Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா?

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா?

الفكرة المصباحية فى بيان الحكم الغزالية
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா?
தொகுப்பு :
மௌலவீ அல்ஹாஜ் A.
அப்துர் றஊப்
மிஸ்பாஹீ,பஹ்ஜீ
نَوِّرْ إِلهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ
كَمَا     نَوَّرْتَ قَلْبَ  إِمَامِ النَّاسِ غَزَّالِيْ
يَارَبِّ أَعْطِ لَـنَا عِلْـمًا وَفَـهْمًا
كَمَا    اَعْـطَيْتَ يَارَبَّـنَا لِلـشَّيْخِ غَـزَّالِيْ
மனிதர்களின் இமாம் கஸ்ஸாலீ அவர்களின் உள்ளத்தை ஒளிபெறச்
செய்தது போல் இவ்வேழைகளின் உள்ளத்தையும் ஒளிபெறச் செய்வாயாக!
அஷ்ஷெய்கு கஸ்ஸாலீ அவர்களுக்கு அறிவையும், விளக்கத்தையும் கொடுத்தது
போல் எங்களுக்கும் தருவாயாக!
அரசாங்க முஸ்லிம் பாடசாலைகள் தொடங்கு முன் ஆசிரியர்களும், மாணவர்களும் மிக பக்தியுடன்
பாடி வந்த காலைக் கீதமே மேற்கண்ட பாடல்.

இமாம் கஸ்ஸாலீ அவர்களைக் “காபிர்” என்று கூறும் கானக விலங்குகள் நாட்டிற்குள் புகுந்த
பிறகுதான் இப்பாடல் நிறுத்தப்பட்டது. இது நிறுத்தப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. எனினும்
பாடசாலை முஸ்லிம் ஆசிரியர்களும்,
மௌலவீ ஆசிரியர்களும் இதற்கு
ஒத்துழைப்பு வழங்கியதே வியப்பானதாகும்.
மீண்டும் இவ்வழக்கம் இலங்கை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் அனைத்திலும் நடைமுறைக்கு
வருமாயின் மிகச்சிறப்பாக இருக்கும். இதற்காக முஸ்லிம் ஊர்களில் உள்ள பள்ளிவாயல்கள், பாடசாலைகள், பொதுநல அமைப்புக்கள்
உரியவர்களுடன் தொடர்பு கொண்டு முயற்சித்தால் பலன் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.
حجة الإسلام محمد الغزّالي ووحدة الوجود
                
أيها العلماء المنكرون لوحدة الوجود والقائلون
بكفرها وكفرِ من صدَّقها واعتقَد بها، ما قولكم وما فتواكم عن الإمام المشهور حجة الإسلام
أبي حامد محمد الغزالي الطُّوْسِي رحمه الله؟ وما رأيكم عن المعاني  التي جاء بها في كتابه إحياء علوم الدين ( كما يأتي
تفصيل ذلك مع دلائل الصفحات والأجزاء) هل هو مرتد وخارج عن دين الإسلام أو لا؟ وهل
يجوز تعليم كتابه طلبةَ العلم أو لا؟ وهل يجوز التَرحُّم عليه أو الترَضِّ عنه إن سُمِع
اسمه؟ أو لا؟ وما قولكم عن العلماء والأئمة والأولياء الذين مَدَحُو كتابه هذا وأثنَوا
عليه وعليه؟ واستدلّوا به وعلّموه فى المدارس والكليات العربية.
                    وها أنا اُوجِّهكم إلى بعض العبارات التي
أتى بها الغزالي فى إحياء علوم الدين، وأكتبها مع صفحات الكتاب وأجزائه، فابحثوا قبل
الإفتاء – قبل وضع القلم بالإفتاء – بحثا عميقا مع مشاورة بعض العلماء الذين لهم دخلٌ
تام وعلم عميقٌ فى علم الباطن وعقائد الصوفية الصافية،
                أجيبوا بأجوبة صحيحة مناسبة من الكتاب والسنة
ومن أقوال العلماء والأئمة الذين يُعتَمَد على أقوالهم ويعمل بفتواهم،
شكر الله سعيكم وزاد علمكم وفهمكم
அறபுமொழிக் கேள்விக்கான
சுருக்கமான தமிழாக்கம்
இமாம் கஸ்ஸாலீ அவர்களும்
வஹ்ததுல் வுஜூத்ஞானமும்
                  “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கும் உலமாஉகளே! இந்த  ஞானம் “குப்ர்” என்றும், “ரித்தத்” மதமாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இதைச் சொன்னவன், சரிகண்டவன்,
நம்பினவன் அனைவரும் மதம் மாறியவர்கள்
என்றும் நீங்கள் நம்புகின்றீர்கள். சொல்லியும் வருகின்றீர்கள்.
இந் நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற தத்துவ ஞானியும், மார்க்க அறிஞரும், “ஸூபிஸ நூல்களை – குறிப்பாக
இஹ்யாஉ உலூமித்தீன் மிஷ்காதுல் அன்வார் முதலான ஞான
நூல்களை – எழுதியவரும், உலக அறிஞர்களால் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இஸ்லாமின் ஆதாரம் என்று அழைக்கப்பட்டவருமான அஷ்ஷெய்கு அல் ஆரிபுபில்லாஹ் முஹம்மத் கஸ்ஸாலீ அத் தூஸீ
“றஹிமஹுல்லாஹ்” அவர்கள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அவர்கள் பற்றி உங்களின் “பத்வா” மார்க்கத் தீர்ப்பு என்ன?
          அவர் தனது “இஹ்யா உலூமித்தீன்” என்ற நூலில் எழுதியுள்ள “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை தெளிவாகக் கூறும் பிரதான வசனங்களை உங்களின்
ஆய்வுக்காக இதில் எழுதியுள்ளேன். குறித்த ஞானம் “குப்ர்” என்றும், “ரித்தத்” என்றும் கூறுகின்ற நீங்கள் இந்த ஞானத்தை
தெளிவாகவும் உறுதியாகவும் கூறியுள்ள
இமாம் கஸ்ஸாலீ பற்றி என்ன சொல்வீர்கள்? காபிர், முர்தத் என்று சொல்வீர்களா?
இல்லையா?
       அவரின் குறித்த ஞான நூலை அறபுக்
கல்லூரிகளில் மார்க்க ஞானம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர், மாணவியர்களுக்கு கற்றுக்
கொடுக்கலாமா? இல்லையா?
                    அவரின் பெயர் சொல்லக் கேட்ட ஒருவர் “றஹிமஹுல்லாஹ்” என்றோ “றழியல்லாஹு அன்ஹு” என்றோ சொல்வது ஆகுமா? இல்லையா?
      அவரின் குறித்த நூலை புகழ்ந்தும்,
பாராட்டியும், சரிகண்டும், பிறருக்கு கற்றுக்
கொடுத்தும் வாழ்ந்து மறைந்த பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட இமாம்கள், உலமாஉகள் பற்றி நீங்கள்
என்ன சொல்வீர்கள்?
        இமாம் கஸ்ஸாலீ அவர்களின் வசனங்களை
பாகம், பக்கம் முதலான விபரங்களுடன்
இதில் குறிப்பிட்டுள்ளேன். “வஹ்ததுல் வுஜூத்”
ஞானத்தை மறுக்கும் உலமாஉகளான
நீங்கள், இந்த ஞானத்தில் ஆழமான அறிவுள்ளவர்களின் ஆலோசனையுடன்
கலந்துரையாடல் ஒன்று நடாத்தி ஆதாரங்களுடன் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தருமாறு அன்பாய்
கேட்டுக் கொள்கிறேன்.
فضيلة الأوراد وبيانُ
أن المواظبة عليها هي الطريق إلى الله تعالى،
               إعلم أن الناظرين بنور البصيرة علموا أنه
لا نَجَاة إلا فى لقاء الله تعالى، وأنَّه لا سبيلَ إلى اللقاء إلا بأَنْ يموتَ العبد
محبًّا لله تعالى وعارفا بالله سبحانه،
               وإن المحبة والاُنس لا تحصل إلا من دوام
ذكر المحبوب والمواظبةِ عليه، وأنَّ المعرفةَ به لا تحصل إلا بدوام الفكر فيه وفى صفاته
وأفعاله، (وليس فى الوجود سوى الله تعالى وأفعالِه) ولن يَتَيَسَّرَ دوامُ الذكر
والفكر إلا بوَدَاعِ الدنيا وشهواتها والإجتزاءِ منها بقدر البُلغة والضَّرُورة، وكل
ذلك لا يَتِمُّ إلا باستغراق أوقاتٍ فى وظائف الأذكار والأفكار،
(إحياء علوم الدين – الباب
الأول في فضيلة الأوراد وترتيبها وأحكامها)
                           
فسبحان من احتجب عن الظهور بشِدَّة ظهورِه،
واسْتَتَر عن الأبصار بإشراق نوره، ولولا احْتِجَابُه بسبعينَ حجابا من نوره لأَحْرَقَتْ
سُبْحَاتُ وجهِه أبصارَ المُلاحِظِين لجمال حضـرته، ولولا أن ظهورَه سببُ خَفائِه لبهت
العقول ودَهِشت القلوبُ وتخاذلت القوى وتنافرت الأعضاء، ولو ركبت القلوب من الحجارة
والحديد لأَصبَحَتْ تحت مبادِئِ أنوارِ تجلِّيه دكاًّ دكا، فَأَنَّى تُطِيق كُنْهَ
نورِ الشمسِ أبصارُ الخفافيش،
                      وسيأتي تحقيق هذه الإشارة فى كتاب المحبة،
ويتَّضِح أن محبة غيرِ الله تعالى قُصور وجهل، بل المُتَحَقِّق بالمعرفة لا يعرف غير
الله تعالى، (إذ ليس فى الوجود تحقيقا إلا الله وأفعاله)

(إحياء علوم الدين – كتاب آداب السماع والوجد)
                 لأن الحضرة الرُّبُوبية مُحيطةٌ بكُلِّ
الموجودات، (إذ ليس فى الوجود شيئ سوى الله تعالى وأفعالِه) ومـملكتُه وعبِـيدُه
من أفعاله، فما يتَجَلَّى من ذلك للقلب هي الجنة بِعَيْنِها عند قـوم، وهـــو سبب استحقاق
الجنة عند اهل الحق، ويكون سَعةُ مُلكه فى الجنة بحسب سَعةِ معرفةِ وبمِقدارِ ما تجلَّى
له من الله وصفاته وأفعاله،
(إحياء علوم الدين – كتاب
شرح عجائب القلب)
                 فالرتبة الأولى من التوحيد هي أن يقول الإنسان
بلسانه ”لا إله إلاّ الله“ وقلبه غافل عنه أو مُذَكِّرٌ له، كتوحيد المنافقين،
                   والثانية أن يُصَدِّق بمعنى اللفظ قلبُه
كما صدَّق به عمومُ المسلمين، وهو اعتقاد العوام،
                    والثالثة أن يُشاهِد ذلك بطريق الكشف بواسطة
نور الحق، وهو مقام المقرَّبِين، وذلك بأن يرى أشياء كثيرة، ولكن يراها على كثرتها
صادرةً عن الواحد القهار،
                       والرابعة “أن لا يرى فى الوجود
إلا واحدا”،
وهي مشاهدة الصِّدِّيْقِين وتُسمِّيه الصوفيةُ الفناءَ فى التوحيد،
لأنَّه من حيث لا يرى إلا واحدا فلا يرى نفسه أيضا، وإذا لم ير نفسَه لكونه مستغرقا
بالتوحيد كان فانيا عن نفسه فى توحيده بمعنى أنه فنى عن رؤية نفسه والخلق.
(إحياء علوم الدين – كتاب
التوحيد والتوكل)
                    فإنّ من عرف نفسه وعرف ربَّه عرف قَطْعًا
(أنه لا وجود له من ذاته، وإنما وجودُ ذاتِه ودوامُ وجودِه وكمالُ وجودِه من الله
وإلى الله وبالله)
فهو المخترع الموجد له، وهو المُبقِي له وهو المُكمِّل لوجودِه
بخَلْقِ صفاتِ الكمالِ وخلقِ الأسبابِ المُوصلة إليه ذو خلقِ الهداية إلى استعمال الأسباب،
(وإلا فالعبد من حيث ذاته لا وجودَ له من ذاته بل هو مَحوٌ محضٌ وعدمٌ صِرفٌ)
لولا فضل الله تعالى عليه بالإيجاد وهو هالك عقيب وجوده، لولا فضل الله عليه بالإبقاء
وهو ناقصٌ بعد الوجود، لولا فضل الله عليه بالتكميل لخِلقته. وبالجملة فليس فى الوجود
شيئ له بنفسه قِوامٌ إلا القيوم الحي الذي هو قائم لوجوده،والْمُدِيْمُ له إن عرفه
خالقا موجدا ومخترعا مبقيا
            وقيّوما بنفسه ومُقَوِّما
لغيره فإن كان لا يحبه فهو لجهله بنفسه وبربه، والمحبة ثمرة المعرفة فتنعدم بانعدامِها
وتَضعُف بضُعفها وتقوي بقوتها،
(إحياء علوم الدين -كتاب المحبة والشوق والأنس والرضا)
                  فإنّ كل كمال وجمال وبهاء وجلال ممكن فى
حق الإلهية، فهو حاضر وحاصل وواجب الحصول أبدا وأزلا، ولا يَتصوَّر تجدُّدُه ولا زواله،
فلا يكون له إلى غيره نظر من حيث إنه غيره بل نظره إلى ذاته وأفعاله فقط، (وليس
فى الوجود  إلا ذاتُه وأفعالُه
(

)إحياء علوم الدين – كتاب المحبة والشوق والأنس والرضا(
                   وإنّ الأرواح النبوية القدسية مُقْتَبَسةٌ
من الأرواح العُلُوِّيَّة اقْتِباسَ السِّراج من النور، وأنَّ العلويَّاتِ بعضَها مقتبسة
من البعض، وأن ترتيبها ترتيبُ مقامات، ثم ترقى جملتها إلى نور الأنوار ومعدَنها ومنبَعِها
الأول (وأنَّ ذلك هو الله تعالى وحده لا شريك له، وأن سائر الأنوار مستعارة وإنما
الحقيقي نوره فقط، وأن الكلَّ نوره، بل هو الكل، بل لا هُوِيَّة لغيره إلا بالمجاز
(
)مشكاة الأنوار، صفحة 280 للإمام الغزالي(
சங்கைமிகு “ஸுன்னத் வல் ஜமாஅத்”
உலமாஉகளே!
         ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் முஹம்மத் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற நூலில் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் எழுதியுள்ளார்.
          அவர் எழுதியுள்ள வசனங்களில் எந்த
ஒரு மாற்றமும் செய்யாமல் நூலின் பெயர்,
பக்கம், பாகம் முதலான விபரங்களுடன்
குறிப்பிட்டு, “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “குப்ர்” என்றும், “ரித்தத்” என்றும் கூறிவருகின்ற மகான்களிடம் கஸ்ஸாலீ அவர்களுக்கு
என்ன பத்வா? அவர் “முர்தத்” மதம் மாறியவரா? இல்லையா? என்று கேட்டுள்ளேன். அவர்களில் யார் பதில் தராவிட்டாலும்
இந்த ஞானம் பிழையென்று குரலெழுப்பிய அறிஞர் திலகம் ஸூபி இம்தாதீ அவர்களும், ஞானிகள் திலகம் பவ்சுர்
றஹீம் அவர்களும் பதில் தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
                   “வஹ்ததுல் வுஜூத்” இறையியலை – ஸூபிஸ ஞானத்தை – வஹ்ஹாபிகள் மறுப்பதும், குப்ர் – ரித்தத்
என்று சொல்வதும் எனக்கு வியப்பான ஒன்றல்ல. ஏனெனில் பாவற்காயில் இனிப்பை சுவைக்க முடியாது.
கழுதையில் குயிலோசையை கேட்க முடியாது.
       ஆயினும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழி செல்லும் உலமாஉகளிற் சிலர் இந்த ஞானத்தை
மறுப்பதும், இது “குப்ர்” “ரித்தத்” என்று சொல்வதுமே எனக்கு வியப்பாக உள்ளது.
          ஏனெனில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை என்பது இந்த ஞானத்தை உள்வாங்கிய ஒன்றேயாகும்.
ஒரு மனிதன் இக் கொள்கையை மறுத்துக் கொண்டு கத்தம், பாதிஹா, மௌலித் ஓதுவதும், கந்தூரி கொடுப்பதும்
மட்டும்தான் “ஸுன்னத் வல் ஜமாஅத்”
கொள்கை என்று நம்பினால் அவன்
“ஸுன்னத் வல் ஜமாஅத்”
கொள்கையை சரியாகப் புரியாதவனேதான்.
          எனவே, “ஸுன்னத் வல் ஜமாஅத்”
உலமாஉகள் என்போர் எப்போதும்
அவ்லியாஉகள் சென்ற வழியிற் செல்பவர்களாகவும், “தரீகா” கூறும் ஆன்மீக வழியிற் செல்பவர்களாகவும், “ஸூபிஸ” ஞானிகளின் இறையியல் தொடர்பான ஆழமான தத்துவங்களை
(விளங்கியோ விளங்காமலோ) ஏற்றுக் கொண்டவர்களாயும் இருக்க வேண்டும். ஞானிகளின் கருத்து
எதுவாயினும் அது “ஷரீஆ”வுக்கு எந்த வகையிலும் முரணாயிருக்கமாட்டாதென்றும்
அவ்வாறு சிலருக்கு தெரிவது அவர்களின் விளக்கத்தில் ஏற்படுகின்ற குழப்பமேயன்றி வேறொன்றுமில்லை
என்றும் நம்பிக் கொள்ள வேண்டும்.
          இந்த ஞானத்திலுள்ள (எந்த ஞானத்திலும்
இல்லாத) விஷேடம் என்னவெனில் இதை
விளங்க விரும்பும் ஒருவருக்கு (அவர் எத்துறையில் நிபுணராக இருந்தாலும் சரியே) இறைஞானத்துறையில்
ஆழமான, பரவலான அறிவுள்ள ஓர் “ஆரிபு” இறை ஞானியின் தொடர்பும், வழிகாட்டலும் அவசியம்.
مَنْ لَا لَهُ شَيْخٌ فَشَيْخُهُ الشَّيْطَانُ
“எவனுக்கு குரு இல்லையோ அவனின் குரு ஷெய்தான்”
என்ற முன்னோர்களின் கூற்று கருத்திற் கொள்ளப்பட வேண்டும். ஒரு ஞான குருவின் வழிகாட்டலின்றி
எத்தனை நூல்களை வாசித்தாலும் தெளிவு வராது.
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே!
உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்”
ஞானம் தெளிவில்லாமல் இருந்தால்
இந்த ஞானத்தில் தெளிவுள்ள ஓர் “ஆலிம்” மார்க்க அறிஞரின் உதவியுடன் இது தொடர்பாக இத்துறை
சார்ந்த அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களைப் படித்துப் பாருங்கள். அல்லது அவர்களைச் சந்தித்து
தொடர்ந்து பல நாட்கள் விளக்கம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள்
உள்ளங்களை விரிவாக்கி வைப்பானாக! ஒளிபெறச் செய்வானாக!
اللهم افتح قلوب
العلماء السنّيّين كما فتحتَ قلوب انبيائِك وأوليائِك، ونور قلوبَهم كما نوَّرت قلوبَ الأولياء الذين
خاضُوا في بحرِ وحدةِ
الوجود، وشَاهَدُوا في كل ذَرَّةٍ من ذرات
الكائنات نور الوجود،
وباتوا في مهد ربِّهم سالمين آمنين، اللهم بارك للعلماء السنِّيِّين في معيشَتِهم بركة واسعة، واحفظ
قلوبَهم من دخول
الغيرية والأنية والأنانية واجعل قلوبهم مَحَالَّ لنُزول الأسرار والأنوار، وصلى الله وسلم على سيدنا محمد وآله
وصحبه اجمعين.
عبارات الإمام الغزالي ووحدة الوجود
இமாம் கஸ்ஸாலீ அவர்களின் வசனங்களில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய வசனங்கள்
1 ) ليس فى الوجود
سوى الله تعالى وأفعالِه،
அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும்
தவிர வேறொன்று மில்லை. (எந்த ஒரு சிருஷ்டிக்கும் “வுஜூத்” இல்லை)
2) إذ ليس فى الوجود تحقيقا إلا الله وأفعالُه،
திட்டமாக அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும்
தவிர வேறொன்றுமில்லை.
3) لا وجود له من ذاته، وإنما
وجودُ ذاته ودوامُ وجوده وكمالُ وجوده من الله وإلى الله وبالله،
சிருஷ்டிக்கு சுயமான “வுஜூத்” இல்லை. அதன் “வுஜூத்” என்பதும், அது நிலைபெற்றிருத்தல் என்பதும்,
அதன் பூரணத்துவம் என்பதும் அல்லாஹ்வில் நின்றும்,
அல்லாஹ் அளவிலும், அல்லாஹ்வைக் கொண்டும்
உள்ளவையாகும்.
4) وإلا فالعبد من حيث ذاته لا وجودَ له من ذاته بل هو محوٌ محضٌ وعَدَمٌ
صِرْفٌ،
மனிதனின் உடலைப் பொறுத்து அதற்கு எந்த “வுஜூத்” இல்லை. எனினும் அது அறவே இல்லாத ஒன்றேயாகும்.
5) وليس فى الوجود إلا ذاتُه وأفعاله،
அல்லாஹ்வின் “தாத்”தையும், அவனின் செயல்களையும்
தவிர வேறொன்றுமே இல்லை.
6) وأنَّ ذلك هو الله تعالى وحده لا شريك له، وأن سائر الأنوار مستعارَةٌ،
وإنما الحقيقي نورُه فقط، وأن الكلَّ نورُه، بل هو الكلُّ، بل لا هُوِيَّةَ لغيره إلا
بالمجاز،

அந்த ஒளி இணையற்ற அல்லாஹ்தான். ஏனைய ஒளிகள் எல்லாம் அவ்வொளியின் இரவல் ஒளியே. எதார்த்தமான-
சுயமான – ஒளி அல்லாஹ்வின் ஒளி மட்டுமே. எல்லாம் அவனின் ஒளிதான். அவனே எல்லாம். மற்றவை
எதற்கும் “வுஜூத்” இல்லை.
இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற நூலில் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களை கூறியுள்ளார்கள். அவற்றில் ஆறு
இடங்களை மட்டும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
இவ் ஆறு இடங்களிலும் சொல்லப்பட்டுள்ள
சாரமும், வலியுறுத்தப்பட்டுள்ள கருத்தும் என்னவெனில் (அல்லாஹ்
தவிர வேறொன்றுமில்லை என்பதும், சிருட்டிக்கு சுயமான, “வுஜூத்;” இல்லை என்பதும், அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும்
தவிர வேறொன்றுமில்லை) என்பதுமேயாகும்.
குறிப்பாக இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் بل هو الكلُّ  “பல் ஹுவல் குல்லு” எல்லாம் அவனே என்று சொல்லியிருப்பது இங்கு கவனிக்கப்பட
வேண்டும்.
வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை ஏற்றுக் கொண்ட உலமாஉகளே!
        இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை தெளிவாகக்
கூறிய இமாம் ஆவார்கள். நானும், நீங்களும் மற்றும் உலகிலுள்ள அறிஞர்கள் அனைவரும்
(கர்னீகளையும், அவர்களின் வால்களையும் தவிர) அன்று முதல் இன்று
வரை அவரைப் பெரும் மார்க்க மேதையாக ஏற்று றஹிமஹுல்லாஹ் என்றும் சொல்லி வருகின்றோம்.
    இவர்கள் இந்த ஞானத்தைச் சொன்னதற்காக
இவர்களைக் “காபிர்” என்று குருட்டுக் கூட்டமொன்று கூறி வருகின்றது.
இவர்களுக்கு ஆதரவு வழங்கும் பாணியில் சகல உலமாஉகளும் சபைகளும் மௌனம் சாதிக்கின்றன.
    எனவே குறித்த ஞானத்தை ஏற்றுக் கொண்டு
“ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழியிற் செல்லும்
நாம் இது தொடர்பாக பகிரங்கப் பிரச்சாரத்தில் இறங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புப் பொது மக்களே!
       காட்டில் வாழ வேண்டிய வன விலங்குகளிற்
சில நாட்டிற்குள் நுழைந்து அட்டூழியம் செய்து கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், பெருமானாரின் தோழர்களான  ஸஹாபாக்களிற் பலரையும், இமாம்களையும் “ஸூபிஸ” மெய்ஞ்ஞானிகளையும், அவ்லியாஉகளையும் காபிர்கள்
என்று குறித்த விலங்குகள் கூறி வருகின்ற இக்கால கட்டத்தில் நீங்கள் அவர்களின் விஷமப் பிரச்சாரத்தில் ஏமாந்து வழி தவறி ஈமானை இழந்து
நாய், நரிகள் போல் செத்து நரகம் செல்லாமல் இருப்பதற்காக
இப்பிரசுரம் மூலம் எமது கடமையைச் செய்துள்ளோம்.
– அல்ஹம்துலில்லாஹ் –
حجة الإسلام محمد الغزّالي

وُلِدَ بِطُوْسْ – سنة خمسين وأربعمأة
– (450
)
طُوس – مدينة قديمة فى خُراسان بايران،
خرّبها المُغُول 1389
خراسان – منطقة قديمة فى آسيا، من مُدْنِها
نيسابور وهراة وبلغ ومرو
.
خراسان – إقليم فى شرق إيران

تُوفِّي بطوس سنة 505
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments