ஒன்றும், “சீறோ”வும் இரண்டாகுமா?

December 7, 2014

ஒன்றும் ஸைபரும் இரண்டாகுமா? என்று “ஸூபீ”களிடம் ஒரு கேள்வி உண்டு. அதாவது ஒன்று என்பது அல்லாஹ்வையும், “ஸைபா்” என்பது சிருட்டியையும் குறிக்கும்.

இதன் சுருக்கம் என்னவெனில் ஒன்று என்ற எண்னின் கீழ் ”ஸைபா்“ என்பதை எழுதிக் கூட்டினால் “ஒன்று” என்று முடிவு வருவது போல் ஒன்று என்ற அல்லாஹ்வையும் ”ஸைபா்” என்ற  சிருட்டியையும் சோ்த்தால்
-கூட்டினால் – ஒன்றேதான் வரும். அதாவது சிருட்டி என்பது இல்லை என்றும், அல்லாஹ்வின் “வுஜுத்”உள்ளமை மட்டுமே உள்ளது என்றும் முடிவு வரும். 

الكون كلّه ظلمة وإنما اناره وجود الحق فيه
சிருட்டி என்பது இருள். அதில் அல்லாஹ்வின்வுஜுத்உள்ளமை இருப்பதே அதைக் காட்டித் தருகின்றது.

وجود الحق فيه என்ற வசனத்திற்கு وجود الحق في صورته    
அந்த சிருட்டியின் உருவத்தில் – அமைப்பில் – அல்லாஹ் இருப்பதால்தான் அது தெரிகிறது என்று பொருள் கொள்ள வேண்டும் என்று “தக்ரீபுல் வுஸூல்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
 ظلمة– இருள்

என்ற சொல்லுக்கு عدم
“இல்லாதது”
என்று பொருள் கொண்டு பொருள் கொண்டு மேற்கண்ட வசனத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
இருள் என்பது “அதம்” இல்லாத ஒன்றாக இருப்பது போல் சிருட்டி என்பதும் இல்லாத ஒன்றேயாகும். இருளுக்கு “வுஜூத்” உள்ளமை இல்லாதிருப்பது போல் சிருட்டிக்கும் “வுஜூத்” இல்லை். அல்லாஹ்தான் மனிதனின்
“வஹ்மு” பேதமையில் சிருட்டியாக தோன்றுகின்றான். எதார்த்தத்தில் “கல்கு” சிருட்டி என்பதே இல்லை. அல்லாஹ் மட்டுமே உள்ளான்.
இக்கருத்தையே ஞானமகான் ஒருவா் பின்வரும் பாடல்கள் மூலம் கூறியுள்ளார்கள்.
إِِلَهِيْ الْخَلْقُ مِثْلُ حَبَابْ عََلاَ
مَاءً لَدَى اْلأَحْبَابْ
فَمَاءٌ فِى الْفَنَاءِ حَبَابْ وَحَالَ بَقَاهُ
يَااللهُ
இறைவா
! சிருட்டி என்பது நீரின் மேல் எழுந்து தோற்றும்குமுளிபோன்றது. அது குமுளியாக இருக்கும் நிலையிலும் அது நீர்தான். அதுகுமுளி வடிவம் இல்லாமற் போன பிறகும் அது நீா்தான்.
இந்தப் பாடலின் மூலம் (நீரானது குமுளி வடிவம்) பெற்று அதற்கு வேறான ஒன்றாகத் தோற்றுவது போல் அல்லாஹ்வின் “வுஜுத்” அதாவது அவனேதான் சிருட்டி வடிவில் தோற்றுகிறான். என்று கூறியுள்ளார்கள்.
இப்பாடலில் வந்துள்ள
”அலா” என்ற சொல்லை சென்ற காலத்தைக் காட்டும் வினைச் சொல்லாகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். அதை (ஐர்றுடைய ஹர்பாக ) கொள்ளக் கூடாது. எழுதும் போது “அலிப்” அமைப்பில் எழுத வேண்டுமேயன்றி “யே” அமைப்பில் எழுதலாகாது.
وأما كلمة علا من البيت فهي فعل ماض بمعنى
إرتفع, لا حرف جر, تكتب بصورة الألف هكذا على, لا بصورة الياء هكذا على
ஞான மகான் சொன்ன மேற்கண்ட வசனமும், ஞானக்கவிஞா் அவா்களின் மேற்கண்ட பாடலும் “வஹ்ததுல்வுஜுத்” என்ற இறை ஞானத்தை உணர்த்திக் கொண்டிருப்பது தெளிவான மனமுள்ளவா்களுக்குத் தெளிவானதாகும். மாசுபடிந்த மனமுள்ளவா்களுக்கு குப்ர் –
ஷிர்க் ஆனதாகும்.
இமாம் உமா் வலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களின் மேற்கண்ட பாடல் “ஹத்தாத் றாதிப்” நூலில் சோ்க்கப்படடுள்ளது.

“வஹ்ஹாபிஸம்” என்ற சுனாமி நம்நாட்டை தாக்குமுன் உலமாஉகளும்,
“தரீகா” வழி செல்லும் நல்லடியார்களும் பக்தி பரவசத்துடன் பாடி வந்த இப்பாடல் தற்போது பாடப்படுவதில்லை. வஹ்ஹாபிகள் ஒரு புறமிருந்தாலும் தம்மை “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாக்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் மார்க்க அறிஞா்கள் கூட இதை பாடுவதில்லை. கழுதைக்கு குங்குமம் மணப்பதில்லையாம்.

You may also like

Leave a Comment