வஜதுல்லாஹ தவ்வாபர்ரஹீமா’
என்றஆயத்தைஓதுவதும்இரண்டாவதுரக்அத்தில்
ومن يعمل سوءا او يظلم نفسه ثمّ يستغفرالله يجد الله غفورا رحيما
,’வமன்யஃமல்ஸூஅன்அவ்யள்லிம்நஃப்ஸஹுஃதும்மயஸ்தஃபிரில்லாஹயஜிதில்லாஹஙஃபூரர்ரஹீமா’ என்றஆயத்தைஓதுவதும்சுன்னத்தாகும்.
வுழூவின்மக்ரூஹுகள்:
1. அடர்த்தியானதாடியைகோதிகழுவாமலிருத்தல்.
2. கை,கால்களைகழுவுவதில் இடதுபாகங்களைமுற்படுத்துதல்.
3. கண்களுக்குள்நீர்செலுத்துதல்.
4. நீரைமுகத்தில்அடித்துக்கழுவுதல்
5. அவரவர்முகத்திற்குநேராகஅல்லதுகிப்லாவின்திசைநோக்கிதுப்புதல்.
6 வுழூவின் உறுப்புகளை மூன்றுமுறைகளை விட அதிகமாகவோ குறைவாகவோ கழுவுதல்.
7. மிஸ்வாக்செய்வதைவிடுதல்
8. தேவையின்றிபிறரின்உதவியினால்வுழூ செய்தல்
9 வுழூச்செய்யும்போது நீரைஉதறுதல்.
10. வெயிலில்சூடானநீரால்வுழூச்செய்தல்.
வுழூவைமுறிப்பவை:
1. காற்று, நீர், மலம், இரத்தம், புழு போன்றவை மனிதனின் முன்,பின் துவாரம்வழியாகவெளிவந்தால்வுழூமுறிந்துவிடும்.
2.போதை, பைத்தியம், மயக்கம் உறக்கம் இவைகளினால் உணர்விழந்தால் வுழூ முறிந்துவிடும். உணர்வை இழக்காது தெளிவை மட்டுமே இழக்க கூடிய சிறுதூக்கத்தினாலும் பித்தட்டை அழுத்தி கால்களை சதுரமாக மடித்து உட்கார்ந்து பெருந்தூக்கம் தூங்குவதினால் வுழூ முறியாது.
3. ஆணோ பெண்ணோ இனஉறுப்புகளை அல்லது மலவாயைத்திரையின்றி உள்ளங்கை கொண்டு தொடுவதினால் தொடுபவரின் உளு முறிந்துவிடும்.
4. திருமணத்திற்கு ஹலாலான ஆண்பெண்களின் மேனிகள்திரையின்றி ஒன்றோடுஒன்று உராய்வதினால் இருவரின் வுழூவுமே முறிந்துவிடும். ஆசையினால் வெளிவரும் மோகநீரினாலும் வுழூ முறிந்துவிடும். இந்திரியம் வெளியாவதினால் வுழூ முறிவதில்லை. ஆனால் குளிப்பது கடமையாகும்.
சுன்னத்தானவுழூ:

1. குர்ஆனைதொடாமல்நாவினால்ஓதுவதற்காக.
2. மய்யித்தைகுளிப்பாட்டியதற்காகஅல்லதுஅதைசுமந்ததற்காக.
3. ஹதீதுபோன்ற மார்க்கநூல்களை படிப்பதற்காக.
4. பால்வேறுபட்ட சிறார்களை தொட்டதற்காக
5. மறைவிடரோமங்களையும், இனஉறுப்புகளைச்சுற்றியுள்ள 

   பகுதிகளையும்தொட்டதற்காக.
6. மனைவியுடன்இணைவதற்காக.
7. உறங்குவதற்காக
8. நகம், தலைமுடி, மீசைஆகியவற்றை களைந்ததற்காக.
9. ஆணையோ, பெண்ணையோஆசையுடன்பார்த்ததற்காக.
10. கோபம்அடைந்ததற்காக.
11. வாந்தி எடுத்ததற்காக.
12. மார்க்க உபதேசங்களைகேட்பதற்காக
13. நல்லோர்களின்அடக்கத்தலங்களை தரிசிப்பதற்காக.
14. உடலில்இரத்தம்எடுத்ததற்காக.
15. பாங்குசொல்வதற்காக.
16. பள்ளிவாசலில் நுழைவதற்காக அல்லது தங்குவதற்காக மற்றும் 
    பெருந்துடக்குள்ளவர்கள் குடிப்பதற்காக, உண்பதற்காக.

                                                         *********************************

தொழுகையைமுறிப்பவைகள் 
தொழுகையில் இருமுதல், கனைத்தல், தும்முதல் போன்றவற்றிலிருந்து இரு எழுத்துகள் வாயிலிருந்து வெளிவந்தால் தொழுகை முறிந்துவிடும். பாத்தஹா சூரா ஓதுதல் போன்ற பர்ழை நிறைவு செய்வதற்காக கனைத்தல் போன்ற செயல் ஏற்பட்டு இதனால்இருஎழுத்துகள் வெளிவந்தாலும், மறதியாவோ, புதிய முஸ்லிமாக இருப்பதால் ஹறாம் என்று தெரியாத்தாலோ அல்லது அடக்க முடியாத்தாலோ இருமல் உண்டாகி இருஎழுத்துகள் வெளிவந்தால் தொழுகை முறியாது.தொடர் இருமலினால் பாதிக்கப்பட்டவர் இருமலின்றி தொழுகையை நிறைவேற்ற முடியாதிருப்பின் அவரது இருமல் மன்னிக்கப்படும். 
முன்னிலை வாக்கியங்ளை உபயோகித்து துஆசெய்தால் (உதாரணமாக றஹிமகல்லாஹ், வஅலைக்கஸ்ஸலாம்போன்று) அல்லது முன்னிலை வாக்கியங்ளை உபயோகித்துபேசினால் தொழுகை முறிந்துவிடும். படர்கை வாக்கியங்ளை உபயோகித்து துஆசெய்தால் (அல்லாஹூம்மஃபிர்லஹுபோன்று) தொழுகை முறியாது. 
எனினும் நபி(ஸல்) அவர்கள் மீது முன்னிலை வாக்கியங்ளைக் கொண்டு ஸலவாத், ஸலாம் சொன்னால் தொழுகை முறியாது. 
சதைப்பற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை விழுங்கினால் அது மிகச்சிறிய அளவுள்ளதாயினும் தொழுகை முறிந்துவிடும். 
தொண்டையில் சளி இறங்கிட அதைத்துப்பாமல் விழுங்கினாலும், வாயில் இரத்தம் வடிந்திருந்து அதைக் கழுவாதநிலையில் உமிழ் நீர்ஊறி அதை விழுங்கினாலும் தொழுகை முறிந்துவிடும். 
ஒருவர் ஹறாம் என்றுதெரியாமல் அல்லது மறதியாக இவ்வாறு விழுங்கினாலும் அல்லது பல்லிடுக்கிலுள்ள உணவுத்துகள்கள் கரைந்து உமிழ் நீருடன்சென்றாலும் காறித்துப்புவதற்கு இயலாமல் தொண்டையில்இறங்கிய சளியை விழுங்கினாலும் தொழுகைமுறியாது.
தொழுது கொண்டிருக்கும்போது அதைமுறித்துவிட நினைத்தால் உடனே தொழுகை முறிந்துவிடும். இன்னசெயல் நடந்தால் முறித்துவிடுவேன் என நினைத்தாலும் உடனே தொழுகை முறிந்துவிடும். அது தற்போது நடக்கச் சாத்தியமில்லாவிட்டாலும் சரிதான்.தொழுகயை முறித்து விடுவோமா? வேண்டாமா? என்று தடுமாறினாலும் தொழுகை முறிந்துவிடும். எனினும் தவிர்க்க முடியாத மன ஊசலாட்டங்களினால் இத்கைய எண்ணம் எற்பட்டால் தொழுகை முறியாது. 
தொழுகையிலுள்ள செயல்வடிவமான பர்ளுகளை இடம்மாற்றி செய்தாலும், சொல்வடிவபர்ளுகளிலுள்ள தக்பீர்தஹ்ரீமா, ஸலாம் கொடுத்தல் ஆகிய இரண்டைமட்டும் இடம்மாற்றிசெய்தால் அல்லது செயல்வடிவபர்ளை அதிகப்படுத்தி செய்தாலும் தொழுகை முறிந்துவிடும். 
பதினான்குபர்ளுகளில் ஏதாவது ஒருபர்ளை சுன்னத்தாக நினைத்தாலும் தொழுகை முறிந்துவிடும். 
தொழுகையின் செயல்முறை அல்லாத வேறுசெயல்களை தொடர்படியாக மூன்றுமுறை செய்தாலும் தொழுகை முறிந்துவிடும். 
கைவிரல்களுடன் முன்கையும் சேர்த்து மும்முறை அசைந்தால் அல்லது நாவைவாயின் வெளியே நீட்டி மும்முறை அசைத்தால் தொழுகை முறிந்துவிடும். கண் இமைகள்,கைவிரல்கள்,ஆண்குறி,நாவு,உதடுகள் ஆகியவைகளை அசைப்பதலோ அல்லது உடல் உறுப்புக்கள் உணர்வின்றி அசைவதாலோ தொழுகைமுறியாது.

உழ்ஹிய்யா, அகீகாவின் சட்டங்கள் 

-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)- 
துல் ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்ததிலிருந்து துல்ஹஜ் 13ம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹ்விற்காக ஆடு,மாடு,ஒட்டகங்களை அறுத்துப்பலியிடுவதற்கு “குர்பானி”என்றுபெயர். இதேபொருளில்தான் “உழ்ஹிய்யா” என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. 
குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். – 22:34 
(நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக !-108:3 என்று அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான். 
ஹஜ்ஜுப்பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்தஆலாவிற்குப் பிரியமான வேறு எந்தசெயலும் இல்லை. (குர்பானிகொடுக்கப்பட்ட) பிராணிகள், மறுமைநாளில் அவைகளின் கொம்புகளுடனும், கால் குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் இரத்தங்கள் பூமியில்விழும் முன்பாகவே அல்லாஹ்விடம் அவை சென்றடைகின்றன’ என நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

– நூல்: திர்மிதி. 

உழ்ஹிய்யா கொடுப்பதினால் எவ்வளவு நன்மையை நாங்கள் பெறுவோம்? என்று ஸஹாபாக்கள் வினவிய போது, அதன் ஒவ்வொரு உரோமத்திற்கும் ஒரு நன்மையுண்டு’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பதிலுரைத்தார்கள்.

-நூல்: இப்னுமாஜா. 
ஆகவே ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் துல்ஹஜ் 11,12,13 ஆகிய நாட்களில் தனக்கும் தன்னிடமிருந்து ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கும் தேவையான செலவுபோக, பணம் மீதியிருந்தால் மட்டும் குர்பானிகொடுப்பது சுன்னத் முஅக்கதாவாகும். இவர்கள் அனைவருக்குமாகவும் ஒரேயொரு குர்பானிபோதுமாகும். ஹஜ்ஜுப் பொருநாளன்று செய்யப்படும் தருமங்களிலேயே குர்பானி கொடுப்பதுதான் சிறந்தது. வசதிவாய்ப்பு இருந்தும் குர்பானி கொடுக்காமலிருப்பது மக்ரூஹ் ஆகும். 
குர்பானிக்குரிய பிராணிகள்: 
உண்பதற்கு ஆகுமான பிராணிகளிலிருந்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றைத்தான் குர்பானியாக கொடுக்க முடியும். ஐந்து வயது நிறைந்த ஒட்டகமும், இரண்டு வயது நிறைந்த மாடு, வெள்ளாடும், ஒரு வயது நிறைந்த அல்லது முன்பற்கள் விழுந்தசெம்மறி ஆடும் குர்பானி கொடுப்பதற்குத் தகுதியானவை ஆகும். இதற்குக் குறைந்த வயதுள்ள பிராணிகளை குர்பானி கொடுப்பதுகூடாது. ஏழு நபர்களுக்காக ஓர் ஒட்டகத்தையோ அல்லது ஓர் மாட்டையோ குர்பானி கொடுக்கலாம். ஆனால் ஓர்ஆட்டை ஒருநபருக்காக மட்டுமே குர்பானிகொடுக்க வேண்டும். ஏழு நபர்கள் சேர்ந்து ஒருஒட்டகத்தையோ அல்லதுமாட்டையோ குர்பானிகொடுப்பதைவிட தனிநபருக்காக ஒருஒட்டகம் அல்லது மாடுஅல்லது ஆடுகொடுப்பது சிறந்தது. 
தகுதியில்லாத பிராணிகள்: 
எலும்பினுள்உள்ள ஊண் உருகிய மிகமெலிந்த அல்லது வாலோ, செவியோ அறுக்கப்பட்ட அல்லது கண்ணே இல்லாதஅல்லது பார்வை இழந்த அல்லது நொண்டியான அல்லது வெளிப்படையாக சதைப்பிடிப்பைத்தடுக்கும் நோயுள்ள அல்லது கர்ப்பமான பிராணிகள் குர்பானி கொடுப்பதற்கு தகுதியில்லாதவையாகும். கொம்பில்லாத அல்லது கொம்பு முறிந்த அல்லதுபற்கள் இல்லாதஅல்லது காய் அடிக்கப்பட்ட பிராணிகளைக் குர்பானி கொடுப்பதுகூடும். 
குர்பானி கொடுக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில்கொடுத்தால் அதாவது நேரம் தவறிகொடுத்தால் அல்லது குர்பானிக்குதகுதியில்லாத பிராணிகளைக் குர்பானி கொடுத்தால் அதுகுர்பானி ஆகாது. அது சாதாரண தர்ம்மாவே ஆகும். குர்பானி கொடுப்பதாக நேர்ச்சை செய்திருந்தால் துல்ஹஜ்பிறை 13வது நாள் சூரியன் மறைந்த பின்பும் அதை’களா’ என்ற அமைப்பில் குர்பானி கொடுப்பது கடமையாகும். 
நேர்ச்சை 
ஏதாவது ஒருசெயல் நிறைவேறினால் குர்பானிகொடுப்பேன் என்று ஒருவர் நேர்ச்சைசெய்தால் அந்தச் செயல் நிறைவேறியபின் குர்பானிகொடுப்பது கடமையாகும். “சுன்னத்தான உழ்ஹிய்யா கொடுக் கநாடியிருக்கிறேன்” என்று சொல்வதற்குப் பதிலாக “உழ்ஹிய்யாகொடுக்க நாடியிருக்கிறேன்” என்றுகூறினால் அல்லது இந்தவருடம் உழ்ஹிய்யாகொடுக்கப் போகிறீர்களா? என்று ஒருவர்கேட்க அதற்கு’ஆம்’ என்று பதில் கூறினால், அந்த உழ்ஹிய்யாவை கொடுப்பது கடமையாகிவிடும். 
கடமையான இந்தஉழ்ஹிய்யாவின் இறைச்சியினை சிறிது உண்பதும் ஹராமாகும். எனவே அவை முழுவதையும்தர்மம் செய்து விடுவது அவசியமாகும். ஆகவே வாயால் கூறும்போது சுன்னத்தானஉழ்ஹிய்யா என்று கூறுவது அவசியமாகும். இவ்வாறு சுன்னத்தான உழ்ஹிய்யா என்றுகூறும்போது மட்டும் அதன் இறைச்சியிலிருந்து மூன்றில் ஒருபகுதியை மட்டும் நாம் எடுத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டு. 
சுன்னத்தான உழ்ஹிய்யாகொடுக்கும் போதுஅதன் இறைச்சியை சமமான மூன்று பங்குகளாகப்பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கு அறமாகவும், இன்னொரு பங்கை சுற்றத்தார்களுக்கு அன்பளிப்பாகவும், மூன்றாவது பங்கை தங்களது சொந்த பயனுக்காகவும் எடுப்பது சுன்னத்தாகும். ஆனால் குர்பானி பிராணியின் ஈரலை மட்டும் உண்பதற்காகவைத்துக் கொண்டு இறைச்சி முழுவதையும் ஏழைகளுக்கு தர்மமாகவும், சுற்றத்தார்களுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதே சிறப்பானதாகும். 
குர்பானி இறைச்சியை காபிர்களுக்கு கொடுப்பதுகூடாது. காபிர்களுக்கு குர்பானி இறைச்சியைகொடுக்க தேவையிருப்பின் ஹனபிமத்ஹப்படி கொடுக்கிறேன் என்றுநிய்யத்செய்துதான் காபிர்களுக்கு கொடுக்கவேண்டும். குர்பானி இறைச்சியை பல ஏழைகளுக்குபங்கிட்டுக்கொடுப்பது கடமையில்லை. ஒருவருக்கே கொடுத்தாலும்கூடும். அதைப் பெற்றுக் கொண்டவர்கள்அதை விற்றுவிட்டாலும் கூடும்.குர்பானி இறைச்சியை செல்வந்தர்களுக்கு அன்பளிப்பாக் கொடுப்பது கூடும். குர்பானித்தோலை தர்மம் செய்துவிடவேண்டும். அல்லது அதைதனது சொந்ததேவைகளுக்குப்பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தோலை தமதுதேவைக்காகவிற்பதற்கோ அல்லது அறுப்பதற்கும் உரிப்பதற்கும்கூலியாக கொடுப்பதோகூடாது. 
ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்கநாடினால் துல்ஹஜ் பிறை பிறந்ததிலிருந்து அவர்தனது உடல் ரோமங்களைக்களைய வேண்டாம். மற்றும் நகத்தைவெட்ட வேண்டாம்என்று நபிகள்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

– நூல்: முஸ்லிம். 
ஆகவேது ல்ஹஜ்பிறை ஒன்றிலிருந்து குர்பானிகொடுக்கும் வரை உடல்ரோமங்களைக் களையாமலிருப்பதும், நகம் வெட்டாமலிருப்பதும் சுன்னத்தாகும். இதற்குமாற்றம் செய்வது மக்ரூஹ்ஆகும். 
நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறுதிஹஜ்ஜின்போது அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தங்கள் புனிதக்கரங்களால் அறுத்திருக்கிறார்கள். ஆகவே அறுப்பதற்குவலுவுள்ள ஆண்கள் தாமாகவே குர்பானிபிராணிகளை அறுப்பது சுன்னத்தாகும். 
பகல் நேரத்தில் அறுப்பதும், பெருநாள்தொழுது முடித்தபின்பு அறுப்பதும், குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்தும்மற்றும் அறுப்பவர்பிராணியை முன்னோக்கி நின்றவாறு அறுப்பதும், 
அறுக்கும்போது… 
بِسْمِ اللهِ اَللهُ اَكْبَرُ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَ سَلَّمْ . اَللّٰهُمَّ هٰذَا مِنْكَ وَاِلَيْكَ فَتَقَبَّلْ مِنِّىْ . 
என்று ஓதிக்கொள்வதும், கொழுத்த பிராணியைக் குர்பானியாக அறுப்பதும் சுன்னத்துகளாகும். 
அகீகா: 
குழந்தை பிறந்ததும் அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நிஃமத்தை எடுத்தும் காட்டும் வகையில் ஆடோ, மாடோ, ஒட்டகமோ அறுத்துப்பலியிடுவதற்கு அகீகா என்று பெயர். 
‘ஆண்குழந்தை பிறந்ததற்காக (குர்பானிக்கு) தரமான இரண்டு ஆடுகளையும், பெண்குழந்தை பிறந்ததற்காக ஓர்ஆட்டையும் அறுத்து கொடுக்கவேண்டும்’ என அண்ணலார் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பணித்ததாக ஆயிஷாரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். –நூல்:

திர்மிதி.

பிறந்த குழந்தை அதற்குரிய அகீகாவைக் கொண்டு ஈடுவைக்கப்பட்டிருக்கிறது’ என்றால் அகீகாவை செலுத்தும்வரை மறுமை நாளில் பெற்றோருக்காக பிள்ளைகள் மன்றாடமாட்டார்கள் (ஷபாஃஅத்செய்யமாட்டார்கள்) என்பது பொருளாகும்’ என்று அஹ்மது இப்னு ஹன்பல்ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள் விளக்கம் தருகிறார்கள். ஆகவே பிள்ளைகளுக்காக அகீகாகொடுப்பது பெற்றோர்களுக்கு சுன்னத்தாகும். பிள்ளை பிறந்துபருவவயதை அடையும் வரை இந்தஅகீகாவை செலுத்துவது பெற்றோர் மீது சுன்னத்து. பெற்றோர்களினால் அகீகா செலுத்தப்படாதபோதுபருவம் அடைந்தபின்பு தனக்குரிய அகீகாவைதானே செலுத்துவது சுன்னத்தாகும். 
குர்பானி கொடுப்பதற்கு தகுதியான பிராணிகளே அகீகா கொடுப்பதற்கும் தகுதியானவை ஆகும். அகீகா இறைச்சியை குர்பானி இறைச்சியைப் போல் மூன்று பங்குகளாக பிரித்து ஏழைகளுக்கு அறமாகவும், சுற்றத்தார்களுக்கு அன்பளிப்பாகவும், தமது சொந்த தேவைக்காகவும் எடுத்துக்கொள்ளலாம். அகீகாவைநேர்ச்சை செய்தாலோஅல்லது சுன்னத்தான அகீகா என்று கூறாமல், ‘அகீகா கொடுப்பேன்’ என்றுகூறினாலோ, ‘இந்த அகீகாவாக ஆக்கினேன்’ என்று கூறினாலோ அல்லது கேட்பவருக்கு, பதிலில்’அகீகா கொடுக்கப்போகிறேன்’ என்று கூறினாலோஆக இந்த நான்கு அமைப்புகளிலும்அகீகா கொடுப்பது பர்ழாகும். அந்தஇறைச்சியைசாப்பிடுவ துஹராமாகும். முழுவதும் தர்மம் செய்துவிட வேண்டும். 
அகீகாவின் பெரும்பாலான சட்டவிதிகள் குர்பானியின் சட்ட விதிகளைப் போன்றதாகும். எனினும் அகீகா பிராணியை அறுத்த பின்பு அதன் எலும்புகளை முறிக்காமல் முழுமையாகவும், அதன் இறைச்சியை சமைத்தும் கொடுத்து அனுப்புவது சிறப்பானதாகும். அகீகாவிற்கு காலவரையறை இல்லை. இதன் முழுப்பகுதியையும் சுற்றத்தார்களுக்கு கொடுத்தாலும் அகீகா கூடுமாகிவிடும். ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பது அவசியமில்லை. 
குழந்தை பிறந்ததும் ஏழாவது நாள் அகீகாவை செலுத்துங்கள். குழந்தையின் தலை முடியைகளையுங்கள். அவர்களுக்கு (நற்) பெயர் சூட்டுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.-

நூல்: திர்மிதி. 

குழந்தை பிறந்து இறந்து விட்டாலும், அகீகாகொடுப்பதும் அதற்குப் பெயர்வைப்பதும், விழுகட்டிகளுக்கும்கூட பெயர்வைப்பதும் சுன்னத்தாகும். 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments