Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

இமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

மௌலவீKRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA(​Hons)
நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர்ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் உம்முபர்வா . அவர்கள் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸிமின் மகளாவார். காஸிம் என்பவர் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் மற்றொருமகன் அப்துர்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே உம்முபர்வாவை பெற்றெடுத்தார்கள். தமது குழந்தைக்கு பெயர்சூட்டுமாறு தம்தந்தை இமாம் ஜைனுல்ஆபிதீன் அவர்களை வேண்டினார்கள் இமாம் முஹம்மது பாகர் அவர்கள். அக்குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத்திருப் பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப்பெயரோடு சாதிக் என்னும் (உண்மையாளர்) என்றபெயரும் ஒருங்கிணைந்து உலகம்முழுவதும் பெயர்பெற்றது.

தம்முடைய சிறுவயதில் தம்அருமைபாட்டனார் இமாம்ஜைனுல்ஆபிதீன் அவர்களிட மேதிருமறையையும், நபிகளாரின் அருள்மொழிகளையும் கற்றுத்தேர்ந்தனர். இவர்களுக்கு 11 வயதுநிறைவுற்றபோது இவர்களின் பாட்டனார் இமாம்ஜைனுல்ஆபிதீன் அவர்கள் மறைந்தார்கள்.அதன் பின்னர் இவர்களுக்கு இவர்கள் தந்தையே இறைஞானத்தை கற்றுக்கொடுத்தார்கள். தமது 31வதுவயதில் இமாமின்பீடத்தில் அமர்ந்த இவர்களின் புகழ் எட்டுத்திக்கும்பரவியது. இவர்கள் நடத்திவந்த கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கல்விபயின்றனர்.
தம்மாணவர்களை நோக்கி, ‘நீங்கள் பயபக்தியுடையவர்களாகவும், அமானிதத்தை நிறைவேற்றக்கூடியவர்களாகவும், மக்களிடம் நன்முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாகப்பேசக்கூடிய சன்மார்க்கபிரசாகர்களாகவும் திகழுங்கள்’ என்றுகூறினர். அதற்குமாணவர்கள், சுருக்கமாககூறி மக்களின் மனதை எவ்வாறு தொடுவது?’ என்றுகேட்டனர். அதற்கு இமாம்அவர்கள்’ நீங்கள் இறைகட்டளைக்கு பணிந்து நேர்வழியில் நடப்பின் அதிகமாகப்பேச வேண்டியதில்லை.உங்களின் செயலேபெரும் முழக்கம் செய்துவிடும். அதுவே பெரும்பிரகாசமாகிவிடும்’. என்றுமறு மொழிகூறினர்.
இன்சொல்லும், இனியபண்பும் வாய்க்கப்பெற்ற இவர்கள் தமக்குதீங்கு செய்தவர்களுக்கும் நல்லதே செய்யும்பண்புபெற்று விளங்கினர். தம்உறவினர் ஒருவர்தம்மை இழிவாகப்பேசியபோதும், அவர்களின் கஷ்டநிலைக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே உதவிசெய்தனர்.
ஒருவர் வந் துதங்கள் சிறியதந்தையின் மகன் தங்களைகண்டபடி ஏசுகிறான் என்றுசொன்னார்கள். உடனே அவர்கள் இரண்டு ரக்அத்தொழுது இறைவனிடம், ‘இறைவனே நான் அவரை மன்னித்துவிட்டேன். எனவே நீயும் அவரை மன்னித்துவிடுவாயாக! என்றுவேண்டினர். இதுகண்டு அந்தநண்பருக்கு வியப்புஏற்பட்டது. இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘நம்மை ஒருவர்ஏசிவிட்டால் அதற்குநாம் எழுபது விதங்களில் நற்காரணங்களை கற்பிக்கவேண்டுமேயன்றி, அவரை நாம் திரும்பவும் ஏசிவிடக்கூடாது. அதற்கு நற்காரணம் ஒன்றையேனும் நாம்காணாவிடில் அதற்குஏதேனும்நாம் அறியாமல் நற்காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்ளவேண்டும்’ என்று அருள்மொழிகூறினர்.
ஒருநாள் இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களும் அவர்களின் தந்தை இமாம் முஹம்மதுபாகர் அவர்களும் கிறுஸ்தவ பாதிரி ஒருவரை சந்தித்தார்கள். பாதிரி பலகேள்விகள் கேட்டார். அவற்றில் சில
சுவர்க்கவாதிகள் சாப்பிட்டாலும் குடித்தாலும் அவர்களின் உடலிலிருந்து மலக்கழிவு ஏற்படாது என்று​ இஸ்லாத்தில் கூறப்படுகிறதே அது எவ்வாறு என்றுகேட்டார். அதற்குஇமாம்முஹம்மதுபாகிர் அவர்கள் தாயின் வயிற்றில் கருவில் உள்ள குழந்தை, தாய் சாப்பிடும் உணவிலிருந்து சத்துணவைபெற்றபோதும் அது மலம் கழிப்பதில்லை அவ்வாறுதான் சுவர்க்கவாதிகளும் என்று பதிலளித்தார்கள்.
சுவர்க்கத்தில் சாப்பிட்டாலும் குடித்தாலும் அங்குள்ள உணவு குறைவதில்லை என்று​ இஸ்லாத்தில் கூறப்படுகிறதே அது எவ்வாறு என்றுகேட்டார்.அதற்கு இமாம்முஹம்மதுபாகிர் அவர்கள் ஒரு விளக்கைகொண்டு ஆயிரம் விளக்குளை எரித்தாலும் முதல் விளக்கின் ஒளி சிறிதும் குறையாதல்லவா?அவ்வாறுதான் என்று பதிலளித்தார்கள்.
ஒருநாள் இமாம் அவர்கள் நாத்தீகனான கப்பலோட்டி ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற்பிரயாணத்தில் எப்போதாவது கடலில் சிக்கியுள்ளாயா? என்றுவினவினார்கள். அதற்கு அவன்ஆம்! ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கிவிட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட நான்மட்டும் தத்தளித்து ஒருமரத்துண்டைபிடித்துக்கரை சேர்ந்தேன் என்றுவிரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரைசேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்தகப்ப ல்மூழ்கியபோது, நீபிடித்தமரத்துண்டு உன்னை கரைசேர்க்கும் என்றுஎண்ணினாய். அதுவும் உன்கையைவிட் டுநீங்கியபோது, நிர்கதியாய் நீதவித்துக் கொண்டிருந்தபோது, எவரேனும் காப்பாற்றினால்தான் உயிர்பிழைக்கஇயலும் என்று நீநம்பினாயா? என்று வினவினார்கள். அவ்விதமே நம்பினேன் என்று அவன் சொன்னான். அதற்கு அவர்கள் அவனைநோக்கி, ‘ அந்நம்பிக்கை உனக்கு எதன்மீது இருந்தது? உன்னைக் காப்பாற்றுபவர்யார்? என்று வினவினார்கள். அவன் பதில்சொல்லமுடியாமல் வாய்மூடிஇருந்தான். ‘நிர்க்கதியாயிருந்த நீ உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு எதன்மீது நம்பிக்கை கொண்டாயோ, அவன் தான்அல்லாஹ்! அவனே உன்னைக் காப்பாற்றியவனாவான்’ என்று இமாம் அவர்கள் சொல்லிவாய் மூடும்முன் அவன் கலிமாசொல்லி முஸ்லிமாகமாறினான்.
ஒருநாள் இமாம் அவர்கள் தங்களின் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை சந்திக்க இருவர் வந்தனர். வந்தவர்களில் ஒருவர்மற்றவரை இமாம் அவர்களுக்கு அறிமுகம்செய்துவைக்கும் போது ‘இவர்கள் இராக்நாட்டின் சட்டமேதைகளில் ஒருவர்’ என்று கூறிவாய்மூடும்முன் இமாம் அவர்கள் அவரைநோக்கி, ‘அப்படியா! பகுத்தறிவுரீதியில் மார்க்கத்தை அணுகும்நுஃமான்இப்னுதாபித்தானேஇவர்’ என்றுவினவினர். ஆம் அதுதான் என்பெயர். மக்கள் என்னை அபுஹனீபா என்றழைப்பர் என்றனர். இமாம் அவர்கள் இமாம் அபுஹனீபா(றஹ்) அவர்களைநோக்கி பல்வேறு கேள்விகணைகளைத் தொடுத்தனர். அதற்கு அவர்களும் பதிலுரைத்தனர்.
இமாம்அவர்கள்கேட்டகேள்விகளில்முக்கியமானவை:
சிறு நீர், விந்து இவற்றில் எதுமிகவும் அசுத்தமானது? என்று இமாம்அவர்கள் வினவ, இமாம் அபூஹனீபா (றஹ்)அவர்கள் சிறு நீர் என்றனர். சிறு நீர் வெளிப்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும். ஆனால் விந்துவெளிப்படின் அந்தஇடத்தை கழுவினால் மட்டும் போதாது. குளித்துசுத்தமாகவும் வேண்டும் என்று இருக்க, நான் பகுத்தறிவுரீதியாக பதிலளித்தால் இதற்குமாற்றமாக அல்லவா நான் தீர்ப்புக்கூறியிருப்பேன் என்று இமாம்அபுஹனீபா அவர்கள்கூறினார்கள்.
பின்னர், ஆணிலும், பெண்ணிலும் வலுவற்றவர்யார்? என்று இமாம் ஜஃபர்சாதிக் அவர்கள்வினவ, ‘பெண்’ என்று இமாம் அபூஹனீபா விடைபகர்ந்தார்கள். சொத்துரிமையில் பெண்ணுக்கு ஒருபங்கு, ஆணுக்கு இரண்டுபங்கு என்பதைமாற்றி, பெண் வலுவற்றவளாகயிருப்பதால் அவளுக்கே சொத்துரிமையில் இருபங்கு கிடைக்கதீர்ப்பளித்திருப்பேன். ஆனால் நான் அப்படிசெய்யவில்லை என்றுஇமாம்அபுஹனீபா அவர்கள்கூறினர். இவ்வாறுதொழுகை, நோன்பு பற்றிய விளக்கங்களை கூறினார்கள். இதுகேட்டு மகிழ்ந்த இமாம்ஜஃபர்சாதிக் அவர்கள் மகிழ்ந்து இமாம் அபுஹனீபா அவர்களைக் கட்டித்தழுவிநெற்றியில் முத்தமிட்டார்கள்.
இமாம் அவர்களை அணுகி அறிவுரைபெற்று ஆன்மீகப்பரிபக்குவம் பெற்றவர்களில் சுல்னுல்ஆரிபீன்அபூயஸீத் அல்பிஸ்தாமி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களும் ஒருவர். நான்நானூறு ஆசிரியர்களை அணுகி ஆன்மீகக்கல்வி பயின்றுள்ளேன். ஆனால் நான் ஜஃபர்சாதிக் அவர்களை சந்திக்காவிடின் ஒரு முஸ்லிமாகி இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்கள்.
இவர்கள் பிற்காலத்தில் தம்இல்லத்தில் தனித்திருந்து இறைவணக்கத்தில் ஈடுபடவும், தம்மைக் காணவருபவர்களுக்கு அறப்போதம் வழங்கியும் வந்தார்கள். வானவியல், மருத்துவம் , இரும்பைப்பொன்னாக்கும் கீமியாவித்தையிலும் இவர்கள் திறன்பெற்று விளங்கினார்கள். இவர்கள் பலநூல்கள் எழுதியுள்ளனர். இவர்கள் எழுதியமார்க்கச் சட்டதிட்டங்கள்பற்றிய நூலே ஷியாக்களின் பிக்ஹுகலைக்கு மூலநூலாக அமைந்துள்ளது. கனவு விளக்கம்பற்றி ஒருநூலும் தொகுத்துள்ளார்கள். இதுமட்டுமில்லாமல் இவர்கள் கவிஞராகவும் விளங்கனார்கள்.
அப்பாஸியக்கலீபாமன்ஸூர்அவர்களுக்குஇமாம்அவர்களின்செல்வாக்குஉயர்ந்துவருவதைக்கண்டுஅவர்கள்மீதுவெறுப்புஏற்படலாயிற்று.அவர்களின்ஆதரவாளர்களில்சிலர்அப்பாஸியக்கிலாபத்தைஎதிர்த்துபுரட்சிசெய்வதையும், ஈராக்மக்கள் ‘ஜகாத்’ பணத்தை சேகரித்து அவர்களுக்கு அனுப்பிவைப்பதையும்கண்டு மன்னர் பொறாமையால்வெந்து அவர்களை ஒழித்துக்கட்டதீர்மானித்து, ஹிஜ்ரி 147ம்ஆண்டு ஹஜ் செய்யமக்கா வந்தபோது ஹஜ் கடமையைமுடித்துவிட்டு மதீனா நகரம்வந்தவுடன் இமாம் அவர்களை அழைத்துவர தம்அமைச்சர் ரபீஉவை அனுப்பினார். ஆனாலும் மன்னரால்அவர்கள் மீதுகுற்றம் சுமத்தப்பட்டதைநிரூபிக்க முடியவில்லை.
எனவே அவர்களின் மாண்பினைப்போற்றி, அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைத்தார். ஆனாலும்இமாம் அவர்கள்மீது மன்னர் கொண்டகுரோதம் நீங்கவில்லை. மதீனாவில் அமைதியாகவணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்த இமாம் அவர்களை பக்தாத் அழைத்துவரச்செய்தார். இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும், மன்னர் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களின் வேண்டுகோள்படி மதீனாவுக்கே அனுப்பிவைத்தார்.
மன்னர் சொன்னதற்கு நேர்மாறாக நடந்துகொள்வதுபற்றி அமைச்சர் ரபீஉகேட்டபோது, இமாம்அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது அவர்களின்தலைமேல் பெரும்பாம்பு படம்எடுத்து என்னை எச்சரிக்கை செய்வதுபோல் இருந்ததை கண்டுமருண்டுவிட்டேன் என்றார்.
பின்னர் ஒருநாள் ஒற்றர்படைத்தலைவன் முஹம்மதுபின்சுலைமானை அழைத்து, அவன் காதோடுகாதாகமன்னர் ஏதோசொல்ல அவன் அடுத்தகணம் அவ்விடத்தைவிட்டுநகர்ந்தான். பின் மதீனாசென்று இமாம் அவர்களை அடிக்கடிசந்தித்து அறிவுரை கேட்க்கும் வழக்கமுடையவன்போல்மாறினான்.
ஒருநாள் ஹிஜ்ரி 148 ரஜப்பிறை 15 அன்று அவன் திராட்சைப்பழத்தை ஒருதட்டில் கொண்டுவந்து அவர்களைத் அருந்தக்கேட்டுக்கொண்டான். அவர்கள் அதை ஒவ்வொன்றாக அருந்தினார்கள். அதன்பின் அவன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான். விஷம்வைத்து கொடுக்கப்பட்ட அந்தபழம் உள்ளே சென்றதும் தனது வேலையைசெய்ய ஆரம்பித்தது. தாம் நஞ்சூட்டப்பட்டதை அறிந்து, தமது முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து தமதுமகன் மூஸல்காளிமை அழைத்து அறிவுரைபகர்ந்தார்கள். தம்நண்பர்கள், மாணவர்களுக்கு நல்லுரைகள்நல்கி விடைபெற்றார்கள்.
அவர்கள் ஹஜ்செய்தபோது அணிந்த இஹ்ராம் துணிமற்றும் அவர்களிடமிருந்த இமாம் அலிறழியல்லாஹுஅன்ஹு அவர்களின் தலைப்பாகைத் துணியையும்கொண்டு அவர்களுக்கு கபனிட்டு ஜன்னத்துல்பகீஃயில் அவர்களின் தந்தையார், பாட்டனார் ஆகியவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம்செய்யப்பட்டார்கள்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments