பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு

July 5, 2015
இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போரில் கலந்து கொண்ட உத்தம ஸஹாபா பெருமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் நடைபெற்று வரும் நினைவு மஜ்லிஸ் இவ்வருடம் 04.07.2015 (சனிக்கிழமை) றமழான் பிறை 17ல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தறாவீஹ் தொழுகையின் பின் திருக் கொடியேற்றி வைக்கப்பட்டு மௌலிது ஸுஹதாயில் பத்ரிய்யீனும், ஸஹாபாக்களின் திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடும் நிகழ்வும் மஜ்லிஸ் நிகழ்வுகளில் நடைபெற்றது. அதன் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து துஆப் பிரார்த்தனையுடன் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.
வீரத்தியாகிகள் பத்ர் ஸஹாபாக்களின் அருள் வேண்டி சமுகமளித்த முஹிப்பீன்களுக்காக அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

You may also like

Leave a Comment