Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்துப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?

துப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?

மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
ஆம். துப்
(தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி 
வழங்கப்பட்டிருக்கின்றது.
துப் (தகறா)
இசைப்பது என்பது அருமை நாயகம் நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புண்ணிய காலம் தொட்டே இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். இதனை இஸ்லாமியப் பாரம்பரியச் செயல் என்றும் கூறலாம்.
பெருநாள் தினங்கள், நபீமார்கள் வலீமார்களின் நினைவு தினங்கள், திருமண வைபவங்களின் போது துப் (தகறா) இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஆகுமான விரும்பத்தக்க செயலாகும்.
எவர் ஒருவர் இவையெல்லாம் கூடாது, இப்படியெல்லாம் மார்க்கத்தில் கிடையாது என்று கூறுகின்றாரோ அவர் “நபீ மொழி அறியாத சில்லறைப் பயல்” என்று அவரைச் சுருக்கமாகக் கூறலாம்.

நாங்கள் இந்தக் கட்டுரையிலே துப் (தகறா) இசைப்பது ஆகுமென்பதற்கான ஒரு சில ஆதாரங்களை விரிவின்றி சுருக்கமாக எழுதுகிறோம்.
ஆதாரம்:-01

أَنَّ امْرَأَةً، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَذَرْتُ أَنْ أَضْرِبَ عَلَى رَأْسِكَ بِالدُّفِّ،
قَالَ: «أَوْفِي بِنَذْرِكِ» قَالَتْ: إِنِّي نَذَرْتُ أَنْ أَذْبَحَ بِمَكَانِ كَذَا
وَكَذَا، مَكَانٌ كَانَ يَذْبَحُ فِيهِ أَهْلُ الْجَاهِلِيَّةِ، قَالَ «لِصَنَمٍ»:
قَالَتْ: لَا، قَالَ: «لِوَثَنٍ»، قَالَتْ: لَا، قَالَ: «أَوْفِي بِنَذْرِكِ»
(سنن أبوداود- 3312)
ஒரு பெண்மணி
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களிடத்தில் வந்து அல்லாஹ்வுடைய ரஸூலே!
நீங்கள் 
யுத்தம் செய்வதற்காக பிரயாணம்
சென்றிருந்த சமயத்தில் நான் ஒரு நேர்ச்சை
செய்திருந்தேன். 
அது என்னவெனில் தாங்கள்
அந்தப்பிரயாணத்திலிருந்து எவ்வித
ஆபத்துக்களுமின்றி சுகமாக திரும்பினால் உங்கள்
முன்னிலையில் “துப்
(தஹறா)” இசைப்பது என்பதாகும்.
எனக் கூறினார்கள்.
அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்று” என நவின்றார்கள்.
துப் (தகரா) இசைப்பது கூடாது என்றிருந்தால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணிடம் “உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்று” அதாவது துப் (தகறா) இசை என்று கூறி இருக்க மாட்டார்கள். இந்த ஹதீதிலிருந்து துப் (தகறா) இசைப்பது ஆகுமான செயல் என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.
ஆதாரம் 02 :-

حَدَّثَنَا
خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ عَلَى
فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ
يَضْرِبْنَ بِالدُّفِّ، يَنْدُبْنَ مَنْ قُتِلَ
مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ، حَتَّى قَالَتْ جَارِيَةٌ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ
مَا فِي غَدٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «
لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي
مَا كُنْتِ تَقُولِينَ»
(صحيح البخاري – 4001)
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் றழியல்லாஹு
அன்ஹா
அவர்கள் ஹாலித் பின் தக்வான் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கூறினார்கள்.
எனக்கு திருமணம் நடந்த அன்று காலை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கு அருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்.
அப்போது சில
சிறுமிகள் பத்றுப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் பற்றிப் புகழ்ந்து துப்
(தகறா) இசைத்து இரங்கள் பாடல்களை
பாடிக்
கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமி
“எங்கள் மத்தியில் ஓர் இறைத்தூதர் இருக்கிறார்கள், அவர்கள் நாளை என்ன நடைபெறும் என்பதை அறிவார்கள்”
என்று பாடினாள்.
உடனே பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் இப்படிக் கூறுவதை விட்டு விட்டு ஏற்கனவே அவர்களை புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தது போல் சொல்லுங்கள் எனக் கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீதிலும் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துப் (தஹறா) இசைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
இந்த ஹதீதிலிருந்து புலப்படுகின்ற இன்னொரு விடயம் என்னவெனில் நபீ மார்கள், வலீமார்கள், நல்லடியார்களைப் புகழ்ந்து கவிதைகள் புனைந்து படிக்க முடியும் என்பதாகும்.
ஏனெனில் அச்சிறுமிகள் பத்றுப்போரில் கொல்லப்பட்ட ஸஹாபாக்களைப் பற்றியே பாடிக்கொண்டிருந்தார்கள். அதை பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கவுமில்லை, ஏன் இப்படி மௌத்தானவர்களைப் புகழ்ந்து கவிதைகள் படிக்கிறீர்கள் அதெல்லாம் கூடாது என்று விலக்கவுமில்லை. மாறாக அதற்கு அனுமதி அளித்து இருக்கிறார்கள். அவர்களும் அதை செவிமடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.
    
நாம் இன்று நபீமார்கள், வலீமார்கள், நல்லடியார்கள் மீது கவிதைகள் புனைந்து அதை மௌலித் என்ற வடிவில் பாடி வருவது இதனடிப்படையிலேயே ஆகும்.
சுன்னத் வல் ஜமாஅத் மக்களாகிய நாம் செய்யக்கூடிய எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதற்கு தக்க பூர்வமான ஆதாரங்கள் இன்றி அதை நாம் செய்வதுமில்லை. செய்யத்தூண்டுவதுமில்லை.
மௌலித் ஓதக்கூடாது என உளறும் வஹ்ஹாபிகளே! மேற்கூறப்பட்ட ஹதீதிற்கு உங்களது விடை என்ன? சொல்வீர்களா? அல்லது செல்வீர்களா?
சந்தேகம் நீக்கல்
மேற்கூறப்பட்ட ஹதீதில் “எங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் இருக்கிறார்கள் அவர்கள் நாளை என்ன நடை பெறும் என்பதை அறிவார்கள்.” என்று அங்கிருந்த ஒரு சிறுமி பாடியவுடன் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இப்படிச் சொல்வதை விட்டு விட்டு ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்தத்தை சொல்லுங்கள்.” என்று கூறியதிலிருந்து சில நபர்கள் நினைக்கலாம். பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை என்ன நடைபெறும் என்பதை அறியமாட்டார்கள். அதன் காரணத்தினால்தான் அச்சிறுமியை அப்படி சொல்லாதே என்று தடுத்தார்கள் என்று.
இப்படி எண்ணுவது முற்றிலும் அறியாமை ஆகும். ஏனெனில் எம் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைமுக ஞானம் கொடுக்கப் பட்டவர்கள். அவர்கள் நாளை நடைபெற 
இருப்பதையும் அறிவார்கள். நான்காயிரம் வருடங்களுக்கு முன்னால் நடைபெற்றதையும் அறிவார்கள். என்பதற்கு அல்குர்ஆனிலிருந்தும், அல் ஹதீஸிலிருந்தும் விடா மழையின் மழைத் துளிகள் போன்று ஆதாரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அவற்றில் ஒன்றை மட்டும் இவ்விடத்தில் நாங்கள் குறிப்பிடுகிறோம். அந்த ஆதாரம் ஒன்றே பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைமுக ஞானங்களை அறிவார்கள் என்பதற்கு சான்றாக போதுமானது என்றும் நாம் எண்ணுகிறோம்.
அதுவாகிறது………
இறைவன் திருமறையில்
وَلَا
تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي
عِلْمًا
سورة طه – 114))
நபீயே! உங்களிடத்தில்
குர்ஆன் வசனங்கள் பூரணமாக இறக்கப்படுவதற்கு
முன்னால் அந்த குர்ஆன்
வசனங்களைக் கொண்டு நீங்கள்
முந்தி விடாதீர்கள்.
(அதாவது மக்களுக்கு அந்த குர்ஆன் வசனங்களை
சொல்லி விடாதீர்கள்)
இந்த திருமறை வசனத்திலிருந்து நாம் விளங்குவது என்னவெனில் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு இறக்கப்பட
இருக்கின்ற அல்குர்ஆன் வசனங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அதை மக்களுக்கு சொல்ல முற்பட்ட போதே அல்லாஹ்ஹுத்தஆலா நபீயே அப்படி சொல்லி விடாதீர்கள். எல்லாம் நிர்ணயிக்கப்பட்டபடியே நடைபெற வேண்டும் என்று பெருமானாருக்கு அழகாகக் கூறுகிறான்.
அன்புக்குரியவர்களே!
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைமுக ஞானம் உள்ளவர்கள் என்பதற்கு இந்த அர்த்தமான ஆதாரம் ஒன்றே போதுமானது. இது அறிவுள்ள மக்களுக்கு மிகத் தெளிவாக விளங்கும். வன்முறைதான் வாழ்க்கை என்றுள்ளவர்களுக்கு ஒரு போதும் விளங்காது. இறைவன் விளங்கப் படுத்தவும் மாட்டான்.
கவனிக்க………
அப்படியாயின் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறுமியைப் பார்த்து “இப்படிச் சொல்வதை விட்டு விட்டு ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்ததை சொல்லுங்கள்” என்று சொன்னதின் அர்த்தம் என்ன?
அறிந்து கொள்ளுங்கள்!
அதன் அர்த்தம் என்னவெனில் “ஏய் சிறுமியே இது அவர்களைப் புகழும் நேரமாகும். அதனால் அவர்களைப் புகழுங்கள் என்னைப் பிறகு புகழ்ந்து கொள்ளலாம்” என்பதாகும்.
நபீ ஸல் அவர்களை ஹஸ்ஸான் பின் தாபித் ரழியல்லாஹு அன்ஹு, கஃப் பின் ஸுஹைர் ரழியல்லாஹு அன்ஹு, இன்னும் பிற ஸஹாபா பெருமக்கள் புகழ்ந்த பாடல்கள், புகழ்ந்த சந்தர்ப்பங்கள் அநேகமான ஹதீஸ் கிதாபுகளிலும், ஆதார பூர்வமான இஸ்லாமிய வரலாற்று அறபு நூல்களிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. விரிவையஞ்சி இவ்விடத்தில் நாம் அவற்றைக் கூறவில்லை.
ஆதாரம் 03 –
قال النّبيّ صلّى
الله عليه وسلّم
أَعْلِنُوا هَذَا النِّكَاحَ، وَاجْعَلُوهُ فِي
الْمَسَاجِدِ، وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ
 الترمذي – 1089))
நபீ ஸல் அவர்கள் கூறினார்கள்.
திருமணத்தை பகிரங்கப் படுத்துங்கள். இன்னும் அதை பள்ளிவாயலில்
வைத்துக் கொள்ளுங்கள், இன்னும்
திருமண நிகழ்வின் போது துப் (தகறா)வும் அடியுங்கள்.
துப்(தஹறா) இசைப்பது சம்பந்தமாக இமாம்களின் கூற்றுக்கள்

قال الإمام الغزالي رحمه الله تعالى :-  يباح ضرب الدفّ فى العرس والعيد وعند كل سرور

(الزوا جر جلد:-2 صفحة :- 291)
அறிவுக்கடல் மாமேதை இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
பெருநாள் தினங்கள்,
திருமண நாட்கள் மற்றும் மகிழ்ச்சியான ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் துப் (தகறா) இசைப்பது ஆகுமாக்கப்பட்ட காரியமாகும்.
قال الشيخ ابن حجر
الهيثمي من الشا فعيّة:- المعتمل من  مذهبنا
أنّه حلال بلا كراهة في عرس وختان

(ايضاح الد لالات فى
سماع الآلات
صفحة:- 55)
ஷாபிஈ மத்ஹபின் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜர் அல் ஹைதமீ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
திருமண நிகழ்வுகள், கத்னா நிகழ்வுகளின் போது  துப்
(தகறா) இசைப்பது ஆகுமாக்கப்பட்ட
காரியம்தான் எங்களுடைய மத்ஹபில்
வெறுக்கப்பட்ட காரியம் கிடையாது.
قال الشيخ عبد الغني النابلسي رحمه الله تعالى:- أمّا ضرب
الدفّ فقد جائت الرخصة في إباحته للفرح والسرور في ايام العيد والعرس والوليمة
والعقيقة وقد ثبت جواز ذالك بالنصّ
(ايضاح الد لالات فى
سماع الآلات
صفحة:- 66)
இமாம் அப்துல் கனீ நாபிலசீ றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
திருமண நாட்கள்,
பெருநாட்கள், வலீமா மற்றும் அகீகா கொடுக்கப்படும் நாட்களில் மகிழ்ச்சிக்காகப் துப் (தகறா) இசைப்பது ஆகுமாக்கப்பட்டதாகும். இது ஆகுமென்பதற்கான ஆதாரம் ஹதீதிலே இடம் பெற்றிருக்கின்றது.
இதுவரைக்கும் நாங்கள் கூறிய ஆதாரங்களிலிருந்து துப் (தகறா) இசைப்பது ஆகுமாக்கப்பட்ட காரியம் என்பதையும் அது இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட, விரும்பத்தக்க செயல் என்பதையும் மிக நன்றாக விளங்கி இருப்பீர்கள்.
எனவே அன்பினிய நெஞ்சங்களே!
உண்மையை அறிந்து கொள்ளுங்கள். பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள். சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள். அசத்தியத்தை தவிடு பொடியாக்க கை கோருங்கள். உங்கள் மீது அல்லாஹ் ஈருலகிலும் அவனது பேரருள் என்ற விடா மழையை கொட்டுவானாக!
ஆமின். யாரப்பல் ஆலமீன்.
சத்தியம் சத்தியமே! அது என்றும் நித்தியமே!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments