முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி.

July 28, 2014
(நிகழ்வுகள் தொடர்பான காணொளியும் புகைபடங்களும் உள்ளே.)
அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), ஆகிய முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி கடந்த 21/07/2014 திங்கள் பிற்பகல் செவ்வாய் இரவு புனித தறாவீஹ் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் கத்முல் குர்ஆன், வலீமார்கள் பெயரிலான மௌலித் நிகழ்வுகள் என்பன இடம்பெற்று துஆ ஓதப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட முஹிப்பீன்களுக்கு அருளன்னதானம் வழங்கி வைக்கப்பட்டதோடு ஸலவாத்துடன் இனிதே நிகழ்வுகள் நிறைவுற்றன.
இந்நிகழ்வுகளின் முதல் கட்டப் பணிகளுக்காக 20/07/2014 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகையின் பின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment