அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

March 7, 2015
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்


தொடர் – 03

அஸ்ஸெய்யிதஹ் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்
ஸெய்யிதுனா அபூபக்ர் சித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் அன்பு மகள், நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவிமார்களில்
வயது குறைந்தவர்களும், மிகப்பிறசித்தி பெற்றவர்களுமாகும்.

அஸ்ஸெய்யிதஹ் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களுக்கு 6 அல்லது 7 வயதாக இருக்கும் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவர்களைத்
திருமணம் செய்தார்கள். உம்மு அப்தில்லாஹ் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.
இவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள்.
இவர்கள் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
அருள் நிறைந்த முடிகளைத் தங்களிடம் பாதுகாத்து வைத்திருந்தார்கள். மாத்திரமன்றி அவற்றைக் கொண்டு மக்கள் அருள் பெற வேண்டுமென்பதற்காக,
பிரயோசனமடைய வேண்டுமென்பதற்காக அவற்றை அவர்கள் வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
عَنْ مَعْنِ بْنِ حُمَيْدٍ عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ
أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ شَعَرَاتٍ مِنْ شَعَرِ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ أَحْمَرُ مَصْبُوْغٌ.
தான் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் சென்றதாகவும், அவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
முடிகளில் சில முடிகளை வெளிப்படுத்திக் காட்டியதாகவும், அவை சாயமிடப்பட்ட சிவப்பு நிறமுடையதாக இருந்தாகவும் பழாலதுப்னு உபைத் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக மஃனுப்னு ஹுமைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
கூறுகிறார்கள்.
                                        அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ
                                              பாகம் – 18 இலக்கம் – 820
இந்த ஹதீதில் இடம் பெற்றுள்ள ஸெய்யிதுனா பழாலதுப்னு உபைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர் உட்பட பல யுத்தங்களில் அவர்களுடன் கலந்த கொண்டவர்கள். ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணித்தார்கள். இவர்கள் மரணித்த போது முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களே அவர்களின் ஜனாஸாவை சுமந்து சென்றார்கள். தனது மகன் அப்துல்லாஹ்வை அழைத்து
“மகனே! இவர்களை சுமப்பதில் எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இதன் பின் இவர்கள் போன்ற ஒருவரை நீங்கள் சுமக்கமாட்டீர்கள்.” என்று கூறினார்கள். இவர்கள் டமஸ்கஸில் மரணித்தார்கள்.
இத்தகைய அந்தஸதை பெற்ற ஓர் ஸஹாபிக்கு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடிகளை ஸெய்யித்துனா ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் வெளிப்படுத்திக்
காட்டினார்களென்றால் அது ஏன்? நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளின்
பறகத்தை அவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக. அருள் பெற்றவர்கள் ஸஹாபஹ் – தோழர்கள். அண்ணலின் திருமுடிகளின் சிறப்பை நன்கறிந்திருந்தார்கள். அவற்றைக் கொண்டு பயன் பெற்றார்கள்.
அல்லாஹ்வின் வாள் என்று வருணிக்கப்பட்ட ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள்
.

ஸெய்யிதுனா ஹாலித் இப்னு
வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் பல யுத்தங்களில் கலந்து கொண்ட ஓர்
ஸஹாபீ – தோழர். மக்கா வெற்றியின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் இருந்தவர்கள். இவர்களைப் பற்றி நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறும் போது
نِعْمَ
عَبْدُ اللهِ. هَذَا سَيْفٌ مِنْ سُيُوْفِ اللهِ.
“அல்லாஹ்வினுடைய அடியார்களில் இவர் நல்லவராகி விட்டார்.
இவர் அல்லாஹ்வினுடைய வாள்களில் ஒரு வாள்” என்று கூறினார்கள்.
இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகளை தங்களிடம்
பாதுகாத்தார்கள். அதைக் கொண்டு பிரயோசனம் பெற்றார்கள்.
அருள் நிறைந்த அந்த முடிகளை தாங்களட அணியும் தொப்பியில் வைத்து பாதுகாத்தார்கள்.
அந்த தொப்பியை அணிந்து சென்று, யுத்தங்களில் கலந்து
கொண்டு அருள் நிறைந்த அந்த முடிகளின் பறக்கத்தினால் அவற்றில் வெற்றியும் பெற்றார்கள்.
அப்துல் ஹமீத் இப்னு ஜஃபர்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது தந்தை கூறியதாக பின்வருமாறு கூறுகிறார்கள்.
“நாங்கள் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் உம்றா செய்தோம்.
அப்போது அவர்கள் தங்களின் திருமுடிகளைக் களைந்தார்கள். அங்கிருந்த மக்கள்
திருமுடிகளைப் பெற்றுக் கொள்வதற்காக போட்டி போட்டுக் கொண்டனர். நான் முந்திச்
சென்று, அவர்களின் முன் நெற்றி முடியை எடுத்துக் கொண்டேன். ஒரு தொப்பியை எடுத்து
தொப்பியின் முன் பகுதியில் அந்த முடிகளை வைத்தேன். நான் அந்த தொப்பியை அணிந்து
எந்த யுத்தத்தில் பங்கு பற்றினாலும் எனக்கு வெற்றியே கிடைத்தது.” என்று ஹாலித்
இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.
உஸ்துல் காபஹ் பீ மஃரிபதிஸ் ஸஹாபஹ்
பாகம் 02, பக்கம் 142
அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
அருள் நிறைந்த முடிகள் தனக்கு கிடைத்த வரலாறு பற்றியும், தான் யுத்தங்களில் வெற்றி
பெறுவதற்கு முக்கிய காரணியாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகளே காணப்பட்டன என்பது பற்றியும் ஸெய்யிதுனா
ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இங்கே
கூறிக்காட்டியுள்ளார்கள்.
யர்மூக் யுத்தத்தின்
போது அருள் நிறைந்த நபீ பெருமானின் அருள் நிறைந்த முடிகள் காணப்பட்ட தொப்பியை
தவறவிட்டார்கள் ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
கடுங் கவலையுற்றார்கள். மிகவும் பெறுமதி வாய்ந்த, விலைமதிக்க முடியாத ஒரு பொருளை
தவறவிட்ட ஓர் உணர்வைப் பெற்றார்கள். மிகத்
தீவிரமாக அதைத் தேட ஆரம்பித்தார்கள். தன்னுடனிருந்த ஸஹாபஹ் – தோழர்கள் கொண்டும்
அதைத் தேடச் செய்தார்கள். கடும் முயற்சியின் பின் ஸஹாபஹ் – தோழர்கள் அருள் நிறைந்த
அந்தத் தொப்பியினைப் பெற்றக் கொண்டார்கள். அது ஒரு கிழிந்த தொப்பியாக காணப்பட்டது.
இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டீர்கள்? சாதாரணமாக அவர்களைப் பேசினார்கள் ஸஹாபாக்கள்.
அந்தத் தெப்பியின் இரகசியம் பற்றி கூறிய போது அதனை ஏற்றுடிக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீத் இப்னு
ஜஃபர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது தந்தை கூறியதாகக் கூறுகின்றார்கள்.
ஹாலித் இப்னு வலீத்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் யர்மூக் யுத்தத்தின் போது தாங்கள் அணிந்திருந்த
தொப்பியைத் தவற விட்டு விட்டார்கள். அங்கிருந்தோரிடம் தனது தொப்பியைத்
தேடித்தாருங்கள் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் அந்தத் தொப்பியை பெற்றக்
கொள்ளவில்லை. கடும் முயற்சியின் பின் அந்தத் தொப்பியைப் பெற்றுக் கொண்டார்கள். அது
ஒரு கிழிந்த தொப்பியாகக் காணப்பட்டது. உடனிருந்தவர்கள் இது பற்றிக் கேட்டார்கள்.
அப்பொழுது அவர்கள் “நபீ ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
தங்களின் முடிகளைக் களைந்த போது மக்கள் விரைந்து சென்று, அவர்களின் முடிகளைப்
பெற்றுக் கொண்டார்கள். நான் அவர்களை முந்திச் சென்று, அவர்களின் நெற்றி முடிகளைப்
பெற்றுக் கொண்டேன். அவற்றை நான் இந்தத் தொப்பியில் வைத்திருக்கிறேன். அவற்றின்
பறக்கத்தினால் நான் எந்த யுத்தத்தில் கலந்து கொண்டாலும் எனக்கு வெற்றியே
கிடைத்தது.
அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ்
பக்கம் 330
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளுக்கு
ஸஹாபஹ் – தோழர்கள் வழங்கிய கண்ணியம் மிகவும் பெறுமதி
வாயந்ததாகும். ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்களின் இந்த செயல் எமக்கு பாரிய ஓர் முன் மாதிரியாகும்.
அஸ்ஸெய்யித் ஜுஃஷும் அல்ஹைர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் மரத்தின் கீழ்
பைஅத் செய்து கொண்ட ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர். மிஸ்ர் வெற்றியின் போது இவர்களும்
அதில் கலந்து கொண்டார்கள்.
இவர்கள் மீது அன்பு
கொண்ட ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
தாங்கள் பாவித்த, அருள் நிறைந்த சில பொருட்களை இவர்களுக்கு அன்பளிப்புச்
செய்தார்கள்.
بَايَعَ
تَحْتَ الشَّجَرَةِ. وَكَسَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَمِيْصَهُ وَنَعْلَيْهِ. وَأَعْطَاهُ مِنْ شَعَرِهِ.
மரத்தின் கீழ் இவர்கள் பைஅத் செய்து கொண்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் தங்களின் சேட்டையும், தங்களின் இரண்டு
பாதணிகளையும் இவர்களுக்கு அணிவித்தார்கள். தங்களின் முடியிலிருந்தும்
இவர்களுக்குக் கொடுத்தார்கள்.
அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ்
பக்கம் 190
உஸ்துல் காபஹ் பீ மஃரிபதிஸ்ஸஹாபஹ்
பாகம்
01, பக்கம் 540
அண்ணல் எம் பெருமான்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் தோழர்
ஜுஃஷும் அல்ஹைர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு தங்களின் சேட்,
பாதரட்சைகள், முடி போன்றவற்றை வழங்கியிருக்கிறார்கள் என்பது இதன் மூலம்
தெளிவாகின்றது.
ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் இவற்றை தனது தோழருக்கு ஏன் வழங்கினார்கள்?
பெறுமதியற்ற பெருட்களை வழங்கினார்களா? நிச்சயமாக இல்லை. அப்படியாயின் நிச்சயமாக
அவற்றில் பிரயோசனம் இருக்கிறது. நிச்சயமாக அவை மிகப் பெறுமதி வாய்ந்தவையாகும்.
காரணம் அவை அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புபட்டவையாகும். அவற்றில் எந்தவிதமான பிரயோசனமும்
இல்லையென்றால் அவற்றை எம் பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்கள் தனது தோழருக்கு வழங்கியிருக்கமாட்டார்கள்.
ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடிகளில் மாத்திரமல்ல, அவர்கள் அணிந்த
சேட்டில் அருளுண்டு, அவர்கள் அணிந்த பாதரட்சைகளில் அருளுண்டு என்பதை இதன் மூலம்
நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஏன்? அவர்களின் உடல் முழுக்க அருளாகும். அவர்கள் பாவித்த
அனைத்து பொருட்களும் அருள் நிறைந்தவையாகும். அருள் நபியல்லவா அவர்கள்.

தொடரும்….

You may also like

Leave a Comment